Tuesday, August 9, 2016

கீர்த்தனைகளின் வரலாறு

அது 1921ம் ஆண்டு. 21 வயது நிரம்பிய இளம் பெண் ஒருத்தி எஃமோர் (இந்தியா) தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தாள். அவள் சிலோனுக்கு (ஸ்ரீலங்கா) ஓர் ஊழியக்காரராக பயணம் மேற்கொண்டிருந்தாள்! தொடர் வண்டி புறப்படுவதற்கு முன் அவளுடைய தாயார் அவளை அங்கு வந்து சந்திக்க வேண்டியதிருந்தது. ஆனால், தொடர் வண்டு சீக்கிரத்தில் புறப்பட்டுவிட்டதா அல்லது அந்தத் தாயாரின் வருகை தாமதமா என்று தெரியவில்லை. அந்த இளம்பெண்ணால் தன் தாயாருக்கு ‘சென்று வருகிறேன்’ என்று கூற முடியவில்லை. தொடர் வண்டியில் அச்சத்தோடும் தனிமையிலும் தன் பேனாவை எடுத்து ஒரு பாடலை எழுதத் தொடங்கினாள். அது இன்றளவும் தமிழ் திருச்சபைகளில் பிரபலமாகப் பாடப்படுகிற பாடல் ஆகும். அந்தப் பாட்டின் தலைப்பு, ‘என்னை மறவா இயேசு நாதா’ என்பதாகும். பாடியவர்: சாரா நவரோஜினி ஆவார்.

நான் இதனை செவ்வாய்க்கிழமை காலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் சிந்தனைகள் விசுவாசத்தை விட்டு விலகச் செய்யாத சில தமிழ் கீர்த்தனைகளை நாடியது. தொடர்ந்து, பிரபலமான பல கீர்த்தனைகளின் வரலாறுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவற்றுக்கு உயிரோட்டம் கொடுக்க முடியும். அதில் பிரபலமான கீர்த்தனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கீர்த்தனைகள் பெரும் வரலாற்றுக் கதைகளோடு நம்மிடம் வந்துள்ளன. கீர்த்தனைகள் ஒரே தேவனாகிய கடவுளைத் துதிக்கும் பாடல்கள் ஆகும். சில பாடல்கள் (அ. கீர்த்தனைகள்) சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. பாரம்பரியம் நிறைந்த இப்பாடல்கள் தமிழில் எழுதப்பட்டவை. பாடல் அடிகளை எழுதியும் இசை அமைத்தும் பலர் இவற்றுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளனர். அவற்றின் சிலவற்றை நாம் பின்பு காண்போம். தேவனுக்குச் சித்தமானால் வரும் வாரங்களில் அவை பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன். கீர்த்தனைகளைத் தொடர்ந்து பாடுங்கள். வேதத்தில் இடம் பெறும் பாடல்களின் பொருள்களை வெளிப்படுத்துவதில் அவை வல்லமையானவை.


தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment