பாடம் 3
தியான நேரம்
1. மனவோட்ட வரை
தியான நேரம் பகிர்ந்;து கொள்தல் (1)
தியான நேரம்
கூர்ந்து கவனித்தல்
விளக்கம் சொல்லுதல்
ஆய்வு செய்தல் மற்றும் தியானித்தல்
ஆழ்ந்த சுய சிந்தனை
வாழ்க்கையில் செயல்படுத்துதல்
வார்த்தையின்; பேரில் தியானம் செய்வதில் நான்கு நிலைகள் (2, 3)
நான்கு வகையான தியன நேரக் குறிப்புப் புத்தகம் (4, 5)
ஏ வகை (1)
பி வகை (2)
சி வகை (3)
டி வகை (4)
தியான நேரப் பயிற்சி (6)
2. நோக்கங்கள்
- தியான நேரத்தின் குறிப்பிட்ட நான்கு நிலைகளையும் புரிந்துணர்ந்;து கொள்வதற்கு (அதாவது, கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல்).
- வெவ்வேறு வகையான தியான நேரக் குறிப்புகள் எழுதுவது பற்றி (ஏ வகை - டி வகை) நல்ல பரிச்சயம் ஏற்படும்படி தாங்கள் சொந்தமாகச் செய்து கொள்வதற்கு ஏதுவாக தியான நேரத்தை எல்லோரும் சேர்ந்;து பயிற்சி செய்ய
- தியான நேரத்தைக் குறித்து மனக் கிளர்ச்சியடைந்து, ஊக்கத்துடன் அதைக் கிரமமாகச் செய்வதற்குத் தேவையான தீர்மானங்கள் எடுக்க.
3. துதி
4. ஆரம்ப ஜெபம்
- தேசத்திற்காக
- உலகபமெங்குமுள்ள ஊழியங்களுக்காகவும் உனது தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காகவும், உன்னுடைய குறிப்பிட்ட திருச் சபைக்காகவும்.
- உன்னுடைய சபையிலுள்ள குருவானவர்களுக்காக
- பயிற்சி பெறுவோருக்காக
- சீஷத்துவப் பயிற்சியின் பாட நேரத்திற்காக
5. வீட்டுப் பாடப் பயிற்சியை சரிபார்த்தல்
வீட்டுப் பாடப் பயிற்சியில் ஒவ்வான்றையும் சரிபார்க்க ஒதுக்கப்படும் நேரம், முறை இவற்றைத் தலைவர் தனக்கு நலமாகத் தோன்றும் விதத்தில் செய்து கொள்ளலாம்,.
1) தியான நேரம்
ஏசாயாவின் தியான நேரம்
ஏசாயா 6:1-13
2) மனப்பாட வசனம்
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119.105
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தஐடடய வேதத்தில்பிரியமாயிருந்துஇ இரவும் பகலும் அவர்களுடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:1-2
அ) அன்றாட வாழ்க்கை வீட்டுப்பாட பயிற்சி
4) வாசிக்கும் படியாக கொடுக்கப்பட்ட வேலை
6. முன்னுரை
வெற்றிகரமாக கிறிஸ்தவ ஜீவியத்திற்கு அனுதினமும் தேவனைச் சந்திப்பது அவசியம் என்று கடந்த வாரத்தில் நாம் கற்றுக் கொண்டோம். தியான நேரம் என்பது, ஜெபத்தின் மூலமாகவும் வேத வாசிப்பின் மூலமாகவும் தேவனோடு ஐக்கியம் கொள்வதாகும். இந்த தினசரி தியான நேரத்தை நாம் எப்படி கடைப்பிடிப்பது அல்லது நடத்துவது என்பது பற்றி இன்னமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் கொரியாவிலுள்ள திருச்சபைகளில் அதிகாலை ஜெப ஆராதனை நடத்திய பின், மக்கள் தனிப்பட்ட முறையில் ஜெப நேரத்துடன் வேதம் வாசித்தனர். இந்த விதத்தில் ஒருவர் தேவனோடு ஆச்சரியகரமான ஐக்கியம் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் சமிப காலத்தில் குருவானரால் நடத்தப்படும் ஆராதனையில் அமைதியாகக் கலந்து கொள்வதைக் காட்டிலும் சபை மக்களுக்குத் தாங்களாகவே ஜெபித்து வேதம் வாசிப்பதின் மூலமாக தேவனோடு நேரடியான தொடர்பு கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நாட்களில் பயனுள்ள தியான நேரத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பற்பல விதமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடத்தில் அறிமுகம் செய்து வைப்போம். இவற்றில் உங்கள் தலைவரால் பரிந்தரைக்கப்படும் ஏதாவது ஒரு முறையைப் பழக்கப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
7. முன்னுரையின் சுருக்கம்
- தியான நேரம் என்பது ஜெபம், வேத வாசிப்பின் மூலமாக தேவனோடு ஆவிக்குரிய ஐக்கியம் கொள்வதாகும்.
- தியான நேரம் என்பது செயல்படும் ஐக்கியத்தில் ஈடுபடுவதாகும்.
- பயனுள்ள தியான நேரத்திற்கு ஏற்ற வழிமுறைகளைக் கண்டறிவோமாக.
8. அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்)
ஒரு நாளின் 24 மணி நேரத்துடன் 3 மணி நேரம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டால், அந்தக் கூடுதலான 3 மணி நேரத்தை நீ எவ்விதம் உபயோகம் படுத்துவாய்?
எந்த விதமான விடைகளையும் எற்றுக் கொள்ளத் தக்க சூழ்நிலையை உருவாக்கு. பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்க்கையில் வாஞ்சிப்பது என்ன என்பதைக் கண்டு கொள்வதற்கு இந்தக் கேள்வி உதவியாக இருக்கும். பயிற்சி பெறுவோர் ஒருவர் மற்றவிரன் விடைகளைக் குறித்து தீர்ப்புக் கூறாதபடிக்குக் கவனமாக இருக்க வேண்டும். இயேசு இந்தக் கூடுதலான 3 மணி நேரத்தை எவ்வாறு உபயோகித்திருப்பார் என்று சிந்திக்கும்படி பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க்வும்.
9. நுழைவுக் கேள்வி
முதலாவது கேள்விக்கு நேராகச் செல்லலாம்.
