Thursday, August 18, 2016

நடப்பு விஷயங்கள்

பல நடப்பு விஷயங்களைக் குறித்து குருத்துவ ஆலோசனகைள் வழங்க விரும்புகிறேன்:

1.     போக்கமன்கோ (Pokemon Go): ஆய்வின்படி, அறிமுகப்படுத்தி இரண்டே வாரம் ஆகியிருந்தாலும் உலகளாவிய நிலையில் எல்லா நேரத்திலும் அது மிகவும் பிரசித்தி பெற்ற இணைய விளையாட்டாகத் திகழ்கிறது. பலரும் அதில் பித்தம் பிடித்துப் போனதால் பிரபலமான விளையாட்டாக உருவெடுத்தது. ஆனால், மின்னியல் சுருட்டு போல அதுவும் தன் விளைவை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் வெளிப்படுத்தும். நவீனமயமாகுதல் இதற்கு மூல கர்த்தா என்று நம்புகிறேன். ஜனங்கள் இவ்விளையாட்டின் நிமித்தம் சாக்கடையில் விழுதல், வாகனத்தால் மோதப்படுதல், தடை செய்யப்பட்ட இடங்களில் பிரவேசித்தல் போன்ற புகார் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

2.     இணைய ஆபாசங்கள்: இது உண்மையிலேயே மிக மோசமாக சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இணைய ஊடகங்கள் அனைத்தும் இதன் வழி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றன. முகநூல், டுவிட்டர், வாட்ஸ்ஆப் இன்ன பிற ஊடுகங்களால், நமது சிறுவர்கள் உட்பட, விரும்பத் தகாத வகையில் கவனம் இதனால் திசை திருப்பப்படுகின்றன. தங்கள் பிள்ளைகள் இணையம் வழி என்ன பார்க்கிறார்கள் (வாசிக்கிறார்கள்) என்பதை பத்திரிகை, வாலிபர் சஞ்சிகை, பருவப் பத்திரிக்கை, வாரப் பத்திரிக்கை யாவும் பெற்றோர்களை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. 3-4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட ஆபாசப் படங்களைக் காண்கிறார்கள் என்ற அதிர்ச்சியான செய்திகளை அறிய நேரிடுகிறது. பெரியவர்கள் மெய்நிகர் காமத்திற்கு அடிமையாகிறார்கள் என்பதையும் அறிவோம். தேவன் வழங்கிய நமது குழந்தைகளுக்கு நாமே வழிகாட்டி என்பதை அறிவோமாக. நாம் அவர்களை எல்லா நேரங்களிலும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஜெபத்தின் மூலமும் கூர்மையான கவனிப்பின் மூலமும் கூடுதல் கவனத்தைச் செலுத்தலாம். நமது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் எங்கேயெல்லாம் செல்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

3.     இன சகிப்புத் தன்மையின்மை: மலேசியப் பள்ளிகளில் இப்போது ஒரு மோசமான பிரச்சனை தலையெடுக்கிறது. ஒரு காலத்தில் இனம்-மொழி கருதாமல் சிறுவர்கள் ஒற்றுமையாகப் பழகினர். இன்று ‘அவர்கள்’, ‘நாம்’ என்ற சிந்தனை மனதளவில் தோன்றி விட்டது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் உண்மையில் தங்கள் பிள்ளைகளை, சமய போதனையினிமித்தம் பிற இனத்தவரோடும் மதத்தவரோடும் பழகக்கூடாது என்று தடை விதிக்கிறார்கள். விசுவாசிகளாகிய நாம், இது தவறு என்று நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். நமக்குள் பேதமை கிடையாது! தேவனுக்கு முன்பாக நாம் அனைவரும் ஒன்றே என்பதால் வானவில்லைப் போன்ற வர்ணம் நிறைந்த இந்த மலேசியாவை அனைவருக்கும் சொந்தம் என்று கூறுகிறோம். இந்த இனவாதத்தை நாம் வளர்க்காமல் இருப்போமாக.


தேவன் நல்லவர், அவர் எல்லா நேரத்திலும் நல்லவர்! தேவ பிள்ளைகளாகிய நாம் இந்நாட்டில் ஆக்ககரமான மாற்றத்தை உண்டுபண்ண ஞானத்தையும் மன உறுதியையும் தருவாராக. 

No comments:

Post a Comment