Thursday, August 18, 2016

பாடம் 4: ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமான தேவனுடைய வார்த்தை





முன்னுரை

1. மனதின் வரைபடம்


ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமான தேவனுடைய வார்த்தை
- வேதாகமம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை (1)
- வேதாகமத்தை நமக்குக் கொடுப்பதில் தேவனுடைய இரண்டு நோக்கங்கள் (2-8)
- இரண்டு நோக்கங்கள் முழுமையாக்கப்படுதல் (2-6)
- பூரணப்படுத்தப்படுதல் - இவற்றின் அர்த்தம் (7-8)
தேவதாகமத்தின் நான்கு கிரியைகள் (9-11)
- நான்கு கிரியைகள் (9)
- அதிகமாக அனுபவத்தில் அறியப்படும் கிரியை (10)
- வார்த்தையினால் கடிந்து கொள்ளப்படும்போது நீ சரியான முறையில் செயலளவில் பிரதியுத்தரம் கொடுக்கிறாயா? (11)

2. நோக்கங்கள்
- வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமானது என்பதைப் புரிந்துணர்ந்து கொள்வதற்கு
- வேதாகமத்தின் நோக்கங்களையும் கிரியைகளையும் புரிந்து கொள்வதற்கு.
- வேதத்தை வாசிப்பதில் உறுதியாய் இருக்க அதின் போதனைகள், கடிந்து கொள்ளும், சீர்திருத்தல், நீதியைப் படிப்பிக்குதல் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்க.

3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலக முழுவதிலுமுள்ள ஊழியங்களுக்காக, உங்கள் தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காக, உங்களுடைய குறிப்பிட்ட சபைக்காக ஜெபிக்கவும்
- உங்கள் சபையின் குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்காக

5. வீட்டுப பாடப் பயிற்சியை சரி பார்த்தல்
வீட்டுப்பாடப் பயிற்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரமும் முறையும் ஒவ்வொரு தலைவரின் அனுமானத்தின்படி செய்யப்படலாம்.


1) தியான நேரம்
விதைக்கிறவனின் உவமை
மத்தேயு 13:1-13


2) மனப்பாட வசனங்கள்
‘வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும், பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” 2 தீமோத்தேயு 3:16,17

‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது”. ரோமர் 1:16

3) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி

4) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்ட்ட பகுதி



6. முன்னுரை
உலகத்திலுள்ள புத்தகங்கள் எல்லாமே, காலப் போக்கில் உயிரற்றதாகி விடுகின்றன. முதல் தரமான தலை சிறந்த படைப்பும் கூட அதனுடைய உன்னத காலத்தில் மட்டுமே ஓரளவிற்கு உண்மையாகவும், சிறிதளவே உள்ளத்தைக் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டுப பார்க்கும் போது, வேதாகமம், காலத்தையும் கடந்து உயிருள்ள வார்த்தையாக நிலைத்திருக்கிறது. இந்த உண்மைக்கு வேதாகமம் தன்னில் தானே சாட்சியாக இருப்பது மட்டுமல்லல,, இந்த நிஜனமான உலகத்திலுள்ள எண்ணற்ற நிகழ்வுகளும் இவ்வுண்மைக்கு சாட்சிகளாக இருக்கின்றன. வேதாகமத்தின் அழியாத சத்தியத்தை நாம் முற்றிலுமாக கிரகித்துக் கொள்ளாவிட்டால், புதிய ஏற்பாட்டுக் காலத்திலிருந்த சதுசேயர், பரிசேயரைப் போல் நாமும் தேவனுடைய வார்த்தையையும் அதின் வல்லமையையும் தவறாகப் புரிந்து கொள்ளுவோம் என்பது வருந்தத் தக்கது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ள கிரியை செய்கிறதுமானது என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்துவோமாக. இது எப்படிப்பட்ட அதிசயமான கண்டுபிடிப்பும் ஆசீர்வாதமுமாக இருக்கிறது.