மையப் பகுதி
(தியான நேரம் பகிர்ந்;து கொள்ளுதல்)
1. கடந்த காலத்தில் நீ எவ்வாறு தேவனோhடு நேரம் செலவிட்டாய், அதனால் பெற்றுக் கொண்ட ஆசீர்வ்hதங்கள் இவற்றைக் குழுவினருடன் பகிர்ந்து கொள்.
- பயிற்சி பெறுவோர் வீட்டுப் பாடம் பயிற்சியாக தியான நேரம் செய்திருக்க வேண்டும். தங்கள் தியான நேரங்களில் தாங்கள் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க வேண்டும்.
- எங்கு, எப்பொழுது, எவ்வளவு நேரம் நீ தியானத்தில் நேரம் செலவிட்டாய்,
- தியான நேரம் வைத்துக் கொள்வதற்கு இன்னும் புதிதாக இருக்கும் பயிற்சி பெறுவோர் தாங்கள் த்ர்ம சங்கடமான நிலைமைய உணராமலும், தங்களுடைய தியான நேர அனுபவத்தை மற்றவர்களின் அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்காமலும் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்து.
(குறிப்பு)
3ம், 4ம் பாடங்கள் தேவனுடைய வார்த்தையைக் குறித்ததாகவும் 5ம், 6ம் பாடங்கள் ஜெப வாழ்க்கையைக் குறித்தாகவும் இருக்கிறது.
(வார்த்தையை தியானிப்பதிலுள்ள நான்கு நிலைகள்)
2. வார்த்தையின்; பேரில் தியானம் செய்வதைப் பின்வரும் நான்கு படிகளாகப் பிரிக்கலாம். பின்வரும் உதாரணம், சீஷத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஒரு சகோதரியினால் எழுதப்பட்டது. தியான நேரக் குறிப்புகள், கவனமாக வாசித்து ஒவ்வொரு படிக்குமுள்ள வித்தியாசங்களை நன்கு கவனித்துப் பார்.
(குறிப்பு)
மனதில் உருவாகும் ஒரு எண்ணத்தைப் பழக்கப் படுத்திக் கொள்வதற்கு முன்பாக அதை முதலாவது நன்கு புரிந்து கொள்வது முக்கியமாக இருந்த போதிலும் அதை உடனே பழக்கத்தில் கொண்டு வருவதின் மூலமாகப் பயிற்சி பெறுவோர் அதை நன்கு புரிந்து கொள்வார்கள். எனவே, வார்த்தையைக் கற்றுக் கொள்வதிலுள்ள நான்கு படிகளை விளக்கிக் கூறுவதில் அதிக நேரம் செலவிடாமலிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, பயிற்சி பெறுவோர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட படிகளை அறிந்திருந்தார்களானால், அவர்கள் அதைப் பழக்கப்படுத்த ஆரம்பித்து விடலாம். ஒரு எண்ணம் அல்லது கருத்தை விளக்கிக் கூறும் போது மாதிரிகளும் உதாரணங்களும் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன், இதைப் படிக்கிற நேரத்தில் அது பற்றிய தங்கள் கருத்தைக் கூறி விமர்சனம் செய்வதின் மக்கியத்துவத்தை மறந்;து விடக் கூடாது.
தலைப்பு: பணிவிடை செய்யும் ஒருவர். லூக்கா 22:24-27
கூர்ந்து நோக்குதல்
சீஷர்கள் தங்களில் யார் பெரியவன் என்று வாதாடிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களுடன் பேசி, ‘புற ஜாதிகளின் ரர்ஜாக்கள அவர்களை ஆளுகிறார்கள். அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் எனப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக் கூடாது. உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், அரசாளுகிறவன் பணிவிடைக்காரணைப் போலவும் இருக்கக் கடவன். எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவனோ அல்லது பணிவிடைக்காரனோ? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும் நான் உங்கள் நடுவிலே பணிவைடைக்காரனைப்போல் இருக்கிறேன் என்று கூறினார்.
விளக்கம் சொல்லுதல், ஆராய்தல், தியானித்தல்
1. இயேசுவின் இருதயத்தில் என்ன எண்ணம் இருந்ததென்று சீஷர்களுக்கு விளங்கவில்லை. இந்த வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்புதான் இயேசு தாம் அனுபவிக்கப் போகும் பாடுகள், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகும் ஒருவன், இவைப் பற்றித், தமது சீஷருடன் அவர் அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது பேசிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட துக்ககரமான சூழ்நிலைகளிலும், இயேசு தமது இருதயத்தில் என்ன நினைக்கிறார் என்பது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்களது சொந்தப் பதவியைப் பற்றி சீஷர்கள் தன்னலமான எண்ணங்களையே கொண்டிருந்தனர்.
2. தங்களில் யார் பெரியவன்? என்பது குறித்து சீஷர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய போராட்டம் ஒன்றும் புதியதல்ல. இதற்கு ஒரு வருந்தத்தக்க உதாரணம் என்னவெனில், செபதேயுவின் இரண்டு குமாரரும் இயேசுவிடம் வந்து, தந்திரமான எதிர்ப்பார்ப்புடன் தாங்கள் இயேசுவின் வலது, இடது பாரிசத்தில் உட்காரும்படி உத்தரவு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதுதான். (மாற்கு 10:37). இதைக் கேட்ட மற்ற சீஷர்கள் ஆத்திரமடைந்து எரிச்சலானார்கள் (மாற்கு 10:41)
3. அவர்கள் இயேசுவின் போதனையையும் மாதிரியையும் தங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்புதான் சீஷர்கள் இதுபோன்ற ஒரு பிரச்சனையை எழுப்பின போது, இயேசு அவர்களுக்கு ஒரு முக்கியமான போதனையை அளித்திருந்தார். ‘உங்களில் எவனாவது முதன்மையுள்ளவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக் காரனாயிருக்கக் கடவன் (மாற்கு 10:43-44) மேலும் இயேசு, அவர்களுடைய போதகராக இருந்த போதிலும், தாம் ஊழியம் செய்யும் படியாக வந்தார் என்று கூறினார் (மாற்கு 10:45 மற்றும் யோவான் 13:14) இந்தப் பாடத்தை சீஷர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரமாக மறந்த விட்டார்கள்,
ஆழ்ந்து சிந்தித்தல்
நான் பெரியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையினால், என்னுடைய இருதயத்திலும் எப்போதும் ஒரு போராட்டம் இருந்து கொண்டே இருந்தது.
தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் சிறந்தவளாகவும், முதன்மையாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது மட்டுமல்ல, மற்றவர்கள் என் கணவன், பிள்ளைகள் மூலம் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலையும் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பெரியவளாக இருப்பது என்பது, உலகத்தினால் அங்கீகாரம் பெறுவதை;க் காட்டிலும் தேவனால் அங்கீகாரம் பெறுவதினால் மட்டுமேயாகும். ஆனால், தேவனிடமிருந்து மனிதனிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கு நான் எவ்வளவு முயற்சி செய்திருக்கிறேன்? தேவனுடைய ராஜ்யத்தின் கொள்கை - ஒருவன் உயர்த்தப்பட வேண்டுமானால் அவன் தன்னைத்தானே தாழ்த்த வேண்டும் என்பது, உலக நியதியிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. எனவே, என் தேவனுடைய ராஜ்யத்தின்; கொள்கையையும், அதே சமயத்தில் உலகத்தின் நியதியையும் கடை;ப்பிடித்து வெற்றி பெறலாம் என்னும் என் எண்ணம் சாத்தியப்படாது என்று உணர்ந்து காண்டேன்.
செயல் படுத்துதல்
நான் முதலாவது சீஷத்துவப் பயிற்சியை ஆரம்பித்போது, என்னுடைய நோக்கம் முதல் தரமாக செய்ய வேண்டும். சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான். இருந்த போதிலும் கடந்த சில மாதங்களில் என்னுடைய உடன் சகோதரிகளுடன் சேர்ந்து படித்த போது அந்தப் பெருமை சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்து விட்டது. என்னுடைய உடன் சகோதரிகள் தூய்மையானவர்களாகவும் மனவுருக்கமும் மன உறுதியுமுள்ளவர்களாக இருப்பதை நான் உணர்ந்தேன். கர்த்தருக்குள்ளாகத் தாங்கள் முற்றிலுமாக மாற்றப் பெற வேண்டும் என்னும் வாஞ்சை அவர்களுக்கு அதிகமாக இருப்பதைப் பார்த்தேன். அவர்கள் மூலமாக நான் என்னுடைய பெருமையையும் பேராவலையும் கண்டுணர்ந்;து கொள்ள முடிந்தது. அதற்காக நான் மனஸ்தாபப் பட்டேன். இப்போது அவர்களுடைய தூய்மையிலிருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். அவர்கள் மூலமாய் வரும் சவால்களை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். ஒரு பணிவிடைக்காரியாக வாழ்வதற்கு இந்த வாரத்தில் ஒரு சில விஷயங்களை நான் பழக்கத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
எனது சிறு குழுவின் தலைவருக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சரீரப் பிரகாரமாக பெலவீனமாக இருக்கும் நிலைமையில், அடுத்த வாரத்துக்குரிய பாடத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் என் குழுத் தலைவருக்கு ஏதாவது உணவு தயாரித்துக் கொடுப்பேன். அக்டோபர் மாதம் 1ம் தேதி நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்காக மதிய உணவு ஆயத்தம் செய்துதர எனது சிறு குழு தீர்மானித்திருக்கிறது. அச்சமயம் எனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டு வேறு ஏதாவது இலகுவான பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று நான் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்ததை எண்ணி இப்போது குற்ற உணர்வடைந்தேன். ஆனால் இப்போது நான் முழு மனதோடு உண்மையான சந்தோஷத்தோடும் உணவு ஆயத்தம் செய்வேன்.
கூர்ந்து நோக்குதல்
- பொருளடக்கத்தின் சுருக்கம் என்ற தலைப்பின் கீழ் வருகிறது
ழ இது பொருளடக்கத்தை ஒருவர் தமது சொந்த வார்த்தைகளின் சுருக்கமாகக் கூறுவது.
- ஒரு பகுதியின் சுருக்கமான வரிவடிவம் என்றும் கூறலாம்.
ழ கூர்ந்து கவனித்தால் ஒரு பகுதியின் முக்கியமான சிறப்புக் குறிப்புகளைத் தெரிவிக்கிறது.
- கூர்ந்து நோக்குதலில் பாடப் பகுதியைப் பலமுறை திரும்பத் திரும்ப வாசிப்பது அவசியமாகிறது.
ழ பகுதியின் அர்த்தத்தைக் குறித்து யோசனை செய்து கொண்டு பகுதியைப் பலமுறை வாசிப்பது அவசியம்.
- ஆய்வு செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் பகுதியை நன்கு கவனித்து வாசிப்பது ஒரு முன் நிபந்தனை.
ழ பகுதையைப் போதிய அளவு புரிந்துணர்ந்து கொள்வது. அதை நுணுக்கமாக ஆய்வு செய்து தியானிக்க அவசியமானதாக இருக்கிறது.
- கவனிக்கப்படும் குறிப்புகளை எப்பொழுதும் எழுதி வைக்கத் தேவையில்லை.
ழ ஏற்கனவே, தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானம் செய்யப் பழகியுள்ளவர்களுக்குத் தங்கள் கவனத்தில் வருபவற்றை எழுதிவைப்பது தேவையில்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் பயிற்சி பெறும் காலத்தில் கவனத்தில் வருபவற்றை எழுதிக் கொள்வது நல்லது என்று பரிந்துரைக்கப் படுகிறது.
விளக்கம் சொல்லுதல், ஆராய்தல் மற்றும் தியானித்தல்.
- கூர்ந்து கவனித்தலில் செய்ததைக் காட்டிலும் அதிகம் நுணுக்கமாகவும் திட்டவட்டமாகவும் வேதாகம பாகத்தைப் பார்க்க வேண்டும்;.
ழ கூர்ந்து கவனித்தல் ஒரு பகுதியை முழுமையாகவும் விசாலமாகவும் மேலோட்டமாகவும் பார்ப்பதாக இருந்தால், விளக்கம் சொல்லுதல் அப்பகுpதயை சிறு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்து பார்ப்பதாக இருக்கிறது. கூர்ந்து கவனித்தலை, ஒரு மரமடர்ந்த காடு முழுவதையும் படம் பிடிப்பதற்கு ஒப்பிட்டால், ஆய்வு, தியானம் இவ்றைறைக் காட்லுள்ள ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒப்பிடலாம்.
- கடினமான வார்த்தைகளுக்கும் சொற்றொடர்களுக்கும் விளக்கம் கூறுதலில் அடங்கும்.
