Thursday, August 18, 2016

ஜெபத்திற்குப் பதில்கள்





முன்னுரை

1. மனதின் வரைபடம்

ஜெபத்திற்குப் பதில்
- ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற நிச்சயம் (1-5)
தேவன் எப்போதும் நமது ஜெங்களுக்குப் பதிலளிக்கிறார் என்ற நிச்சயம் (1-2)
தேவன் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த பதிலை அளிக்கிறார் என்ற நிச்சயம் (3)
ஜெபத்தின் மீது வாஞ்சை (4, 5)
- நமது ஜெபங்களுக்கு உத்தரவு அளிக்கப்படுவதிலுள்ள தடைகள் (6)
- ஜெபத்திற்குத் துரிதமான உத்தரவுகள் கிடைப்பதின் இரகசியம் (7-10)
மோசேயின் ஜெபம் (7)
தேவனுடைய துரிதமான உத்தரவு (8)
வாக்குத் தத்தங்களான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் (10)
- பதிலளிக்கப்பட நீண்ட காலமாகும் ஜெபங்கள் (11)
- ஒருவர் தனது ஜெப ஜீவியத்தைப் பரிசீலனை செய்தல் (12)


2. நோக்கங்கள்
- தேவன் எப்போதும் நமது ஜெபங்களுக்கு மிகச் சிறந்த பதில்களையே கொடுக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வது.
- நமது ஜெபங்களுக்குப் பதிலளிக்கக் கூடாதபடி தடை செய்கிற இடையூறுகளை அடையாளம் காண்பது.
- தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக் கொண்டு ஜெபிப்ப்து.
- ஜெபத்திற்குப் பதில் கிகைடக்காத வேளைகளிலும் கூட விடா முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து ஜெபம் செய்வது.

3. துதி

4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலகெங்குமுள்ள ஊழியங்களுக்காக, உன்னுடைய தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக,
- உன்னுடைய குறிப்பிட்ட சபைக்காக
- உன்னுடைய சபையிலுள்ள குருமாருக்காக
- சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காக.

5. வீட்டுப் பாட பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப் பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும் முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.

1) தியான நேரம்
எலியாவின் பதிலளிக்கப்பட்ட ஜெபம். 1 இராஜாக்கள் 18:41-46
2) மனப்பாட வசனங்கள்
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
நீங்கள் என்னிலும், என் வார்த்கைள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி
4) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட பகுதி


6. முன்னுரை
‘எத்தனை தடவைகள் உன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்திருக்கிறது?’ இது போன்று உன்னிடம் கேட்கப்பட்டால், பதிலளிக்கப்பட்ட ஜெபத்திற்கு எத்தனை எடுத்துக்காட்டுகளைத் தன்னம்பிக்கையுடன் உறுதியாக எடுத்துக் கூற முடியும்? பெரும்பாலானோர் அடிக்கடி ஜெபம் செய்தாலும் கூடத் தங்கள் ஜெபங்களுக்கு பதில்களைப் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிக்கப்படும் என்று இயேசு திரும்பத் திரும்ப வேதாகமத்தில் வாக்குறுதியளித்திருக்கிறார். இந்த வாக்குறுதி பல தடவைகள் திரும்பக் கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மை இதை நாம் அலட்சியம் செய்ய முடியாது என்பதைத் தெரிவிக்கிறது. நாம் சரியான காரியங்களுக்காக ஜெபிக்கும்போது கூட நமது ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால், அது தேவனுடைய மகிமைக்குப் பங்கம் விளைவிக்கிறது என்பதாகும். எனவே, ஒரு ஜெபத்திற்குப் பதில் கிடைக்காவிட்டால், பிரச்சனை நமக்குள்ளேதான் இருக்கிறது என்று அர்த்தமாகும். தேவனுடைய வாக்குறுதிகள் வல்லமையற்றதல்ல. தேவன் நமது ஜெபங்களு;க்குப் பதிலளிக்கிறார். இருந்த போதிலும், நமக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டாலும் கூட, தேவன் சில நேரங்களில் நாம் கொடுக்க விரும்புவதையே நமக்குக் கொடுக்கிறார்.


7. முன்னுரையின் சுருக்கம்
- சில விசுவாசிகளின் ஜெபங்கள் பதிலளிக்கப்படாமலிருப்பது போல் காணப்படுகின்றன.
- நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காத போது, அது தேவனால் கூடாத காரியம் என்பதல்ல. மாறாக பிரச்சனை நம்மில் தான் இருக்கிறது என்று அர்த்தம்.

8. நுழைவு கேள்வி
ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில்கள் பற்றி சவாலாக இருக்கும் ஒரு வேத வசனத்தை உங்களில் யாராவது நினைவு படுத்தக் கூடுமா?

ஜெபத்தைக் குறித்த மிகப் பெரிய சவாலாக இருக்கும் வசனங்களில் ஒன்று, மத்தேயு 5ம் அதிகாரத்pல் உள்ளது. நாம் எல்லோரும் சேர்ந்து அதைக் கவனித்துப் பார்ப்போமாக.


மையப் பகுதி

(ஜெபத்திற்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற உறுதி)

1. மத்தேயு 7:7-11 வசனங்களை வாசித்து ஜெபம் கேட்கப்படுவதைப் பற்றி இயேசு விளக்கிக் கூறினார் என்பதைக் கண்டு பிடி. மத்தேயு 7:7-11ல் எத்தனை வசனங்களை நீ மனப்பாடமாக அறிந்திருக்கிறாய்?

(குறிப்பு)
பயிற்சி பெறுவாரின் மனதில் பதிய வைக்க வேண்டிய கேள்வியின் சிறப்பான நோக்கத்தைத் தலைவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். பயிற்சி பெறுவோர் கேள்வி 2ல் ஜெபங்களுக்கு எப்போதும் உத்தரவு கொடுக்கப்படும் எனப்தையும் கேள்வி 3ல் தேவன் எப்பொழுதும் எல்லாவற்றைக் காட்டிலும் மிகச் சிறந்த விடைகளையே கொடுக்கிறார் என்பதையும் இந்தப் பாடத்தில் கற்றுணர்ந்து தங்கள் உள்ளத்தில் விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

2. ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் நிச்சயத்தை நிலை நிறுத்த, எத்தனை வெவ்வேறான உவமானங்களை இயேசு உபயோகித்தார் என்பதை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் (வசனங்கள் 7-8)
- ‘அது உங்களுக்குக் கொடுக்கப்படும்’, ‘கண்டடைவீர்கள்’, ‘உங்களுக்குக் கதவு திறக்கப்படும்’ என்ற மூன்று வெவ்வேறு சொற்றொடர்களை உபயோகிப்பதின் மூலமாகத் தமது வாக்குறுதியின் நிச்சயத்தைக் கோடிட்டுக் காட்டுவது போல் வலியுறுத்திக் காண்பிக்கிறார்.

இவ்வாறு நம்முடன் பேசுவதில் தேவன் நமக்காக விரும்புவது என்ன?
- நான் நிச்சயமாக உனக்கு உத்தரவு கொடுப்பேன். ஆனால், நீ ஏன் ஜெபிக்காமல் இருக்கிறாய்?’ என்று கூறிக் கர்த்தராகிய இயேசு நமக்காகப் பரிதபிக்கிறது போலக் காணப்படுகிறது. ‘அது உனக்குக் கொடுக்கப்படும்’. ’நீ கண்டடைவாய்’, ‘உனக்காகக் காதவு திறக்கப்படும்’ ‘நிச்சயமாகவே‘ என்ற வார்த்தையைச் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.
‘கேளுங்கள்’, ‘தேடுங்கள்’, ‘தட்டுங்கள்’ என்பது மூன்று வகைகளான ஜெபம் என்று சுட்டிக் காட்டுவதாக யாராவது எப்போதாவது கற்பிக்கப்பட்டிருக்கிறார்களா?

இவ்வாறு கற்பிக்கப்பட்ட பயிற்சி பெறுவோர் இருந்தாலும் கூட, இந்தப் போதனையைக் குறித்து, இது ஒரு மறைபொருளான அர்த்தத்தைக் கொண்டது என்று கண்டனம் செய்வதோ அல்லது குறை கூறுவதோ கூடாது. ஆனால், இதற்குப் பதிலாக, இந்த வெவ்வேறான சொற்றொடர்கள் ஜெபத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது என்பதையும், நமது ஜெபங்களுக்கு நிச்சயமாகவே உத்தரவு கொடுக்கப்படும் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளப் பயிற்சி பெறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்.


(தேவன் நமக்கு மிகச் சிறந்த பதில்களைக் கொடுக்கிறார் என்ற உறுதி)

3. வசனங்கள் 9-11ல் தேவன் தம்மை உலகப் பிரகாரமான தகப்பனுக்கு ஒப்பிடுகிறார். இரண்டு உவமானங்களை உதாரணங்களாக உபயோகித்து தேவன் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தும் ஒரு வாக்குறுதி உள்ளது. அந்த வாக்குறுதி எது?

- தேவன் நிச்சயமாக நமக்கு ஒரு நல்ல உத்தரவு கொடுப்பார். இயேசு தமது பிதாவை உலகப்பிரகாரமான தகப்பனுக்கு ஒப்பிட்டுக் கற்களும், அப்பமும், பாம்பும் மீனும் இவை போன்ற சின்னங்களை உபயோகித்து விவரிக்கிறார்.

அப்பமும் மீனும், கல்லும் பாம்பும் எதைக் குறிக்கின்றன?
- அப்பமும் மீனும் நல்ல உத்தரவுகளையும், கல்லும் பாம்பும் தீமையான அல்லது கெட்ட உத்தரவுகளையும குறிக்கின்றன.
உன்னுடைய ஜெபங்களுக்கான உத்தரவுகள் கல்லாக இல்லாமல் அப்பமாக இருக்கும் என்ற திட நம்பிக்கை உனக்குள்ளதா? உனக்குக் கிடைக்கும் உத்தரவுகள் பாம்பாக இல்லாமல் மீனாக இருக்கும் என்று விசுவாசிக்கிறாயா?

தேவன் ஏன் தம்மை ஒரு உலகப் பிரகாரமான தகப்பனுடன் ஒப்பிடுகிறார்?
- குறைபாடுகளுள்ள, நேர்மையற்ற, உலகப் பிரகாரமான பிதாக்களும் கூடத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது நமது தேவன், அளவற்ற அன்புள்ளவரும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமாகிய நமது பரலோக தந்தையும் நமக்கு நன்மையானவவைகளைத் தந்தருள மாட்டாரா? இந்தச் செய்தியை அறிவிக்கவே இவ்வாறு ஒப்பிட்டுப் பேசினார்.
4. இத்தனை நிச்சயமான வாக்குறுதிகள் இருந்த போதிலும் நமக்குத் தேவன் பேரில் சந்தேகம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வாக்குறுதி பற்றி உன் உள்ளத்தில் நீ எவ்வாறு உணருகிறாய்?
- நீ வாக்குக் கொடுத்திருந்த போதிலும், உன்னுடைய வாக்குறுதியைப் பலமுறை திரும்பத் திரும்பக் கூறியிருந்த போதிலும், உன்னுடைய பிள்ளைகள் உன் வாக்குறுதியில் சந்தேகப்பட்டுத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார்களானால் நீ உன் உள்ளத்தில் எவ்வாறு உணருவாய்?

சீஷத்துப் பயிற்சியும் கல் அல்ல,, அப்பம் என்று நீ நம்புகிறாயா?


5. வசனம் 11ல் உள்ள வாக்குறுதியை எவ்வித தயக்கமுமின்றி நீ ஏற்றுக் கொண்டிருந்தால், நீ தேவனிடம் ஓடிச்சென்று உன் இருதயத்திலுள்ள எல்லாவற்றையும் அவருக்கு முன்பாக இறக்கி வைத்துவிட வேண்டுமென்ற உந்துதலை நீ உணர வேண்டும். இப்படிப்பட்ட தூண்டுதல் எந்த அளவுக்கு உன் உள்ளத்தில் எழுவதை நீ உணர்கிறாய்?

தேவன் நிச்யமாக உன் ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார் என்ற உண்மையையும், அவருடைய உத்தரவுகள் எப்போதும் நன்மையும் மிகச் சிறந்தவைகளாகவும் இருக்கும் என்பதையும் நீ ஒப்புக் கொள்ளுகிறாயா?
- அப்படி ஒப்புக் கொள்வாயானால் இப்பொழுது, உடனே ஜெபிக்க வேண்டும் என்ற ஏவுதலை நீ உணரவில்லையா?

(நமது ஜெபங்களுக்கு உத்தரவு அளிக்கப்படுவதிலுள்ள தடைகள்)

6. பின்வரும் பகுதிகளை ஆiராய்ந்து பார்த்து ஜெபங்கள் கேட்கப்படுவதைத் தடுக்கும் தடைகள் எவை என்று கண்டு பிடி.

ஏசாயா 1:15
- ‘இரத்தத்தினால் நிறைந்த கைகள்’ - இது மற்றவர்களைக் காயப்படுத்தும் பாவங்கள்
நாம் பாவம் செய்யும் போது தேவன் ஏன் நம் ஜெபங்களைக் கேட்பதில்லை?
- நாம் மற்றவர்களுக்குத் தீங்கு செய்திருக்கும்போது, ‘தயவு செய்து என்னைக் காப்பாற்றும்’ என்று தேவனை நோக்கி நாம் செய்யும் ஜெபத்திற்குத் தேவன் செவி கொடுப்பாரா?

(குறிப்பு)
ஒரு பகுதியின் அர்த்தத்தை விளக்கிக் கூறுவது முக்கியமான போதிலும் அந்த அர்த்தத்தைக் கொண்டு நோக்கும் போது நமது ஜீவியம் எப்படி இருக்கிறது என்று பரிசோதித்துப் பார்ப்பது அதிக முக்கியம். எனவே, உதாரணமாக, ‘இரத்தத்தினால் நிறைந்த கைகள்’ என்பதின் அர்த்தத்தை நுணுக்கமாக அறிவதில் இழுப்புண்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். ‘இரத்ததினால் நிறைந்த கைகள்’ என்பது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களைக் குறிக்கிறது என்ற உண்மையே முக்கியமானது. இந்த மாதிரியான விளக்கம் கூறுவதே போதுமானது.

மத்தேயு 6:14-15
- மற்றவர்களை மன்னிக்கத் தவறுதல் (மன்னியாதிருத்தல்)
யாக்கோபு 1:6-7 (மத்தேயு 11:24ஐயும் பார்க்கவும்)
- சந்தேகம்: தேவன் நமது ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார் என்ற உண்மையை சந்தேகித்தல்.
யாக்கோபு 4:3
- நமக்குக் கிடைப்பதை நமது மாமிச இச்சைகளை நிறைவேற்றும்படி தவறான உள்ளெண்ணங்களுடன் கேட்பது
சுகபோகம் (மற்ற மொழிபெயர்ப்பில் கூறப்படும் ஆசை அல்லது இச்சை) என்றால் இங்கு என்ன பொருள்படும்?