7. முன்னுரையின் சுருக்கம்
- உலகத்திலுள்ள மற்ற எல்லாப் புததகங்களிலிமிருந்து வேதாகமம் வேறுபட்டதாக இருக்கிறது.
- வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமானது.
- வேதாகமம் ஜீவிக்கிறதும் கிரியை செய்கிறதுமாக இருக்கிறது என்ற உண்மையைக் குறித்து கிறிஸ்தவர்கள் திட நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.


8. நுழைவுக் கேள்வி
கேள்வி 1க்கு நேராகச் செல்லவும்

மையப் பகுதி
(வேதாகமம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை)

1. எபிரெயர் 4:12-13 வேதாகமத்தை எப்படி விவரிக்கிறது?
- தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

- வேதாகமம் ஜீவனும் வல்லமையும் உள்ளது என்று சொல்வதின் அர்த்தம் என்ன?
வேதாகமம் மக்களுக்கு ஜீவனைக் கொடுத்து அவர்களை முற்றிலும் மாற்றுகிறது என்பதினால், வேதாகமம் மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபட்டது என்று பொருள்படும். வேதாகமம் ஜீவனுள்ளதாக இருப்பதால் அது மக்களுக்கு ஜீவனைக் கொடுக்க முடியும். வேதாகமம் வல்லமையுடையதாக இருப்பதினால் அது மக்களை பலப்படுத்த முடியும்.

- ஆத்துமாவும் ஆவியும், கணுக்களும் ஊனும் என்பது எதைக் குறிப்பிடுகிறது?
ஆத்துமாவும் ஆவியும் புறப்பொருள் அல்ல. அதனால் காணப்பட முடியாது. கணுக்களும் ஊனும் வெளிப்புறமிருந்து காணப்பட முடியாத நமது சரீரரத்தின் பாகங்கள். எனவே, ஆத்துமா, ஆவி, கனுக்கள், ஊன் இவை யாவும் நமது சரீரத்தின் இரகசியமானதும் மறைக்கப்பட்டதுமான பாகங்களாக இருக்கின்றன. வேறு வகையான உதவியின்றி நமது சரீரக் கண்களினால் இவற்றைப் பார்க்க இயலாது.

- ஆத்துமாவையும ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறது என்பதின் கருத்து என்ன?
வசனங்கள் 12-13ன் கடைசி பகுதி, இருதயத்தின் மறைவான நினைவுகளையும் யோசனைகளையும் வெளிப்படுத்தி, வெளிச்சத்தில் கொண்டுவந்து காண்பிப்பது என்று விளக்கிக் கூறுகிறது. அத்துடன், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் தெரியப்படுத்துவதுடன் அவற்றை முற்றிலும் மாற்றுவதையும் குறிப்பிடுகிறது.

- உன்னுடைய ஆத்துமாவை உருவக் குத்திப் பிரிக்கிற வேதாகமத்தின் வல்லமையை நீ எப்போதாவது உன்னுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறாயா?
உதாரணமாக, அப்போஸ்தலருடைய நடவடிக்கள் 5ம் அதிகாரத்தில், அனனியா, சப்பீராளைப்பற்றி வாசிக்கும்போது நமது இருதயங்களிலுள்ள வஞ்சகமான, நேர்மையற்ற எண்ணங்கள் ஏதாவது வெளியே காண்பிக்கப்பட்டு நாம் மனந்திருப்புதலுக்கும் மாற்றத்துக்கும் வழிநடத்தப்பட்டிருக்கலாம்? நல்ல சமாரியனின் உவமையை நாம் வாசிக்கும்போது, நமது இருதயங்களில் அன்பில்லாமையை நாம் உணர்ந்து, பிறரிடம் அன்பு கூரும்படி நமது உணர்வில் தூண்டப்படலாம்? கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிக்கும் போது, அவருடைய அன்பினால் நெருக்கப்பட்டு, நாம் கொடிய பாவிகள் என்று உணர்ந்து நன்றியுள்ளவர்களாயிருக்கலாம்.