ழ சில வேளைகளில் ஆய்வு செய்து தியானம் செய்யும் போது வேதாகம அகராதி, வேதாகம வியாக்கியானப் புத்தகம் (கம்மென்டரி) வேதாகமக் கைப்புத்ததகம் போன்றவற்றை உபயோகிக்க வேண்டியதாக இருக்கும். எளிதில் கையாளக் கூடிய சில குறிப்புரைகளைத் (ரெப்பரென்ஸ்) தலைவர் அறிமுகப்படுத்தி அவற்றை எப்படி உபயோகிப்பது என்றும் காண்பித்தால் அது பயிற்சி பெறுவோருக்கு அதிக உதவியாக இருக்கும்.
- அந்தப் பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரி.
ழ பகுதியைச் சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து அவற்றுக்குத் துணைத் தலைப்புக் கொடு.
- ஒவ்வொரு பிரிவின் அர்த்தத்தையும் எடுத்தெழுது.
ழ அந்தப் பகுதியில் கற்பிக்கப்பட்ட பாடங்களையும் அவற்றின் முக்ககியத்துவத்தையும் ஒன்று சேர்ப்பது சம்பந்தப்பட்டது.
- பயிற்சி பெறுவோரில் பலருக்குப் பொதுவாக மிகக் கடினமானதும் பழக்கமில்லாததுமான ஒரு முறையாகும்.
ழ முன்பு ஒரு போதும் தேவனுடைய வார்த்தையைப் பகுதிகளாகப் பிரித்து வாசித்திராத பயிற்சி பெறுவோர், ஆய்வு செய்தலையும் தியானம் செய்தலையும் மற்ற படிகளிலிருந்து பேறுபடுத்துவதில் சிரமம் காணலாம். எனவே, ஒரு உதாரணத்தை உபயோகித்துத் தலைவர்கள் அவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும்.
ஆழ்ந்து சிந்தித்தல்.
- ஆய்வு செய்தல், தியானம் செய்தல் ஆகியவற்றின்; போது கண்டுபிடிக்கப்பட்ட வெவ்வேறு அர்த்தங்களையும் பாடங்களையும் ஆழ்ந்து சுய சிந்தனை குறிப்பிடுகிறது.
ழ ஏதாவது புதிதாக அறிந்தணர்ந்து கொண்டவவை சவால்கள், அறிக்கை செய்ய வேண்டிய பாவங்கள், போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது.
- ஆழ்ந்த சுய சிந்தனை தனிப்பட்ட உள் உணர்வு சார்ந்தது.
ழ கூர்ந்து கவனித்தல், விளக்கம் சொல்லுதல் ஆகியவை புற நோக்கு சார்ந்த நிலை. அதாவது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஆழ்ந்த சுய சிந்தனை, உள் உணர்வு சார்ந்த நிலை. முதல் இரண்டு நிலைகளும் ‘வேத பகுதி என்ன சொல்லுகிறது? என்ற கேள்வியைப் பொறுத்ததாக இருக்கிறது. ஆனால், ஆழ்ந்த சுய சிந்தனையானது, ‘வேத பகுதியிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன், என்ன உணர்ந்து கொண்டேன்’ என்ற கேள்வியைப் பொறுத்தாக இருக்கிறது.
இருந்த போதிலும் ஆழ்ந்த சிந்தனை என்பதை ஒருவருடைய மனக் கிளச்சி, உணர்வுகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டது என்று நினைக்கக் கூடாது. ஆழ்ந்த சுய சிந்தனை ஒருவர் கண்டுபிடித்த உண்மையாகிய கண்ணாடியில் அவரைப் பிரதிபலித்துக் காட்டுவது சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதன் படி ஆழ்ந்த சிந்தனையானது வேத பகுதி எடுத்துக் காட்டுவதை ஆதாரமாகக் கொண்டு என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? நான் எப்படி தேவனுடைய வார்த்தையின்படி ஜீவிக்காமல் இருக்கிறேன் என்று கேட்கிற தற்பரிசோதனை அடங்கியுள்ளதர்க இருக்கிறது.
- ஆழ்ந்த சுய சிந்தனையில் பரிசுத்த ஆவயிhனவரின் கிரியை மிகத் தெளிவாக இருக்கிறது.
ழ கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல் ஆகியவற்றிலும் ஆவியானவர் கிரியை செய்கிற் போதிலும், ஆழ்ந்த சுய சிந்தனயே ஆவியானவர் மிகவும் ஆழமாகக் கிரியை செய்கிற பகுதியாக இருக்கறி;து. இது ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் நம்மை முழுமையாக மாற்ற விரம்புகிறார். ஆழ்ந்த சுய சிந்தனையே, பயிற்சிக்கும், வார்த்தையின் சத்தியங்களை வாழ்க்கையில் செயல்படுத்துதலுக்கும் வழிநடத்தி முடிவாக ஒன்று சேர்க்கும் சங்கிலியைப் போல் இருக்கிறது,
செயல்படுத்துதல்
- செயல்படுத்துதலுக்கு ஒருவருடைய மனவுறுதி தேவை.
ழ கூர்ந்து கவனித்தலும் விளக்கம் சொல்லுதலும் ஒருவருடைய அறிவு அல்லது புரிந்து கொள்ளும் திறனுடன் சம்பந்தப்பட்டதானால், ஆழ்ந்த சுய சிந்தனை ஒருவருடைய இருதயத்துடனும் செயல்படுத்துதல் அவருடைய மனவுறுதியுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஒருவர் தனது ஆழ்ந்த சுய சிந்தனையில் தாம் உணர்ந்ததும் நினைத்ததுமானவற்றைச் செயல்படுத்தத் தீர்மானம் செய்;து அதைத் தன் தினசரி வாழ்க்கையில் உண்மையாகவே உபயோகிப்பதைச் செயல்படுத்துதல் குறிப்பிடுகிறது.
- செயல்படுத்துதல் திட்டவட்டமானதும் எளிதில் உணரக் கூடியதாகவும் இருப்பது அவசியம்.
- ஒருவரது மனப்பான்மை, குணாதிசயம் அல்லது செயல்பாட்டின் மூலமாக செயல்படுத்துதல் அவரது வாழ்க்கையில் எளிதாக உணரக்கூடிய ரூபமெடுக்கிறது.
- ஒருவர் தன்னுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளத் தீர்மானம் செய்வதும் ஒரு செயல்படுத்துதல் என்பதை மனதில் கொள்ள் வேண்டும்.
