|
|
1. முன்னுரை:
1.1 நோய்வாய்ப்பட்டோர், பாடுபடுவோரை விஜயம் செய்தல்:
சுய மதிபீட்டுக் கேள்வி: இந்த ஊழியத்தில் நீ ஏன்
ஈடுபட விரும்புகிறாய்?
மத்தேயு
25:31-46
வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; மிகவும் சிறியவராகிய என் சகோதரரான
இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
V
36வது
வசனத்தின் மூலம், வியாதியஸ்தராய் இருந்த தம்மை விசாரிக்க வந்ததாக ராஜா உவமையாகச் சொர்லகிறார்.
V
நாம்
பிறருக்குச் செய்கிற ஊழியம், தமக்கே செய்கிற ஊழியமாக இயேசு கருத்துரைக்கிறார்.
1.2 சுகமளிக்கும் தேவன்:
V நம் தேவன் சுகமளிப்பவர்
என்று வேதம் நமக்குப் போதிக்கிறது.
யாத்திராகமம் 15:26
உன் தேவனாகிய கர்த்தரின்
சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும்
உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
V
பின்வரும்
உதாரணங்களின் மூலம், நம் ஆண்டவராகிய இயேசு சுகமளிக்கும் ஊழியத்தில் தீவிரமாக ஈடுபட்டார்
என்பதை அறிகிறோம்:
இயேசுவானவர் பேதுருவின் மாமியைச்
சுகப்படுத்தினார்: லுக்கா 4:38-40 (உடலில் இயற்கையாக ஏற்பட்ட வியாதி).
இயேசு முடமான பெண்ணைச்
சுகப்படுத்தினார்: லூக்கா 13:10-17 (மாந்திரீகத்தின் விளைவாக உடலில் தொற்றிக் கொண்ட
வியாதி).
1.3 சுகமளிக்கும் வரம்:
1 கொரிந்தியர் 12:8-10 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே
ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த
ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்
செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
V
தேவனுடைய
கருவியாகத்
திகழ,
அவர் தம் பரிசுத்த ஆவியின் மூலம் சுகமளிக்கும் வரத்தை நமக்கு வழங்கியுள்ளார்.
2. மருத்துவமனை விஜயத்திற்காக ஆயத்தம்:
V
இத்தகைய
ஊழியத்தில்
ஈடுபடுவதற்கு
முன் நம் ஆயத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றியமையாதது.
V
சில
வியாதிகள்
இயற்கையானவை
என்றும்
சில மாந்ரீகமானவை என்றும் மேற்கண்ட வேதபாடம் மூலம் கண்டோம்.
V
ஆகவே,
இந்த ஊழியத்திற்குப் புறப்படுவதற்கு முன் ஜெபித்து நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்வது
அவசியம்.
2.1 ஆயத்தத்திற்கான சில ஆலோசனைகள்:
V
தேவனுடைய
சித்தத்திற்கும்,
வழிகாட்டலுக்கும்,
சுகமளிக்கும்
வரத்திற்கும்,
ஞானத்திற்கும்
விண்ணப்பித்து
ஜெபித்துக்
கொள்ளவும்.
V
குறிப்பாக
சுகமளிப்பு
மற்றும்
விடுதலைக்கான
வேத பாடங்களை வாசித்து சுய ஊக்கம் பெற்றுக் கொள்ளவும்.
V
விஜய
ஊழியத்திற்காக
உங்கள் நண்பரையோ சிறு குழுவையோ சேர்த்துக் கொள்வது நலம்.
V
பயணத்திற்கான
நேரம், தேதி மற்றும் செல்ல வேண்டிய மருத்துவமனை ஆகிய காரியங்களைத் திட்டமிடவும்.
V
பயணத்திற்கு
முன் பாவ மன்னிப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஐக்கியப்பட்டு ஜெபிக்கவும்.
3. மருத்துவமனை விஜய நேரம்:
V
ஆண்
– பெண்
என்று பால் அடிப்படையில் குழு பிரித்து விஜயம் மேற்கொள்ளுதல்
V
ஆண்
ஊழியர் ஆண்கள் நோயாளி அறைக்கும் பெண் ஊழியர் பெண்கள் நோயாளி
அறைக்கும்
விஜயம் மேற்கொள்ளத் திட்டமிடல்.
V
நோயாளியின்
நிலை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படவும். (சுற்றுச் சூழலைக் கவனித்து மதிப்பீடு செய்யவும்)
V
உள்ளன்போடும்
நட்புணர்வோடும்
பேசத் தொடங்கவும். நோயாளி அல்லது அவருடைய உறவினரிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்.
V
அவர்களுடைய
படுக்கையில்
அமர்வது,
மருத்துவக்
கருவிகளைத்
தொடுவது
போன்ற காரியங்களைத் தவிர்க்கவும்.
V
உங்கள்
வரவை நோயாளி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களின் ஆரோக்கிய நிலை பற்றி விசாரிக்கலாம்.
V
மிக
கவனமாகச்
செயல்படவும்.
மருத்துவத்
துறையில்
பயிற்சி
பெற்றிருந்தாலும்
கூட அவர்களுக்கு சிகிச்சை
தொடர்பான
ஆலோசனை எதுவும் வழங்க வேண்டாம்.
V
அவர்களின்
(குடி,
போதைப்பொருள்)
போன்ற எந்த பின்னணிகளையும் குறைகூறி பேசாதீர்கள்.
V
அவர்களுடைய
சமயப் பின்னணி அல்லது சமய உபகரணங்கள் எதையும் குறைகூறி பேசாதீர்கள்.
V
மென்மையாக
இயேசுவின்
பெயரில்
அவர்களுக்காக
ஜெபிக்கவும்.
இயேசு அவர்களுக்கு சுகமளிப்பார் என்று சுறுக்கமாக அறிமுகப்படுத்தவும்.
V
ஜெபிக்கும்
போது அவர்களின் கையைப் பிடிப்பது, தோளைத் தழுவுவது போன்ற காரியங்களில் கவனமாக இருக்கவும். எதிர் பாலனித்தவரிடம் அத்தகைய நடவடிக்கையைத் தவிர்க்கவும்..
V
அவர்களுக்குத் தொடர்
உதவிகள்
தேவைப்படுமா
என்று அறிந்து கொள்ளுங்கள். முடிந்தால், தேவைப்படும் அடுத்த நடவடிக்கைக்காக
அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றுக் கொள்ளவும்.
V
சுகத்தைப்
பெற்றுக்
கொள்வதற்காக
அவர்களை
உங்கள் சபைக்கு வருமாறு வற்புறுத்தாதீர்கள்.
3. மருத்துவமனை விஜயத்திறகுப் பின்னர்:
V
சம்பந்தப்பட்ட விஜயத்திற்காக தேவனுக்கு
நன்றி செலுத்துதல். நோயாளிக்கு நீடித்த பாதுகாப்பையும் சுகத்தையும் அருள வேண்டுதல்.
V
சபையின்
அருட்பணி
மற்றும்
சுவிசேஷக்
குழுவிற்கு
விஜயத்தைப்
பற்றிய அறிக்கை சமர்பித்து, அவர்களை தொடர் நடவடிக்கைக்கு வழிவகுத்தல்.
4. முடிவுரை:
V
மேலே
கற்ற குறிப்புகளை துரிதமாக மீள்பார்வை செய்வதோடு தொடர்ச்சியாகவும் கற்போம்.
5. சாட்சிகள்:
6. வினா
விடை நேரம்:
No comments:
Post a Comment