(குறிப்பு)
வேதாகமம் ஜீவனுள்ளதும் கிரியை செய்கிறதுமாக இருக்கிறது என்ற உண்மை எவ்வாறு நம்முடன் சம்பந்தப்படுகிறது? வேதாகமம் ஜீவனுள்ளதாக இருப்பதினால் நமக்கு ஜீவனை அளிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால் ஆத்துமாவையும் ஜீவியத்தையும்  சீர்படுத்ததவும், பலப்படுத்தவும் வேதாகமம் வல்லமையுள்ளதாக இருக்கிறது. முதலாவது கேள்வியானது வேதாகமத்தின் இந்த வல்லமையில் நம்பிக்கை வைப்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது என்பதைத் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

(நமக்கு வேதாகமம் கொடுப்பதற்கான இரண்டு நோக்கங்கள்)

2. தேவன் நமது ஜீவனுள்ள வார்த்தையை எழுத்து வடிவில் நமக்குக் கொடுத்ததில் இரண்டு நோக்கங்கள் உள்ளன. அவை யாவை?
2 தீமோத்தேயு 3:15

- நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குவது. வேதம் எப்படி நம்மை இரட்சிப்புக்கேடற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது?
- இரட்சிப்பின் வழி வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16
- நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குவது வேதம் எப்படி நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது?
- இரட்சிப்பின் வழி வேதாகமத்தில் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16
- ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாக இருக்கும் படி” வசனம் 16 இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்.
முதலாவது பகுதி, வேதாகமத்தின் நோக்கத்தின்படி, புதிதாக வந்த விசுவாசிகளை முதிர்ச்சி பெற்ற கிறி;ஸ்தவர்களாகக்குவதில் கவனம் செலுத்துகிறது. (அதாவது தகுதியுள்ளவர்கள், தேவையான பயிற்சியுடன் ஆயத்தமாயிருப்பவர்கள்)
பிற்பகுதி, வேதாகமத்தின் நோக்கத்தின்படி, கிறிஸ்தவர்கள் நற்கிரியை செய்யத் தகுதியுள்ளவர்களாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. (அதாவது, பணிவிடை செய்து, ஊழியம் செய்யத் தகுதியுள்ளவர்காளும் படி).
இதற்கேற்றபடி வேதாகமத்தின் நோக்கத்தை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.

3. உண்மையாகவே வேதாகமம் தேவனுடைய ஜீவ வர்த்தையா அல்லது இல்லையா என்பதைப் பாவிகளை இரட்சிக்கும் சுவிசேஷத்தின் வல்லமையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ரோமர் 1:16 இதற்கு எவ்வாறு விளக்கம் கொடுக்கிறது?
- விசுவாசிக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷம் இரட்சிப்பைக் கொடுக்கும் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது.
- பாவிகளை இரட்சிக்க வேதாகமம் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூடிய சரியான உதாரணம் எது?
- இது நாம்தான் இரட்சிக்கப்பட்ட நாமேதான். என்னைப் போன்ற ஒரு பாவி இயேசுவில் விசுவாசம் வைத்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள, சுவிசேஷம் வழிநடத்தினது என்ற உண்மைக்கு மேலாக, வேறு எந்த உதாரணம் சுவிசேஷத்தின் வல்லமைக்கு சாட்சி பகரக்கூடும்?

4. இரட்சிப்புக்கு வேதாகமம் தேவனுடைய வல்லமையாக இருக்கிறது என்பதை எப்போது நீ உணர்ந்து கொண்டாய்?
- இந்தக் கேள்வி பயிற்சி பெறுவோர் எப்பொழுது இரட்சிக்கப்படடார்கள் என்பதைப் பற்றியதல்ல. ஆனால், வார்த்தையின் மூலமாக எப்பொழுது அவர்களுக்கு சுவிசேஷத்தைக் குறித்த ஆழ்ந்த புரிந்துணர்வு ஏற்பட்டது என்பதே கேள்வி.


