பார்த்லோமியாஷ் ஷங்கென்பால்க் ஜெர்மனியைச்
சேர்ந்த ஒரு பக்திமான். சுவிசேஷகராக இந்தியாவை வந்தடைந்தபோது அவருக்கு வயது 23. தரங்கபாடியை
வந்தடைந்தவுடன் தமிழ்க் கற்பதில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டார். உள்ளூரில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் சிறுவர்களோடு சிறுவர்களாக சேர்ந்து
தரையில் அமர்ந்து தமிழ் கற்றார். ஷங்கென்பால்க் சுவிசேஷத்தைத் தவிர்த்து மற்ற துறைகளிலும்
முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தியக் குடிமக்களுக்காக பல பள்ளிகளை அமைத்தார். ஜாதி
மத வேறுபாடின்றி எல்லா மாணவர்களையும் உள்ளூர் ஆசிரியரிடம் கல்வி பெறச் செய்தார். தமிழ் இலக்கணம் மற்றும் அகராதியை எழுதினார்.
பல கைப்பிரதிகளையும் புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழி பெயர்த்து ஏழுதினார். தரங்கபாடியில்
ஒரு நவீன அச்சகத்தை அமைத்து, ஜெர்மனி, போர்த்துகல் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமங்களை
அச்சடித்தார். அவர் பயங்கரமான சவால்களையும் கடும் வெப்பம் போன்ற உபத்திரவங்களை எதிர்கொள்ள
வேண்டியிருந்தது. ‘என் தோல் செந்நிற ஆடையைப் போன்றது என்றும் இங்குள்ள வெப்பநிலை சிறந்தது
என்றும் எழுதினார். இந்தியாவில் அவருடைய வருகையை விரும்பாத டச்சு ஆட்சியாளர்கள். அவருக்கு
உபத்திரவம் கொடுத்தனர். உள்ளூர்வாசிகள் வணங்கும் தெய்வங்களின் சிலைகளை உடைத்ததால் அவர்களின்
பகைக்கு ஆளானார். அவருடைய பிள்ளைகள் மரித்துப் போயினர். ஆனால், தமிழர்கள் மீது அவருக்கு
இருந்த வாஞ்சை குறையவில்லை. சிரமங்களை எதிர்நோக்கினாலும் இந்தியாவில் நீண்ட காலம் தங்கி
உள்ளூர் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தார். பதின்மூன்று ஆண்டு காலம் தன் ஜீவியத்தை
இந்தியாவில் ஆண்டவருடைய ஊழியத்திற்காக அப்பணித்து, வயிற்றில் ஏற்பட்ட வியாதியினால்
அங்கேயே மரித்துப் போனார்.
(சுதிர் ஏசாயா மற்றும் திருமலை
எழுதிய, ‘இந்தியாவில் மூந்நூறு ஆண்டுகால சுவிசேஷம்’ என்ற நூலில் இருந்து கையாளப்பட்டது)
No comments:
Post a Comment