ஒரு
காலை ஆராதனையில், பிரான்சிஸ்
என்ற ரோமாபுரி போப்
ஐயர், தங்கள் விசுவாசத்திற்காக சகலத்தையும் காணிக்கையாய் கொடுத்த
சபையாரைப் பாராட்டிப் பேசினார்.
அவர்களை ‘சுவிசேஷ வீரர்கள் ’என்று
புகழ்ந்தார். பவுல் அப்போஸ்தலரோடு
ஒப்பிட்டுப் பேசிய அவர்,
“இந்த சாட்சிக்காக தேவனை
ஸ்தோத்தரிப்பது நன்று என்று
கூறினார். இந்த மெய்யான சாட்சிகளுக்காக களிகூறுவது நலம்.
சுவிசேஷத்திற்காக தங்கள்
ஜீவனை
இழக்கும்
தியாகிகள்
இவர்கள்;
நமது
பெருமைக்குரியவர்கள்! சபையின்
புகழுக்குரியவர்கள்."
செருப்புத் தயாரிப்பாளராக பயிற்சி பெற்ற வில்லியம் கேரி, இந்தியாவில் மேற்கொண்ட சுவிசேத்தின் நிமித்தம் ‘சுவிசேஷத்தின் தந்தை’ என்று புகழடைந்தார். 1787ல் அவருடைய கீர்த்தி தொடங்கியது. கிறிஸ்தவர்கள் யாவரும் உலகம் முழுவதும் சுவிசேஷம் பகர கடமைப்பட்டவர்கள் என்று உற்சாகப்படுத்தினார். “வாலிபனே, நில். தேவன் உள்ளத்தை மாற்றச் சித்தம் கொண்டிருக்கும் போது, நீயும் நானும் உதவாமலேயே அதைச் செய்து முடிப்பார்", என்றார். கொஞ்சமும் கலக்கமின்றி, ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், 1792ல், ‘பெப்டிஸ்ட் மிஷனரி’ சங்கத்தை அமைத்து, ‘‘தேவனிடமிருந்து பெரிய காரியங்களை நாடு; தேவனுக்காக பெரிய காரிங்கள் செய்” என்ற அவர் பிரபலமான சுலோகத்தை முழங்கினார்.
மறு ஆண்டில் அவர் குடும்பத்தோடு இந்தியாவிற்குப் புறப்பட்டார். அங்கு ஏழு ஆண்டுகளுக்கு அவரின் பணிப் போராட்டம் முடங்கிப் போனது. பீட்டர் என்ற அவருடைய மகன் வயிற்றுக் கடுப்பால் (இரத்தபேதி) மரித்துப் போனான். மனைவியின் மனநிலையோ படுமோசமாக பாதிக்கப்பட்டது. "இது மெய்யாக எனக்கு மரன நிழல்கள், ஆனாலும் நான் பின்வாங்கிப் போகாததற்காக மகிழ்கிறேன்; தேவன் நம் மத்தியில் வாசம் செய்கிறார்" என்று கேரி எழுதினார்.
ஆனால் 1800ல், அவர் முதல் கிறிஸ்தவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். 20 வருடங்களில் பல இந்திய மொழிகளிலும் மொழி வழக்குகளிலும் மாற்றி எழுதினார். பின்னர் செரம்பூர் கல்லூரியை அமைத்து, பல ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.
கேரி லாட்ஸ் (Carey Lodge)
‘இன்றைய கிறிஸ்தவர்’ பத்திரிக்கை எழுத்தாளர்
No comments:
Post a Comment