(குறிப்பு)
தேவன் நமது வார்த்தையை நமக்குக் கொடுத்ததின் முதலாவது காரணம் ஏற்கெனவே கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் அடையப் பெற்று விட்டது. இரண்டாவது காரணம் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முற்றிலுமாக செய்து முடிக்கப்படவில்லை. இரண்டாவது நோக்கத்தைத் தலைவர்கள் அதிகம் வற்புறுத்த வேண்டும் என்பதற்கு இதுவே காரணம். பயிற்சி பெறுவோர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஆன்மீக வளர்ச்சி பெற்று, தேவனுக்கு ஊழியம் செய்பவர்களாகும் படி தீர்மானிக்கச் செய்வதையே தலைவர்கள் மையமாகக் கொள்ள வேண்டும்.

5. நம் ஒவ்வொருவருடைய குணாதியசமும் வாழ்க்கையும் தேவன் நமக்காக வைத்துள்ள திட்டத்தைப் பிரதிபலித்து, நாம் முழுமையானவராகும் படிச்செய்வதே வேதாகமத்தை நமக்குக் கொடுத்ததின் இரண்டாவது நோக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் முழுமையாக்கப்படுவது (தகுதியுள்ளவனாக இருப்பது) என்பதின் அர்த்தம் என்ன? (எபேசியர் 4:14-16)
இது ஒருவரது குணத்தில் முழு மாற்றம் பெறுவதைக் குறிப்பிடுகிறது.

6. நற்கிரியைகளைச் செய்வதற்கு முழுமையானவது (தகுதியுள்ளவனாவது) என்பதின் அர்த்தம் என்ன? (எபேசியர் 4:19-24)
- நற்கிரியைகளைச் செய்வதற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆயத்தமானவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது அப்போதுதான் ஒருவருடைய வாழ்க்கையில் முழு மாற்றம் ஏற்படுகிறது.

- நாம் முழுமையாக மாற்றப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தைதிறக்hக உபயோகிப்படுவதற்காகவே வேதாகமம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற்து. வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், நாம் ஊழியம் செய்யும் பணிவிடைக்காரராகவும், அல்லது குறிப்பாக, சுவிஷத்துவப் பயிற்சி சம்பந்தப்பட்ட முறையில் சபை மக்கள் சார்ந்த) தலைவர்களாகவும் ஆக வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேதாகமம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.


(குறிப்பு)
7-வது கேள்வியில் அதற்கான விடையும் கேள்வியிலேயே, ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. தலைவர்கள் கேள்வியைப் பலவகையாகப் பாகுபடுத்தி அதைப் பயிற்சி பெறுவோருக்கு விளக்கிக் கூற வேண்டும் என்று யோசனை கூறப்படுகிறது.

7. ‘முழுமையாக்கப்படுதல்’ என்பதை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது நாம் பாவம் செய்யாமல் குற்றமற்ற, குறைபாடு இல்லாத வாழ்வு வாழ்கிறோம் என்ற அர்த்தம் அல்ல. மாறாக தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் போல் வளரும்படி பரிசுத்தமாக்கப்படும் செய் முறையே முழுமையாக்கப்படுதல் எனப்படும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்துப் படிப்பதினால் நாம் எந்த அளவுக்கு முழுமையாக்கப்படுகிறோம் என்பதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 1 யோவான் 3:3 இதைக் குறித்து நமக்கு என்ன போதிக்கிறது?

- ‘அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் இருப்போம்” என்று 1 யோவான் 3:2 கூறுகிறது.
நாம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் இயேசு திரும்ப வரும் போதுதான் நாம் பூரணப்படுத்தப்படுவோம். இதைப் போலவே, நாம் இன்னும் பூரணராகாவிட்டாலும் நாம் சுத்திகரிக்கப்படும் நிலைமையில் இயேசு வெளிப்படும் போது (அவரைப் போல்) முழுமையும் பூரணத்துவமும் அடைவோம் என்ற நம்பிக்கையுடனிருக்கிறோம் என்று 1 யோவன் 3:3 போதிக்கிறது.
‘தேறினவனாகவும், தகுதியுள்ளவனாகவும்’ என்று 2 தீமோத்தேயு 3:16 கூறுவதின்படி, நாம் பூரணராக்கப்படுவோம் என்று பொருள் படுகிறதா அல்லது முதிர்ச்சியடைவோம் என்று பொருள் படுகிறதா?
- ஆங்கில மொழி பெயர்ப்பில் இது கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். ஆனால் மூல பாஷையான கிரேக்க மொழியில் இது, ‘வளர்ச்சியடைய’ என்று மட்டுமே பொருள் படுகிறது.
நம்மை முழுமையானவராக்கும்படி தேவன் என்ன கொடுத்தார;? - வேதாகமம்.