செயல்படுத்துதல் என்பது எப்பொழுதும் ஒரு செய்கை அல்லது நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக இன்னாருக்காக நான் இதைச் செய்வேன் என்று சொல்வதும், நான் ஒரு மனத்தாழ்மையுள்ள நபர் ஆகுவேன் என்பதுமாகிய இரண்டுக்கும் செயல்படுத்துதலேயாகும். யாருக்காகவாவது ஜெபிக்க வேண்டும் என்ற தீர்மானமும், யாராவது ஒருவரைப் பற்றிக் கொண்டிருந்த மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் செயல்படுத்துதலைச் சார்ந்ததேயாகும் என்று பயிற்சி பெறுவோருக்கு நினைப்பூட்ட வேண்டும். ஆனாலும் மனப்பான்மையில் iமாற்றம் செய்வதும் ஒரு செய்லபடுத்துவதேயாகும் என்ற உண்மையைத் தகாத வழியில் உபயோகிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், செயல்களில் மாற்றம் கொண்டுவராத மனப்பான்மையாகக் கருத முடியாது.
- செயல்படுத்துதல் நிதானமாக, படிப்படியாக செய்யப்படுவதாக இருக்கலாம்.
ஒருவருக்கொருவர் விரோதிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், உடனடியாக ஒப்புரவாக முடியாமல் இருக்கலாம். ஆவிக்குரிய வளர்ச்சியும் ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது. ஆவிக்குரிய வளர்ச்சியில் படிப்படியாக முன்னேறுவதை அசட்டை செய்யாதிருக்க்மைபடி பயிற்சி பெறுவோருக்கு புத்திமதி கூற வேண்டும். இக்கணமே உடனேயே, எல்லா உண்மைகளையும் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்ற அவசரத்துடன், அதிகமாக செய்லபடுத்துதலை முயற்சி செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டாம்.
(குறிப்பு)
தியான நேரம் வைத்துக் கொள்வதில் புதிதானவர்கள், தியான நேரம் திட்டவட்டமாகக இந்த விதத்தில் அல்லது அந்த விதத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொள்ளலாம். தியான நேரத்தின் மூலமாக தேவனைச் சந்திப்பதின் மகிழ்ச்சி மனதில் கிளர்ந்தெழச்; செய்யும்படி உதவி செய்வதும் இந்தப் பாடத்தின் நோக்கங்களுள் ஒன்று என்பதைத் தலைவர்கள் மறக்கக் கூடாது.
சுருக்கம்
கூர்ந்து நோக்குதல்
ஆய்வு செய்து ஒப்பிட்டுப் படிக்கும் வேதபாடத்தின் முதலாவது நிலை கூர்ந்து நோக்குதல். இது பாட பகுதியிலிருந்து உண்மைகளைக் கண்டுபிடிப்பதைக் குறிப்பிடுகிற்து. இதைச் செயல்படுத்துவதற்கு சுருக்கமாக் கூறுதல், மீண்டும் எடுத்துக் கூறுதல், வேறே சொந்த வார்த்தைகளில் சுருக்கி எழுதுதல், பாடப் பகுதிகளைச் சிறு பிரிவுகளாகப் பிரித்து துணைத் தலைப்புகள் கொடுத்தல் இவை போன்ற இன்னும் பல முறைகளும் உபயோகிக்கப்படுகின்றன. கூர்ந்து கவனித்தல், ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதத்தைப் படிக்கும் முறையின் நோக்கமாக இல்லாத போதிலும், இது ஒரு முக்கியமான நிலை. ஏனென்றால் கூர்ந்;து கவனித்தல் இந்த வேதபாட முறையின் மற்ற நிலைகளுக்கு அஸ்திபாரமாக இருக்கிறது.
விளக்கம் சொல்லுதல், ஆராய்தல் மற்றும் தியானித்தல்
ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதபாடம் கற்பதில் அடுத்த நிலை விளக்கம் சொல்லுதல். இது கூர்ந்து கவனித்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பகுதியின் அர்த்தத்தைதக் கண்டு பிடிப்பதைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடப் பகுதியின் அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதற்கு ஆய்வும் தியானமும் தேவைப்படுகின்றன. கூர்ந்து கவனித்தலின் போது வெளிப்புறமாக உள்ள உதவி வாய்ப்புளான அகராதி, வேத வியாக்கியானப் புத்தகம் போன்றவை (கமென்ட்ரி) பயன்படுத்தப்படுகிறது. ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வேதபகுதியின் ஆழ்ந்த புரிந்துணர்வையும் விளக்கத்தையும் தேடுவதற்கு தியானம் பயன்படுகிறத.
ஆழ்ந்து சிந்தித்தல்
ஆய்வு செய்து ஒப்பிட்டு வேதபாடம் கற்பதின் மூன்றாவது நிலை ஆழ்ந்து சுய சிந்தனை, கூர்ந்து கவனித்தலும், விளக்கம் சொல்லுதலும் வேதாகமத்துடன் சம்பந்தப்பட்டிருந்தால், சுய தியானம் ஒரு நபரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறருது. அத்துடன் கூர்ந்து கவனித்தலும் விளக்கம் சொல்லுதலும் புற நோக்கு சார்ந்ததாக இருக்கும்போது, ஆழ்ந்த சுய சிந்தனை உள் உணர்வு சார்ந்ததாக இருக்கிறது. ஆழ்ந்த சுய சிந்தனை நமது இருதயங்களிலும் மனதிலும் நிகழ்கின்றவற்றைக் குறிப்பிடுகிறது. அதாவது சவால்கள், உணர்வுகள், தற்பரிசோதனை விளக்கம், கூறுதலின் மூலமாகக் கண்டு பிடிக்கப்பட்ட உண்மை, பாடங்கள் பற்றியதாக இருக்கிறது.
செய்லபடுத்துதல்
இந்த வேத பாடத்தின் கடைசி நிலை வாழ்க்கையில் செய்லபடுத்துதல், ஆழ்ந்த சுய சிந்தனை நமது இருதயங்களைப் பற்றியதாக இருந்தால் செயல்படுத்துதல் நமது செய்கைகளைப் பற்றியதாக ஆழ்ந்த சிந்தனையானது (விளக்கம் சொல்லுதலின்) மூலமாகக் கண்டு பிடிக்க உண்மை, பாடங்களை நாம் செய்லபடுத்த வேண்டும் என்று நினைக்கவும் உணரவும் செய்யும். வரம்புக்குட்பட்டது. மாறாக செயல்படுத்துதல் நாம் கண்டு கொண்ட உண்மை, பாடங்களை நமது வாழ்க்கையில் செய்லபடுத்தும் படி தீர்மானங்களும் திட்டங்களும் வகுக்கும் வரம்புக்குட்பட்டது.