1 யோவான் 2:16ல் கூறியுள்ளது போல், பாவமுள்ள மனிதனின் மாம்ச இச்சை, கண்களின் இச்சை, தனக்குள்ளவைகள் மற்றும் தான் என்ன செய்திருக்கிறான் என்பது பற்றிப் பெருமையாகப் பேசுதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. (ஜீவனத்தின் பெருமை) 1 யோவான் 2:16

நாம் தவறான உள்ளெண்ணங்களுடன் ஜெபிக்கிறோமா இல்லையா என்பதை நாம் எவ்வாறு பகுத்தறியலாம்?
- உதாரணமாக, நம்முடைய ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். வேறு வார்த்கைகளில் இதைக் கூறுவோமானால், நம்முடைய ஜெபங்களின் நோக்கம் என்ன உத்தரவு அளிக்கப்படும் ஜெபங்களின் மூலமாக நாம் என்ன பெற்றுக் கொள்ள அல்லது சாதிக்க விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நமது நோக்கம் தேவனுடைய மகிமைக்கு முதலிடம் கொடுக்காவிட்டால், நாம் தவறான உள்ளெண்ணத்துடன் ஜெபிக்கிறவர்களாக இருப்போம். நமது பிள்ளைகளுக்காக நாம் ஜெபிப்பதும் இது போன்றதுதான். நமது பள்ளியில் பிள்ளைகள் எல்லாவற்றிலும் நன்றாகச் செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறோமா? அவர்கள் அதைப் போலவே பள்ளியில் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருந்தால் அதன் பின்பு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் என்றும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் தவறான உள்ளெண்ணங்களுடன் ஜெபிக்கிறோமா என்பதைப் பகுத்தறிந்து கொள்வதற்கு இக்கேள்வியின் விடை நமக்கு உதவி செய்யும்.
நாம் இப்போது விவாதித்து, அறிந்து கொண்ட மேற்கூறிய தடைகளில், உன்னுடைய ஜெபங்களுக்கு உத்தரவு பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பது எதுவென்று நீ எண்ணுகிறாய்?


(குறிப்பு)
7வது கேள்விக்குப் போகுமுன்பாகப் பின்வரும் கேள்விகளைக் கேட்பது தலைவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.

மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தடைகளைத் தவிர வேறு தடைகள் இருக்கின்றனவா?
- விவாக சம்பந்தமான பிரச்சனை, உடன் பிறந்தோருக்கிடையே சண்டை இது போன்று பயிற்சி பெறுவோர் கூறும் பலவகையான தடைகளையும் கவனமாகக் கேட்க வேண்டும்.
நமது ஜெபங்களுக்கு உத்தரவு கிடைப்பதைத் தடை செய்யும் சிலவற்றைப் பற்றி இப்போது விவாதித்தோம். அப்படியென்றால், நமது ஜெபங்தகளுக்குத் துரிதமான அல்லது உடடினயான உத்தரவு கிடைப்பதற்கு உதவியாக இரக்கக்கூடிய சில காரியங்கள் யாவை?

- தடைகளை, அவற்றுக்கு முற்றிலும் எதிராகக் திசை திருப்புதல் நமது ஜெபங்களுக்குத் துரிதமான உத்தரவு கிடைக்கும் படியான திறவுகோலாக இருக்கக் கூடும். அதன் பின்பு 7வது கேள்விக்கு நேராகச் செல்லலாம்.

(ஜெபத்திற்குத் துரிதமான உத்தரவு கிடைப்பதின் இரகசியம்: தேவனுடைய வாக்குத் தத்தங்களில் நம்பிக்கை வைக்கும் ஜெபம்)


7. நமது ஜெபங்களுக்குத் துரிதமான உத்தரவு பெற்றுக் கொள்ளம் வழியை மோசே நமக்குக் கற்றுக் கொடுத்தான். முதலாவது, யாத்திராகமம் 32:7-8ஐ வாசிக்கவும். தேவன் ஏன் கோபமாயிருந்தார்? பின்பு வசனங்கள் 11-13 வரை வாசித்து இஸ்ரவேலரின் சார்பாக மோசே செய்த ஊக்கமான வேண்டுதலை ஆராய்ந்து பாருங்கள்.

பாவம் செய்திருந்த இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனை நோக்கி ஜெபித்தான். விசேஷமாக 13ம் வசனத்தில் ஆபிரகாம் ஈசாக்கு, யாக்கோபுக்கு தேவன் கொடுத்திருந்த வாக்குறுதியை (தேசமும், சந்ததியாரும்) நினைவு படுத்தில் இஸ்ரவேல் புத்திரரை மன்னிக்கும்படி கெஞ்சிப் பிரார்த்தித்தான். இந்த வேத பகுதியின் பின்னணி (இதற்குக் காரணமாக இருந்தது) என்ன?

