தொகுதி 8:
“சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”
அமர்வு 8: சபையும் காணாமற்
போனோரும் – பகுதி 1 (நேர
அளவு: 60 நிமிடம்)
1. இயேசுவின் ஊழிய பொன் மொழி (வழிகாட்டி)
†
நம் ஆண்டவராகிய
இயேசு ஊழிய மற்றும் சுவிசேஷ வழிகாட்டியைப் புரிந்து கொள்ளும் அளவு எளிமைப் படுத்தியுள்ளார்.
லூக்கா 19:10
இழந்துபோனதைத்
தேடவும்
இரட்சிக்கவுமே
மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
2. சிறு குழு நடவடிக்கை:
†
லூக்கா 15.1-3 காணக்கூடியது
போல் பின்வரும் பகுதியில் இதன் அடக்கம் விளக்கப்பட்டுள்ளது:
லூக்கா 15:1-3
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
v நம் ஆண்டவராகிய இயேசு ஆயக்காரரோடும்
‘பாவிகளோடும்’ சாப்பிடுவதைக் கண்டார்கள்.
v இவர்கள் வசனங்களைக் கேட்கும்படி
இயேசுவண்டை வந்து சேர்ந்தனர்.
v பரிசேயர்களும் வேதபாரகர்களும்
அங்கிருந்தனர்.
v இதைக் காணப் பொறுக்காத அவர்கள்
முறுமுறுத்தனர்.
v இயேசு தாழ்த்தப்பட்டோரோடு
அமர்ந்து சாப்பிடுவதில் பரிசேர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் கேவலமாய் இருந்தது.
v இதற்குப் பிரதியுத்திரமாக
இயேசு பின்வரும் உவமானங்களை உபதேசிக்கிறார்.
ü லூக்கா 15:4-7
ü லூக்கா 15:8-10
ü லூக்கா 15:11-32
†
மூன்று குழுக்களாகப் பிரிந்து கொடுக்கப்பட்ட
வேத வசனங்களைப் பற்றிக் கலந்துரையாடு.
†
லூக்கா 19.10ன் அடிப்படையில்
ஒரு சிறு விளக்கப் படைப்பு வழங்கு
No comments:
Post a Comment