3. இவ்வாறாக உங்களுடைய தியான நேரத்தை மேற்கூறிய முறையில் பதிவு செய்வீர்களானால் இந்த நான்கு நிலைகளில் எது அதிக கடினமானதாகவும் எது எளிதாகச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்?
- நீங்கள் அனைவரும் உங்கள் தியானத்தை முடிந்திருப்பீர்கள். அந்நேரத்தில் நீங்கள் எழுதி வைக்கக் கூடியதற்கும் அதிகமான விஷயங்களை உணர்ந்திருப்பீர்கள்” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுவதின் மூலமாகப் பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்க வேண்டும். பயிற்சி பெறுவோர் தியான நேரத்தை ஏதோ சீஷத்துவப் பயிற்சி வகுப்புக்குரிய வீட்டுப்பாட பயிற்சி என்று மட்டுமே கருதாத படிக்குத் தலைவர்கள் அவர்களை ஊற்சாகப்படுத்த வேண்டும்.
(நான்கு விதங்களான தியான நேரக் குறிப்பு)
4. ஒரு தியான நேரக் குறிப்பு பொதுவாகப் பின்வரும் வடிவமைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்க உபயோகிக்கவும்.
- நான்கு விதமான தியான நேரக் குறிப்புகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் அறிக்கவும் வேண்டியது அவசியமாகும்.
ஏ
1. வகை 1ஏ ஆழ்ந்த சுய சிந்தனையை மாத்திரம் பதிவு செய்கிறது. ஒருவருக்கு சவாலாக விளங்கும் பகுதி மனதைத் தொட்ட பகுதி அல்லது பாடப் பகுதியிலிருந்து புதிதாக உணரப்பட்டது போன்றவற்றை மாத்திரம் குறிப்பிட்டு எழுதி வைப்பது முதலாவது வகை. பயிற்சி பெறுவோரில் பலர் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
2. வகை 2பி - கூர்ந்து கவனித்தவற்றையும் ஆழ்ந்த சுய சிந்தனையையும் பதிவு செய்கிறது. ஆழ்ந்து விரிவாகக் கற்பதும், இதிலிருந்து கிடைக்கப்பெறும் சவால்களும், பாடப்பகுதியை நாம் எவ்வளவு நன்றாகக் கூர்ந்து கவனிக்கிறோமோ அதைப் பொறுத்ததாகத்தான் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் பாடப் பகுதியை மூன்றுமுறை அல்லது அதற்கும் அதிகமாக வாசித்து, அந்தப் பகுதியை; தன் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாக எழுதி அதன்பின்பு தங்கள் சுய சிந்தனைகளைக் குறிப்பிட்டு எழுதி வைக்கிறார்கள்.
3. வகை 3சி - கூர்ந்து நோக்குதல், ஆழ்ந்த சுய சிந்தனை செயல்படுத்துதல் இவற்றைப் பதிவு செய்கிறது. வகை 3, வாழ்க்கையில் செய்லபடுத்துதலையும் சேர்த்துக் கொள்ளுகிறது. இதைச் சார்ந்தவர்கள் படித்துக் கொண்ட பாடங்களை எப்படித் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்வார்கள் என்பதைக் குறிப்பிட்டுத் திட்டமாக எழுதுவார்கள்.
4. வகை 4டி - கூர்ந்து நோக்குதல், விளக்கம் கூறுதல் ஆழ்ந்த சுய சிந்தனை செயல்படு;துதல் ஆகிய யாவற்றையும் குறிப்பிட்டுப் பதிவு செய்கிறார்கள். நான்கு வகைகளிலும் இது மிகக் கடினமானது. உண்மையில் விளக்கம் சொல்லுதலில் பழக்கப்பட்டுள்ள ஒருவர், ஆய்வு செய்து ஒப்பிடும் முறையான வேதபாட வகுப்பை நடத்துவதற்கு ஆயத்தமாக இருப்பவர் என்று கருதப்படலாம். தியான நேரத்தைப் பழக்கப் படுத்திக் கொள்வதின் ஒரு முக்கியமான குறிக்கோள் இது என்பதைப் பயிற்சி பெறுவோருக்கு நினைப்பூட்ட வேண்டும்.
(குறிப்பு)
மக்கள் ஒரே நாளில் மாறுவதில்லை. அது போலவே பயிற்சி பெறுவாரும் படிப்படியாக, மெதுவாக வளர்ச்சியும் மாற்றமும் அடைவார்கள் என்பதைத் தலைவர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் பயிற்சி பெறுவோருக்கு அதிகப்படியான வீட்டுப்பாட பயிற்சியும் தியான நேரமும் சேர்த்துக் கொடுப்பதின் மூலமாக அவர்களை உடனே, மாற்றும் படி அல்லது வளர்ச்சியடையும்படி வலுக்கட்டாயப்படுத்த முயற்சி செய்யும் சில தலைவர்கள் இருக்கின்றனர். செய்லபடுத்துதல் படிப்படியாகவே முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதைத் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
5. மேற்குறிப்பிட்ட இந்த நான்கு வகைகளில் ஏ, பி, சி, டி (1-4) எந்த வகையை நீ விரும்புகிறாய்?
- பயிற்சி பெறுவாரில் யாராவது புரிந்து கொள்ளும் திறனில் குறைவுள்ளவர்களாக அல்லது இயல்பான விருப்பம் இல்லாதவர்கiளாகத் தங்கள் தியான நேரக் குறிப்பைப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பின் படி எழுதக் கஷ்டப்படுவார்களானால், அவர்கள் தங்கள் வேத வாசிப்பில் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்த வேத வசனங்களை மாத்திரம் எழுதும்படி அவர்களை ஊக்குவியுங்கள்.
(குறிப்பு)
6வது கேள்வி ஒரு விதத்தில் இந்தப் பாடத்திலுள்ள மிக முக்கியமான கேள்வியாகும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒதுக்கப்படும் நேரம், ‘அந்தக் கேள்வியின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது’ என்ற கொள்கையின்படி, இந்தக் கேள்விக்குப் போதுமான நேரம் கொடுக்கப்பட வேண்டும். எனவே, இந்தப் பாடத்தில் 6-வது கேள்விக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது கொடுக்கப்பட வேண்டும்.