- சீனாய் மலையில் 40 நாள் தேவன் மோசேயுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆரோனுடன் சேர்ந்து இஸ்ரவேல் புத்திரர் ஒரு பொன் கன்றுக் குட்டியை வார்ப்பித்து அதைப் பணிந்து கொண்டார்கள். அவர்கள் செய்ததற்காக இஸ்ரவேல் புத்திரர் பேரில் தேவன் கோபங்கொண்டபோது, தேவன், தாம் அவர்களை அழிக்கப் போவதாகக் கூறினார். அப்போது மோசே இஸ்ரவேலருக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணினான்.
8. அடுத்தாற் போல், எவ்வளவு சீக்கிரமாக தேவன் அந்த ஜெபத்திற்கு பதிலளித்தார் என்பதை நன்கு கவனித்துப் பார் (வச.14)

- தேவன் மனமிரங்கி மோசேயின் ஜெபத்தை உடனே ஏற்றுக் கொண்டு தமது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தீங்கு செய்யவில்லை.
வசனங்கள் 13, 14-க்கிடையே எவ்வளவு நேரம் கடந்து போயிருக்கும் என்று நீ எண்ணுகிறாய்?

இந்த வசனங்களுக்கிடையே நேரம் கடந்து போனதைக் காண்பிக்க எந்த அறிகுறியும் இல்லை என்பதை கவனிக்கும்போது, உத்தரவு உடனே கொடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

9. தேவன், தன் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மோசே பற்றிப் பிடித்துக் கொண்டு விண்ணப்பித்ததால் அவனுடைய ஜெபத்திற்கு உடனே பதில் கிடைக்கப் பெற்றான். ‘உம்மைக் கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே’ (வசனம் 13) என்றான். நாம் தேவனுடைய வாக்குறுதிகளைப் பற்றிக் கொண்டு உறுதியுடன் ஜெபிக்கும் போது, தேவன் ஏன் சீக்கிரமாக நமது ஜெபங்களுக்கு உத்தரவு கொடுக்கிறார்?

- ஏனென்றால் தேவன் உண்மையுள்ளவர். தம்முடைய வாக்குத் தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுகிறவர்.
எந்தொந்த சந்தர்ப்பங்களில் தங்கள் பிள்ளைகள் உரிமையோடு கேட்பவை சிறிது அதிகமாக இருந்த போதிலும், பெற்றோர் பிள்ளைகள் கேட்டுக் கொள்வதையே செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?

- இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருந்த போதிலும் அதில் ஒன்று, முன்பு பெற்றோர் செய்த வாக்குறுதியை நினைவு கூர்ந்து பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொள்வதாகும். மோசேயும் கூட தேவன் கொடுத்திருந்த வாக்குத் தத்தத்தை நினைவு கூர்ந்து அதை உறுதியுடன் பற்றிக் கொண்டு ஜெபித்தான். அதாவது, ‘தேவனே நீர் கடந்த காலத்தில் ஆபிரகாமுக்கு வாக்குத் தத்தம் செய்திருந்தீர். நீர் கொடுத்த அந்த வாக்கைக் காப்பாற்றி நிறைவேற்ற வேண்டும் என்று மோசே தேவனிடம் கூறினான். நாம் தேவனுடைய உண்மையை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்கும்போது, தேவன் நமது ஜெபத்தைக் கேட்டும் அசைக்கப்படாமல், அதாவது நம் மீது பரிதபிக்காமல் இருக்க முடியுமா?
10. தேவனுடைய உத்தரவைப் பெற்றுக் கொள்ளும்படியாக, அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு எவ்வளவு அடிக்கடி, நீ ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக் செல்வாய்?
நீ பற்றிப் பிடித்துக் கொண்ட தேவனுடைய வாக்குத் தத்தங்களுக்கு ஒரு உதாரணமும், நீ பெற்றுக் கொண்ட பதிலையும் பற்றிக் கூறு.

பயி;ற்சி பெறுவோர் தங்களுடைய ஜெபங்கில் உபயோகிக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்யவும்.

நாம் ஜெபிக்கும் போது தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கு நமக்குத் தேவையானவை எவை?
- முதலாவது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் நன்கு அறிந்திருப்பது மிகவும் அவசியம். அதற்காக, நாம் வேதாகமத்தை வாசித்து தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வது அவசியம்.
- இரண்டாவதாக, நாம் வாசிப்பதையும், ஜெபிக்கும் போது தேவனுடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு)
பயிற்சி பெறுவோர் தாங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டு சார்ந்திருக்க விரும்பும் வேதாகம வாக்குத் தத்தங்களின் வசனங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வேதாகமத்திலோ அல்லது தங்களுக்கு அருகிலோ வைக்கும்படி அவர்களுக்கு யோசனை கூறுவது மிகவும் நல்லது. இத்தகைய பழக்கம் அவர்கள் வாக்குத்தத்தமான வார்த்தைகளை நினைவு கூரவும், அவற்றில் நம்பிக்கை வைத்துத் தங்கள் வாழ்க்கையில் உபயோகிக்கவும் உதவியாக இருக்கும்.


(பதில் கிடைப்பதற்கு நீண்ட காலமாகும் ஜெபம்)

11. ஜெபத்துக்கான பதில் எப்போதும் ஒரே நாளில் கிடைத்து விடாது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே பதில் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை. இருந்த போதிலும் நாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபிக்கத் தக்கதாகவும், பொதுவான ஒரு கால வரைக்குள் நம்முடைய ஜெபம் கேட்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ஜெபித்த பின்பு, உன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்த அனுபவத்தை விளக்கமாகக் கூறு.