(குறிப்பு)
8-வது கேள்வி, ஒருவர் எவ்வளவு முதிர்;ச்சியடைந்திருக்கிறார் என்று கேட்கவில்லை. வேதாகமம், நாம் வளர்ந்து தகுதியுள்ளவர்களாகும்படி தேவன் நமக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கும் ஒரு சாதனம் (கருவி) என்ற உண்மையைப் பயிற்சி பெறுவோர் நிச்சயப் படுத்திக் கொள்ள உதவி செய்வதே இந்தக் கேள்வியின் நோக்கம். இநத் நோக்கத்தை மனதில் கொண்டு, பயிற்சி பெறுவோர் தங்கள் விடைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி வழிநடத்தவும்.


8. ஒரு வருடத்திற்கு முன்பு நீ எப்படிப்பட்ட நபராக இருந்தாய் என்பதுடன் ஒப்பிடும்போது, இன்று எவ்வளவாக ‘முழுமையாக்கப்பட்டிருக்கிறாய்’? தயவு செய்து இதற்கு ஓரிரு குறிப்பிட்ட உதாரணங்களை கொடுக்கவும்.

- பயிற்சி பெறுவோர் நேர்மையுடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவி.
- நீ வளர்ச்சியடைவதற்கு உனக்கு உதவியாக இருந்தது எது? அந்த நேரத்தில் தாங்கள் போதிய அளவு வளர்ச்சியடையவில்லை என்று நினைக்கிறவர்களுக்கு உங்களுக்குப் போதிய வளர்ச்சி இல்லாததின் காரணம் எதுவாக இருக்கலாம்? நம்மை முழுமையானவர்களாக்கும் படியாகவே தேவன் நமக்கு வேதாகமத்தைக் கொடுத்திருக்கிறார். (அதாவது நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கும்படி) ஆகையால் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானம் செய்து, அதன் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கும்போது நாம் (ஆன்மீக) வளச்சியடைந்து, தகுதியுள்ளர்களாகலாம்.


(குறிப்பு)
வேதாகம்த்தின் நான்கு கிரியைகளுக்கும் பயிற்சி பெறுவோர் விசுவாசத்திலும் கீழ்ப்படிதலிலும், தங்கள் செயலளவில் பதிலளிக்கும்படி ஊக்குவிப்பதை 9வது 10வது கேள்விகள் மையமாகக் கொண்டிருக்கின்றன. வேதாகமத்தின் போதனை, கடிந்து கொள்ளுதல், சீர்திருத்துதல், நீதியைப் படிப்பிக்குதல் ஆகியவற்றை நாம் ஏற்றுக் கொள்ளும் போதுதான் நமது வாழ்க்கை குணாதிசயம் இவற்றில் மாற்றம் ஏற்படுகிறது என்ற உண்மையை வற்புறுத்திக் கூற வேண்டும். வார்த்தையை நாம் புரிந்துணர்ந்;து கொள்வதால் மட்டும் நமது வார்த்தையை நாம் புரிந்துணர்ந்து கொள்வதால் மட்டும் நமது வாழ்க்கையை மாற்ற முடியாது. ஆனால் மனந்திரும்புதலும் வார்த்தைக்குக் கீழ்ப்படிதலுமே வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடும்.


வேதாகமத்தின் நான்கு கிரியைகள்

நம்மை முழுமைப்படுத்த வேதாகமத்திலுள்ள அற்புதமான நான்கு செயல்பாடுகள் யாவை?
2 தீமோத்தேயு 3:17
உபதேசம் செய்தல், கடிந்து கொள்ளுதல், சீர்திருத்தல், நீதியைப் படிப்பிக்குதல்
- வேதாகமத்தின் இந்த நான்கு கிரியைகளும் தேவனுடைய வார்த்தையில் வளர்ந்தேறச் செய்யும் வழி முறைகளாக இருக்கின்றன. நாம் நமது பிள்ளைகளை வளர்க்கும் விதத்துடன் இவைகளை ஒப்பிடலாமா?
- நன்மை செய்வதற்கு நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்.
- அவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டி அவர்களைக் கடிந்து கொள்கிறோம்.
- அவர்களைத் திருத்துகிறோம்.
- தேவையான நேரங்களில் அவர்களைக் கட்டொழுங்கு படுத்துகிறோம்.