(தியான நேரப் பழக்கம்)
6. உங்களுடைய தலைவர் தேந்தெடுத்த வேத பகுதியை உபயோகித்து, உங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டு, உங்கள் தியான நேரத்தைப் பதிவு செய்யுங்கள். பின்பு உங்கள் குறிப்புகளைக் குழுவிலுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்;து கொள்ளுங்கள்.
- தலைவரினால் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியைக் கொண்டு பயிற்சி பெறுவோர் ஒரு தியான நேரக் குறிப்பை எழுதி வைக்கவும். தங்கள் குறிப்பைக் குழுவிலுள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவற்றைக் குறித்துத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் ஊக்குவியுங்கள்.
- பயிற்சி பெறுவோரில் அநேகருக்க வேதாகமத்தில் நன்கு தெரியாத, நிருபங்கள் அல்லது தீர்க்கதரிசன புத்தகங்களிலிருந்து பகுதிகளை எடுக்காமல், கதை வடிவிலுள்ள சரித்திரம் சார்ந்த புத்தகங்களிலிருந்து தியான நேரத்திற்கான பகுதியைத் தெரிந்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.
முடிவுரை
1. சுருக்கம்
மனதின் வரைபடத்தை உபயோகித்துப் பாடத்தை சுருக்கமாகக் கூறி பயிற்சி பெறுவோர், தங்கள் இருதங்களில் ஆவியானவர் தெளிவூட்டிப் புதுப்பித்த சத்தியங்களைத் திரும்ப ஆராய்ந்து பார்க்கும் படி உதவி செய்ய வேண்டும்.
2. தீர்மானங்களும் செயல்படுத்துதலும்
பயிற்சி பெறுவோர் பாடத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை எழுதி அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தும் படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
3. செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
பயிற்சி பெறுவோர் தங்கள் தீர்மானங்களையும் அவற்றை செயல்படுத்துவதையும் பற்றி ஒவ்வொருவராகக் கிரமப்படி பகிர்ந்து கொள்ள வேண்டம்.
4. முடிவில் துதி செலுத்துதல்
5. ஜெபம்
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய உள்ளங்களில் ஒளியூட்டித் தெளிவு படுத்திப் புதுப்பித்த சத்தியங்களுக்காக நன்றி கூறி தேவனைத் துதிக்க வேண்டும்.
- அவர;கள் இருதயங்களில் தேவன் கண்டித்து உணர்த்தியுள்ள எந்தப் பாவமும் இருக்குமானால் அதை அறிக்கை செய்து, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.
- அவர்களுடைய குணமும் வாழ்க்கையும் முற்றிலும் மாற்றம் அடைவதற்குச் செய்யத் தேவைப்படும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கவும்.
- அவர்களுடைய குணத்தையும் வாழ்க்கையையும் பரிசுத்த அவியானவர் முற்றிலும் மாற்றும்படி ஜெபிக்கவும்.
6. வீட்டுப்பாடப் பயிற்சி
1) அன்றாடக வாழ்க்கை வீட்டுப் பயிற்சி - பயிற்சி பெறுவோர் தியான நேரத்தில் ஈடுபடும் போது வாழ்க்கையில் தாங்கள் காணும் மாற்றங்களை (மாற்றங்கள் இருக்குமானால்) எழுதி வைக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.
2) வாசிக்கும்படி கொடுக்கப்படும் பகுதி
3) மனப்பாட வசனங்கள் - கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கராலும் விவாசிக்கிறவன் எவனோ, அவனுக்கு இரட்டிசிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. ரோமர் 1:16
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3:16-17.
4) தியான நேரம்
விதைக்கிறவன் உவமை மத்தேயு 13:1-13
சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயம்
சீஷத்துவப் பயிற்சித் தலைவர் ஒரு சாதாரண தொழில் நுட்ப வல்லுனர் அல்ல. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான சந்திப்பு - ஒரு தனிப்பட்ட சந்திப்பு - சிறு குழுவில் நடைபெறுகிறது. இதன் விளைவாக சீஷத்துவப் பயிற்சியில் வெற்றி பெற, தலைவர்களுக்குச் சிறு குழுக்களை வழி நடத்துவதற்கான திறன்கள் மட்டும் இருந்தால் போதாது. பயிற்சி பெறுவோர் தலைவருடைய திறமைகளைக் காட்டிலும் அதிகமாக, அவருடைய பண்பு, குணாதிசயத்தையே பார்க்க விரும்புகிறவார்கள். எனவே, சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயம் அதிகமாக வற்புறுத்தப்பட வேண்டிய ஒரு நற்பண்பாக இருக்கிறது.
ஒரு சீஷத்துவப் பயிற்சித் தலைவரின் குணாதிசயத்தை இரு பாகங்களாக கவனிக்கலாம். முதலாவது அவருடைய ஆவிக்கரிய பிரகாரமான தன்மை உருவாக்கப்பட்டு தேவனோடுள்ள அவரது உறவு உறுதியாக்கப்படுவது.
இரண்டாவது, மற்றவர்களோடு தலைவருக்குள்ள உறவில் உருவாக்கப்பட்ட அவருடைய தனித் தன்மை (குணம்) நேர்மை ஆகியவை. குணாதிசயம் என்பது, ஒருவர் மக்களோடு கொள்ளும் உறவுகள், விவகாரங்களிலிருந்து சாதாரணமாக வெளிப்படும் ஒரு மனப்பான்மை என்று அநேகர் கருதுகிறார்கள். வேறு வார்த்தைகளி;ல் கூறுவோமானால், குணாதிசயத்தைப் பற்றிப் பேசும்போது, மக்கள் அநேகமாக இந்த இரண்டாவது பாகத்தைப் பற்றி மாத்திரம் நினைக்கிறார்கள். குணாதிசயம் என்பது மக்களுடன் உறவு கொள்வதற்கு முன்பாகவே அவர் தேவனோடு கொண்டுள்ள உறவிலிருந்தே வெளிப்படும் மனப்பான்மை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால், மக்கள்பால் நாம் கொண்டிருக்கும் மனப்பான்மையைக் காட்டிலும் தேவன் பால் நாம் கொண்டிருக்கும் மனப்பான்மையே உறுதியானதும் தீர்மானிக்கிறதுமான அடித்தளமாக அமைகிறது.
