Wednesday, August 30, 2017

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா?

மலேசிய இந்தியக் குடும்பங்களுக்கு ஷலோம்

குடும்ப நிறுவனம் முன்னேற்றம் காண்கிறதா? சிதைவுறுகிறதா? பழமைவாதிகள் ஒருவேளை முன்னேற்றம் காண்கிறது என்று சொன்னாலும், தீவிரவாதப் போக்குடையவர்கள், ஆதி நோக்கத்தில் இருந்து வெகு தொலைவு சென்றுவிட்டதால், இன்றைய குடும்ப நிறுவனத்திற்கு எதிர்காலம் இல்லை என்று வாதிடுவர். அற்ப காரணங்களுக்காக விவாகங்கள் முறிகின்றன. இல்லங்களில் பாதுகாப்பும் சமாதானமும் இல்லாததாலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நேரத்தை ஒதுக்க முடியாததாலும், அவர்கள் வெளியே சென்று நண்பர்களிடமும் சகாக்களிடமும் பாதுகாப்பை நாடுகின்றனர். தங்கள் பாடுகளுக்கு காரணம் மற்றவர் என்று ஒருவரை மற்றவர் குறைகூறுவதால், வெறுப்பில் மூழ்குகின்றனர். தாங்கள் வறுமையில் வாடினால், அரசாங்கத்தையும், கல்வி முறையையும், இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்படுவதையும் வேறு பல காரணங்களையும் பட்டியல் போடுவர். எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், நம் குடும்ப நிறுவனம் ஓர் இக்கட்டான பயணச் சந்திப்பில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வருவோம். குடும்ப உறுப்பினர்கள் மிக அணுக்கமாக பிணையப்பட்டிருந்த முத்தான பழைய காலத்தை நாடுகிறோம். அந்தக் காலத்திற்கு நாம் திரும்பச் செல்ல முடியுமா? அதற்குப் பின்வரும் ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

1.     கலந்துரையாடலுக்கான தேவைகள் – ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வதற்கும் பிரச்சனையைச் சமாளிப்பதற்கும் இது வழிவகுக்கும். தேவனோடு உரையாடி (இதை ஜெபம் என்று அழைக்கிறோம்) வாழ்க்கைப் பிரச்சனையை அவரிடத்தில் வைப்போம்.

2.     பெலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் – தோல்வி மற்றும் நம்பிக்கையற்ற நிலையை ஏற்றுக் கொள்வதற்கு இந்த முயற்சி அவசியம். நம்மை நாமே ஆராய்ந்து, தோல்வியடைந்த சூழ்நிலைக்கு நானும் காரணம் என்று ஒப்புக்கொள்ளுவோம்.

3.     நம்பிக்கையில் ஜீவிக்க வேண்டிய அவசியம் – இயேசு கிறிஸ்துவை நம் வாழ்க்கைக் கணக்கில் சேர்த்துக் கொண்டால், எப்படிப்பட்ட நம்பிக்கையற்ற சூழ்நிலையாய் இருந்தாலும், புது நம்பிக்கையால் பற்றிக் கொள்வோம்.

4.     விடாமுயற்சியின் அவசியம் – முயற்சிக்கு அளவே இல்லை என்று புரிந்து கொள்வோம்.

5.     நண்பர்களுக்காக அவசியம் – சமுதாய மூலதனங்கள் யாவற்றையும் சமுதாய ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வோம்.

6.     மத ரீதியான தேவை – சபைகள் தன்னில் பிளவுபடாமலும் சமுதாய நலனில் சுய மகிமை தேடாமலும் உழைக்க வேண்டும். 


7.     நேசிக்க வேண்டிய அவசியம் – எந்தத் தொடக்கத்திற்கும் நிச்சயமாக இது முக்கியம். தேவன் நம்மை நேசித்ததால் தம் பரிசுத்த குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பினார். ஆகவே, மலேசிய இந்திய சமுதாயத்தை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் அன்பால் அணிவிக்கப்பட வேண்டும். 

No comments:

Post a Comment