ஆதியாகமம் 28:20-33ல் யாக்கோபு செய்த ஜெபத்திற்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்பு தான் பதில் கிடைத்தது. (ஆதியாகமம் 31:13)

நீண்ட காலமாக ஜெபித்த பின்னரே, பதில்களைப் பெற்றுக்கொண்ட அனுபவங்களையுடைய பயிற்சி பெறுவோர் இருக்கலாம். ஆனால், நீண்ட காலமாகவே தாங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பவற்றுக்கு பதில் கிடைக்கும்படி இன்னமும் காத்துக் கொண்டிருக்கிற பயிற்சி பெறுவோரும் இருக்கலாம். எனவே, தங்கள் ஜெபங்களில் விடா முயற்சியுடன் பதிலுக்காக காத்துக் கொண்டு தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பவர்களுக்காக யாவரும் ஒன்று சேர்ந்து ஜெபிப்பது அவசியமாக இருக்கிறது.

தேவன் சில நேரங்களில் நீண்ட காலம் கடந்து சென்ற பின்னரே நமது ஜெபங்களுக்கு உத்தரவு அருளிச் செய்கிறார் இது ஏன்?
- நமது வாழ்க்கையின் சரியான நேரத்தில் நமக்கு உத்தரவு அருளும்படி, நம்மைப் பழக்கப்படுத்திப் பயிற்சியளிக்க, உத்தரவை ஏற்றுக் கொள்ளும்படி நம்மை ஆயத்தப்படுத்த  இது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
உன்னுடைய ஜெபத்திற்குப் பதிலளிக்க தேவன் தெரிந்து கொள்ளும் நேரமே உனக்கு ஏற்ற மிகச் சிறந்த நேரம் என்பதை நீ ஒப்புக் கொள்ளுகிறாயா?

- தேவனுடைய பதில்கள் நமக்கு மிகவும் சிறப்பானவைகள் என்பதை மட்டுமல்ல, அவர் தெரிந்து கொள்ளும் நேரமும் சிறப்பானது என்பதையும் பயிற்சி பெறுவோர் எற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நீண்ட காலமாக நீ ஜெபித்துக் கொண்டிருந்தும் இன்னமும் பதில் கிடைக்காமலிருக்கும் ஜெபம் இருக்கிறதா? அப்படி ஒரு ஜெபம் இருக்குமானால், அதை உன்னுடைய குழுவினரோடு நீ பகிர்ந்து கொள்ள முடியுமா?


(குறிப்பு)
11வது கேள்வி மிக முக்கியமானது. ஏனென்றால், இது பயிற்சி பெறுவோருக்குத் தங்கள் வாழ்க்கையில் வேதனையான சூழ்நிலைகள் இருக்குமானால், அவைகளைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்காக ஒருவர் மன்றாடி ஜெபிக்கக் கூடிய நேரமாக இருக்கிறது. ஆகையால், தலைவர்கள் 11வது கேள்விக்குப் போதுமான நேரத்தை அனுமதித்துப் பயிற்சி பெறுவோர் நம்பிக்கையை விட்டு விடாமல், விடா முயற்சியுடன் தொடர்ந்து ஜெபிக்கும்படி அவர்களைப் பெலப்படுத்த வேண்டும்.


(ஒருவரது ஜெப ஜீவியத்தைப் பரிசோதனை செய்தல்)

உன்னுடைய ஜெப ஜீவியத்தைக் குழுவிலுள்ள மற்றவர்களின் ஜெப ஜீவியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, உன்னுடைய ஜெப ஜீவியத்திலுள்ள எந்த அம்சமும் (தன்மையும்) மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறதா என்று பார்.

- பாடம் 5, பாடம் 6 ஆகிய இரண்டு பாடங்களில் ஜெபத்தைப் பற்றிப் படித்ததை இந்தப் பாடம் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதினால், பயிற்சி பெறுவாருடன் தலைவரும் சேர்ந்து, ‘ஜெப பரிசீலனைப் பட்டியல்’ தயாரிப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம். பின் வருவது ஒரு பரிசீலனைப் பட்டியலின் மாதிரியாக இருக்கிறது.

1. நீ திட்டவட்டமாக ஜெபிக்கிறாயா?
2. உன்னுடைய ஜெபத்தில் நீ தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஜெபிக்கிறாயா?
3. சரியான நோக்கங்களுடன் ஜெபிக்கிறாயா?
4. உன்னுடைய ஜெபத்தில் தெளிவாக சரியானவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறாயா?
5. நீ காலந் தவறாமல் ஒழுங்காக ஜெபிக்கிறாயா?
6. நீ ‘உன் அறை வீட்டில்’ இரகசியமாக ஜெபிக்கப் பழகுகிறாயா?
7. உன்னுடைய ஜெபத்தில் தெளிவின்றி வீண் வார்த்தைகளை அலப்பும் குற்ற உணர்ச்சி உனக்கிருக்கிறதா?


முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தைச் சுருக்கமாக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்;து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செய்லபடுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்;து கொள்ள வேண்டும்,.

4. முடிவில் துதி செலுத்துதல்.



5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டி, தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையிம் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்.