இந்த விதத்தில், சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள்; தங்கள் வாழ்க்கையில் தேவனோடு கொள்ளும் ஐக்கியத்திற்கு முதலிடம் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய ஆயத்தமுள்ளவர்களாகவும் எல்லாக் காரியங்களிலும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சீஷத்துவப் பயிற்சித் தலைவர்களின் குணாதிசயம் அவர்களுக்குத் தேவனோடுள்ள உறவினால் உருவாக்கப்படும்போது, பயிற்சி பெறுவோருடன் உறவு கொள்வதில் அவர்களுடைய குணாதிசயமும் மாற்றப்படும்.
சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் பிறரிடம் அன்பும் மனவுருக்கமும் உடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் சாந்தமும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுடன் மன்னித்து ஏற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். சீஷத்துவப் பயிற்சித் தலைவர்கள் மனத்தாழ்மையுடையவர்களாக மாற்றவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். ஒரு தலைவர் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனையும் மாற்ற முடியாது என்று நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. இருந்த போதிலும் மறந்து விட வேண்டாம் இந்த குணாதிசயம் ஒருவர் தேவனோடுள்ள உறவில் தன்னைத்தானே எவ்வாறு கூர்மையாக்கித் தகுதியுள்ளவராக்கிக் கொள்கிறார் என்பதையே பொறுத்திருக்கிறது.
தலைவரின் தற்பரிசோதனைப் பட்டியல்
தலைவர்கள் தங்கள் தலைமைத்துவத் திறன்களை சுய மதிப்பீடு செய்வதற்கு உதவியாகப் பின்வரும் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 5 4 3 2 1
மனவோட்ட வரை உபயோகம்: இந்தப் படம் முழுவதின் பொருளடக்கத்தையும் நான் போதிய அளவு புரிந்துணர்ந்திந்தேனா?
பாடத்தின் கருப்பொருளையும் ஒவ்வொரு கேள்வியின் நோக்கத்தையும் சரிவரப் புரிந்திருந்தேனா?
ஒவ்வொரு கேள்விக்கும் இடையேயும் ஒவ்வொரு பகுதிக்கு இடையேயும் கடந்து செல்லும் போது சுமூகமாக இருந்ததா?
அறிமுக நடவடிக்கை (ஐஸ் பிரேக்கர்):
அறிமுகப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட அறிமுக நடவடிக்கை பொருத்தமானதாக இருந்ததா?
நான் அறிமுக நடவடிக்கையை நல்ல விதமாகவும் சரியான விதத்திலும் உபயோகம் செய்தேனா?
கேள்வி:
நான் வகுப்பில் சுற்றி நடந்து பயிற்சி பெறுவோர் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டேனா?
பயிற்சி பெறுவோர் கேள்வியைப் போதுமான அளவு புரிந்து கொண்டார்களா?
(திறந்த, ஆம்-இல்லை கேள்விகள்) தெளிவாகவும் விபரமாகவும் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் ஆம் இல்லை என்று மாத்திரம் பதில் கூற வேண்டிய கேள்விகளையும் நான் சம அளவிலும், சரியான விதத்திலும் உபயோகித்தேனா?
கவனித்துக் கேட்டலும் சுருக்கமாகக் கூறுதலும்
பயிற்சி பெறுவோர் விடையளிக்கும் போது நான் அனுதாபத்துடன் கேட்டு, பொருத்தமான பாவனை, சைகை, குரலில் ஏற்றத் தாழ்வு, நேருக்கு நேர் பார்த்தல் ஆகியவற்றை உபயோகித்தேனா? பயிற்சி பெறுவோரின் கேள்விகளையும் விடைகளையும் நான் பயனளிக்கும் விதத்தில் சுருக்கமாக ஒழுங்கு படுத்தினேனா?
திறந்த மனப்பான்மை
பயிற்சி பெறுவோரிடம் நான் மனம் விட்டுப் பேசினேனா? பயிற்சி பெறுவோர் தங்கள் வாழ்ககை, குணாதிசயம் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்களா?
மனம் திறந்து பேசிய பயிற்சி பெறுவோரிடம் நான் எனது அங்கீகாரத்தைக் காண்பித்தேனா?
பகிர்ந்து கொள்ளப்பட்ட விஷயங்களையுப் பாடத்தின் கருப்பொருளுடன் சரியான பிரகாரம் இணைத்தேனா?
ஊக்குவிப்பு.
பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளுக்கு நான் சரியான பிரகாரம் மறுமொழி கொடுத்தேனா?
பகிர்ந்து கொண்டதற்காக அவர்களைப் பாராட்டி நன்றி கூறி ஊக்குவித்தேனா?
நேரத்தை நிர்வகித்தல்:
ஒவ்வொரு வகையான கேள்விக்கும் நான் விவேகத்துடன் நேரத்தை ஒதுக்கினேனா? - கூர்ந்து நோக்குதல், விளக்கம் சொல்லுதல், ஆழ்ந்த சுய சிந்தனை, வாழ்க்கையில் செயல்படுத்துதல் ஆகியவை. பயிற்சி பெறுவோர் கொடுத்த விடைகளி;ன் நீளத்தை நான் சரியான பிரகாரம் கட்டுப்படுத்தினேனா?
பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலை உணர்தல்:
பரிசுத்த ஆவியானவர் ஒளியூட்டித் தெளிவு படுத்துவதை நான் நாடித் தேடினேனா?
பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் ஏவுதலையும் உள்ளத்தில் உணர்ந்து அதின்படி செயல்பட்டேனா?
கண்டு பிடித்தலும் வாழ்க்கையில் செயல்படுத்துதலும்:
பாடத்தில் போதிக்கப்பட்ட வேதாகம சத்தியங்களைப் பயிற்சி பெறுவோர் சரிவரப் புரிந்து கொண்டார்களா?
பயிற்சி பெறுவோர் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையிலும் குணாதிசயங்களிலும் செயல்படுத்துவதற்குத் தீர்மானம் செய்து, சரியான திட்டம் வகுப்பதற்கு நான் அவர்களுக்கு உதவி செய்தேனா?
பயிற்சி பெறுவோரைப் புரிந்துணர்ந்து கொள்தல்:
பயிற்சி பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவர்களுடைய ஜெப விண்ணப்பங்களையும் நான் புரிந்துணர்ந்து கொண்டேனா?
இவ்வாரத்தில் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்பட வேண்டியவர்களையும், ஆலோசனை தேவைப்படுவோரையும் நான் பகுத்தறிந்து கொண்டேனா?
அவரே வனாந்தரத்தில் தனித்துப போய் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். (லூக்கா 5:16)
No comments:
Post a Comment