10. ‘போதனை’ அல்லது உபதேசம், நன்மை, தீமையைக் குறித்து நமக்குக் கற்பிக்கிறது.
‘கடிந்து கொள்ளுதல்’, நமது பாவங்களை, நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறது. ‘திருத்துதல்’, நாம் மனந் திரும்புதலுக்குக் காரணமாகிறது. ‘நீதியைப் படிப்பிக்குதல்’, சத்தியத்தின் படி நாம் நடக்க நம்மை வழி நடத்துகிறது.
- வேதாகமத்தை வாசிக்கும்போது? இந்த நான்கு கிரியைகளில் எதை நீ அதிகமாக அனுபவத்தில் காண்கிறாய்?
- தங்களது ஆன்மீக வளர்ச்சியைப் பொறுத்து, ஒவ்வொருவரும் வெவ்வேறான அளவில் இந்த நான்கு கிரியைகளையும் தங்கள் அனுபவத்தில் அ;றிந்து கொள்வார்கள்.
- வேதாகமத்தின் இரண்டு நோக்கங்களும் (இவற்றை நாம் பாடத்தின் ஆரம்பத்தில் படித்திருக்கிறோம்). நம்மில் நிறைவேற்றப் படத்தக்கதாக, நாம் இந்த நான்கு கிரியைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், நற்கிரியைகளைச் செய்யத் தகுதியுள்ள முதிர்ச்சி பெற்ற விசுவாசிகளாக் ஆவதற்கு நாம் விரும்பினால், வேதாகமம் நமக்குப் போதனை செய்து, கடிந்து கொண்டு, சீர் திருத்தி நீதியைப் படிப்பிக்கும் போது நாம் அதற்கு உணர்வுள்ளவர்களாகக் கீழ்ப்படிய வேண்டும். நீ அவ்விதம் செய்ய முடியுமா?
- வேதத்தை வாசிப்பது மாத்திரம் சுயமாக நம்மை மாற்றிவிட முடியாபது. ஆனால், வேதாகமத்தின் நான் கிரியைகளுக்கும் நாம் செயலளவில் பதிலளிக்கும்போது மட்டுமே இது நடைபெறும்.

11. நம்மைச் சுற்றி பலர் பக்தி சிரத்தையோடு தங்கள் வேதாகமத்தைத் தூக்கிக் கொண்டு சென்றாலும் அவர்களின் வாழ்வில் மாறுதலின் அனுபவம் என்பது இல்லை. வேதத்தை வாசிக்கும் போது கூட அவர்களால் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப விரும்புவதில்லை. சத்தியத்தை பகுத்தறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும் இதை ஒரு அற்புமான காரியமாகக் கருதுகிறார்கள். என்னை ஒரு அடக்குமுறையான எண்ணம். கண்களை மூடிக்கொண்டு, உன்னையும் உன் சொந்த வாழ்க்கையையும் தற்பரிசோதித்துப் பார்.
- இந்தப் பாடத்தின் பொருளடக்கமும், பயிற்சி பெறுவோரை நற்கிரியை செய்யத் தகுதியுள்ளவர்களாக்குவதற்கு தேவன் உபயோகிக்கும் வேதாகம போதனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தப் பாடத்தின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்ட உபதேசம், கடிந்து கொள்ளுதல், சீர் திருத்துதல், நீதியைப் படிப்பித்தல் ஆகியவற்றைப் பயிற்சி பெறுவோர் பகிர்ந்து கொள்ளும்படி ஊக்குவியுங்கள்.