6. வீட்டுப் பாடப் பயிற்சி
வழிகாட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டுப் பாடப் பயிற்சிகள் யாவும் உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு தலைவரின் குறிக்கோள்கள் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலை குழுவிலுள்ள பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தக்கதாக வீட்டுப்பாட பயிற்சியின் அளவை நிர்ணயிக்கலாம். ஒவ்வொருவரின் ஆற்றல் திறன் குடும்ப சூழ்நிலை ஆகியவை வேறுபட்டவையாக இருக்கும். விவேகமுள்ள தலைவர் தமது அறிவாற்றலை உபயோகித்து வீட்டுப்பாட பய்றிசியின் அளவைத் திட்டம் பண்ணலாம்.

அ) தினசரி வாழ்க்கையின் வீட்டுப்பாடப் பயிற்சி
தினசரி வாழ்க்கையின் பயிற்சியானது பயிற்சி பெறுவோர் தாங்கள் கற்ற உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த உதவி செய்யும் படி ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே இருக்கிறது. தலைவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட பயிற்சி ஒவ்வொரு பாடத்தின் மையமான கருத்தை மனதில் கொண்டு தெளிவாக முறைப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு தலைவரும் தமது சிறிய குழுவின் தனிப்பட்ட சூழ்நிலைகள் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு வீட்டுப்பாட பயிற்சியையும் கொடுக்கலாம். வீட்டுப்பாட பயிற்சியானது ஒவ்வொது பாடத்தின் கருப்பொருளையும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆ) வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட வேலை.
வாசிப்புக்கான பகுதிகளைக் கொடுக்கும் போது தலைவர்கள் 3 விதிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாசிக்கும் படியாகப் பயிற்சி கொடுப்பது வழிகாட்டியிலுள்ள பாடங்களை முழுமையாகக் கற்றுக் கொளவ்தற்குக் கூடுதலான ஒரு கருவி மட்டுமே. வழிகாட்டியிலுள்ள பாடல்களை விவரித்துக் கூறும் போது போதுமான அளவு சொல்லாமல் விட்டுவிடும் தவறைத் தலைவர்கள் செய்யக் கூடாது. முக்கியமாகப் பாடத்திற்குப் பதிலாக வாசிப்புப் பயிற்சியைக் கொடுத்து விடலாமே எனும் ஒரு சோதனையான எண்ணம் பல தலைவர்களுக்கு ஏற்படலாம்.
அதிகப்படியாக வாசிக்கும் பகுதியைக் கொடுப்பது எப்போதும் ஒரு நல்ல யோசனை அல்ல. வாசிக்க வேண்டிய அளவானது பயிற்சி பெறுவோரின் திறமைக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும். அத்துடன் வாராவாரம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடப் பயிற்சியே போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
கொடுக்கப்பட்ட வாசிப்புப் பகுதி ஒவ்வொரு பாடத்தின் கருப்பொருளுக்கு ஒத்ததாகவோ அல்லது சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த வழிகாட்டி சிபாரிசு செய்யப்பட்ட வாசிப்புப் பாகங்களுக்காக ஒரு சிறிய கைப்புத்தகம் வெளியிட்ருக்கிறது. இவைகளும் சிபாரிசு செய்யப்பட்வைகளே தவிர கட்டாயமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தலைவரும் தன்னுடைய குழுவிற்கு வாசிககக் கொடுக்க வேண்டிய புத்தகங்களின் படியலை அவசியம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
மனப்பாட வசனம்  ஒவ்வொரு வாரத்திற்கும் வரப்போகும் வாரத்திற்குரிய பாடத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு மனப்பாட வசனங்களை வழிகாட்டி குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒவ்வொரு குழுவின் சூழ்நிலைகளையும் பயிற்சி பெறுவோரின் திறமையையும் பொருத்து மனப்பாட வசனத்தை ஒன்று ஆகக் குறைக்கலாம். மனப்பாட வசனங்கள் கொடுக்கும் போது சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
மனப்பாட வசனங்களைத் தியான நேரத்தில் உபயோகிக்கலாம். அதே சமயம் தியான நேரத்தில் அதிகமான வேலை கொடுக்காதபடியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெறுவோர் மனப்பாட வசனங்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கிக் கூறும்படி சொல்வதும் உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் எவ்வளவு நன்றாக மனப்பாட வசனங்களைக் கொண்டு தியானம் செய்திருக்கிறார்கள் என்பதை சோதித்தறியவும் இது உதவியாக இருக்கும். தங்கள் குடும்பத்தாருடன் தினசரி உரையாடலின் போது இந்த மனப்பாட வசனங்களையும் எடுத்துக் கூறும்படி ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வது இந்த வசனங்களை மறந்து போகாமல் எப்போதும் மனதில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.
தியான நேரம்  ஒவ்வொரு வாரத்தின் தியான நேரத்திற்காக அடுத்த வாரத்திற்குரிய பாடம் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியை இந்த வழிகாட்டி தெரிந்தெடுத்திருக்கிறது. பயிற்சி பெறுவோர் அந்தப் பகுதியிலுள்ளவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவது பற்றி தியானம் செய்யும்படி கூற வேண்டும். தியானத்துக்கான பகுதி வேதாகமத்தின் எந்தப் புத்தகத்திலிருந்தும் எடுக்கப்படலாம் என்ற போதிலும் சீஷத்துவப் பயிற்சியின் ஆரம்ப காலத்தில் கதைகள் போன்ற பகுதிகளைத் (சரித்திரங்களைக் கூறும் புத்தகங்கள் சுவிசேஷங்களிலிருந்து) தெரிந்தெடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. இதன் காரணம் என்னவென்றால் பயிற்சி பெறுவோரில் பலருக்கு இந்த வேளையில் தீர்க்கதரிசனப் புத்தங்கள் அல்லது நிரூபங்களை வாசித்துப் புரிந்துணருவது கடினமாக இருக்கும். ஒரு வாரத்தில் எத்தனை தியான நேரங்கள் கொடுக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு தலைவரையும பொருத்ததாக இருந்த போதிலும் வாரத்திற்கு 4-5 தியான நேரங்களை வைத்துக் கொள்வதுடன் அதில் ஒன்று 4வது வகையைச் சார்ந்ததாக இருப்பது பொருத்தமாக இருக்கும். கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தியானத்திற்குப் பதிலாக பயிற்சி பெறுவோர் ஞாயிறு அல்லது புதன் (வார நடுவில் ஆராதனை இருக்குமானால்) கிழமைகளில் ஆராதனையின் போது செய்யப்பட்ட பிரசங்கத்தின் சுருக்கத்தை தியானம் செய்யும் படி சொல்வது மற்றொரு ஆலோசனையாக இருக்கிறது. பயிற்சி பெறுவோர் தியானப் பகுதியை அவசரமாக வாசிப்பதுடன் முடித்து விடாமல் அந்த பகுதியைக் கொண்டு தாங்கள் செய்யும் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்தும் விதத்தையும் குறித்து கவனமாகச் சிந்திக்கவும் அவற்றைத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் சரியானபடி செயல்படுத்தவும் அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தியானத்திற்குரிய பகுதியை அவர்கள் வாசித்து இந்த 4வது வகையான வாழ்க்கையில் செய்லபடுத்துதல் என்ற தியானத்தைச் செய்யும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
7. தலைவர்கள் தற்பரிசோதனை செய்வதற்கான பட்டியல்
தலைவர்கள் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளைக் குறிக்கோள் கண்காணிப்பு முறையில் மதிப்பீடு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பின்வரும் பட்டியல் சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களையும் தங்கள் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளையும் மதிப்பீடு செய்வதற்கு உதவியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீஷத்துவப் பயிற்சி பாடத்தையும் முடித்த பின்பு பின்வரும் பட்டியலின் படி தலைவர்கள் சுயமதிப்பீடு செய்தபின் தங்கள் பெலவீனங்களை அறிந்து அதற்கு ஈடு செய்வது சுய மேம்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