பரிசுத்த ஆயிhனவர் அவர்களுடைய இருதயங்களைத் தொடும்படியாக, ஆழ்ந்த சிந்தனையிலும் ஜெபத்திலும் சிறிது நேரம் செலவிடும்படி பயிற்சி பெறுவோரைக் கேட்டுக் கொள்ளலாம்.

முடிவுரை

1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தை சுருக்கமாகக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதயங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும்படி உதவி செய்ய வேண்டும்.

2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றைச் செயல்படுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப் படி பகிர்ந்து கொள்ள வேண்டும்.

4. முடிவில் துதி செலுத்துதல்


5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டித் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர்கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
அவர்களுடைய குணமும் வாழ்ககையும் முற்றிலும் மாற்றம் அடைவதற்கு செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்ககையையும் பரிசுத்த ஆவியானவர் மாற்றும்படி ஜெபிக்கவும்:

6. வீட்டுப் பாடப் பயிற்சி
1) அன்றாடக வாழ்க்கை வீட்டுப்பாடப் பயிற்சி:
இந்த வாரத்தில், வேதாகமத்திலிருந்து தாங்கள் பெற்றுக் கொள்ளும் எந்த ஒரு போதனை, கடிந்து கொள்ளுதல், திருத்துதல், அல்லது நீதியைப் படிப்பித்தல் ஆகியவை இருக்குமானால், பயிற்சி பெறுவோர் அதைக் குறித்தும், தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள், குறிப்பாகத் தங்கள் அன்றாடக வாழ்க்கையில் எவ்விதம் செயளவில் பதிலளித்தனர் என்பதையும் குறித்து எழுதி வைக்கும் படி சொல்லுங்கள்.

2) வாசிக்கும் படியாகக் கொடுக்கப்படும் பகுதி

3) மனப்பாட வசனங்கள்
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். பிலிப்பியர் 4:6-7
நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மத்தேயு 6:6

4) தியான நேரம்
சரியான ஜெபம் எது?
மத்தேயு 20:17-28



தலைவரின் தற்பரிசோதனைப் பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுய மதிப்பீடு செய்தவற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
5 4 3 2 1

மனதின் வரைபடத்தின் உபயோகம்:
இந்தப் படம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திருந்தேனா?

பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் சரிவரப் புரிந்திருந்தேனா?

ஒவ்வொரு கேள்விக்கு இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் கடந்து செல்லும்போது சுமூகமாக இருந்ததா?


அறிமுக நடவடிக்கை: (ஐஸ் பிரேக்கர்)

அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை பொருத்தமானதாக இந்ததா?

நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?


கேள்வி:
நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
(திறந்த மூடிய கேள்விகள்) தெளிவாகவும் விபரமாகவும் பதில் கூற வேண்டிய கேள்விகளையும், ’ஆம்-இல்லை’ என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும், சரியான விதத்திலும் உபயோகித்தேனா?

கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்:
பயிற்சி பெறுவோர் விடையளிக்கும்போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை, சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு, நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா?
பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்திலும் சுருக்கமாக ஒழுங்கு படுத்தினேனா?

திறந்த மனப்பான்மை:
பயிற்சி பெறுவோரிடம் நான் மனம் விட்டுப் பேசினேனா?
பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கை, குணாதிசயம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பித்தேனா?
பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களையுப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?

ஊக்குவிப்பு:
பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
பகிர்ந்து கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?

நேரத்தை நிர்வகித்தல்:
ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தையும் ஒதுக்கினேனா? - கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்ககையில் செயல்படுத்துதல் ஆகியவை. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளின் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?

பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்:
பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவுபடுத்துவதை நான் நாடித் தேடினேனா?
பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையும் உள்ளத்தில் உணர்ந்து அதின்படி செயல்பட்டேனா?

கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்:
பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம்செய்து, சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?


பயிற்சி பெறுவோரைப் புரிந்துணர்ந்து கொள்தல்:
பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்ககளையும் ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?


தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப் பாh;க்கிலும், கடிந்து கொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். (நீதிமொழிகள் 28:23)

No comments:

Post a Comment