(ப.22) தலைவரின் தற்பரிசோதனை பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுயமதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

1. மனத்தின் வரைபடத்தின் உபயோகம்
. இந்தப் பாடம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?
. பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் புரிந்துணந்திருந்தேனா?
. ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?
2. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
. அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்) பொருத்தமானதாக இருந்ததா?
. நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
3. கேள்வி
. நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
. பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
. (   ) தெளிவாக விபரமாக பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம்-இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
. கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த கேள்விகளை நான் சம அளவிலும் சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
4. கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
. பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு பொருத்தமான பாவனை சைகை குரலில் ஏற்றத் தாழ்வு  நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
. பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படித்தினேனா?
5. திறந்த மனப்பான்மை
. பயிற்சி பெறுவோரிடம் மனம் விட்டுப் பேசினேனா?
. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை குணாதிசயம்  பற்றி வெளிப்படையாகப் பகிர்நது கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
. மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பீத்தேனா?
. பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களைப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
6. ஊக்குவிப்பு
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
. பகிர்நது கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
7. நேரத்தை நிர்வாகித்தல்
. ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? கூர்ந்து கவனித்தல் விளக்கம் சொல்லுதல் ஆழ்ந்த சுய சிந்தனை வாழ்க்கையில் செயல்படுத்துதல்.
. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
8. பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்
. பரிசுத்த ஆவியானவரின் ஒயியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையம் உள்ளத்தில் உணர்து அதின் படி செய்லபட்டேனா?
9. கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும் . பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
. பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டிறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
10. பயிற்சி பெறுவரைப் புரிந்துணர்ந்து கொள்தல்
. பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
. இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?

1. அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பாடப் பயிற்சி.
பயிற்சி பெறுவோர், தங்கள் ஜெப வாழ்க்கையில் கண்டு பிடிக்கும் ஏதாவது பிரச்சனைகளையும், இந்த வாரத்தில் தங்கள் ஜெப வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது மாற்றங்களையும் குறிப்பிட்டு எழுதி வைக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
2. வாசிக்கும் படியாகக் கொடுக்கப்பட்ட வேலைப் பகதி.
3. மனப்பாட வசனங்கள்
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7
ஆகையால், பொல்லாதவர்களாகயி நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு, நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
4. தியான நேரம்
எலியாவின் உத்தரவு அருளப்பட்ட ஜெபம். 1 இரலாஜாக்கள் 18:41-46

No comments:

Post a Comment