Tuesday, June 7, 2016

தேவனின் கரங்கள்

தேவனின் கரங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் உள்ளான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. அதன் சில உபதசங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1.         யாத்திராகமம் 13:3 – பலத்த கரங்கள்
இஸ்ரவலர்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்தில் இருந்து புறப்பட கர்த்தர் உதவினார் என்ற மோசே சொல்கிறார். நமது சரீர மற்றும் ஆவிக்குரிய கட்டுகளில் இருந்து கர்த்தருடைய கரங்கள் விடுவிக்க உதவுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நற்செய்தி!

2.          யாத்திராகமம் 15:6 – மகத்துவமான கரங்கள்
மோசேயும் அவனுடைய சகோதரி மிரியாமும் பாடிய பாடல் இது. தேவனின் வலது கரம் பகைஞனை நொறுக்கிப்போடுவதற்கு மகத்துவமானது என்று விவரிக்கிறது. மகத்துவம் (மாட்சிமை) என்ற சொல் ராஜ்யத்தோடு தொடர்புப் படுத்தப்படும். கர்த்தர் நம்மை ராஜ்ய மரியாதையோடு உபசரிக்கிறார் என்பதை அறீர்வகளா! அவருடைய கரங்கள் அதைத்தான் செய்கிறது. இது அற்புதமான காரியம். ஒரு சராசரியான மனிதனாகிய நான் ராஜாதி ராஜாவாகிய தேவனின் ஒத்தாசைகளைப் பெறுகிறேன்! அது நமக்கு ஸ்தோத்திரப் புன்னகையைத் தருவிக்கிறது.

3.          உபாகமம் 33:27 – நித்திய புயங்கள்
நிலையற்ற புத்தியுடைய மனிதர்களைக் கொண்ட இவ்வுலகில் தேவ சத்தியம் குறிப்பிடத் தகுந்தது. அவர் நித்தியமும் சார்ந்திருக்கத் தகுதியானவர்! அது நமக்கு உள்ளார்ந்த பலத்தைத் தரும்.

4.          எஸ்ரா 8:22 – கிருபை நிறைந்த கரங்கள்
தேவனை நோக்கும் யாவருக்கும் அவருடைய கரங்கள் கிருபையாய் இருக்கிறது என்று இப்பகுதி குறிப்பிடுகிறது! தேவ ஜனங்களே, கிருபையானது நமக்கு இலவசமாக அருளப்பட்ட தேவ அன்பு ஆகும்! நமது கிரியைகளின் நிமித்தம் எக்காலத்திலும் அவருடைய கிருபைக்குப் பாத்திரர் ஆகமாட்டோம். ஆனால் நாம் அவரை நோக்கி அடைக்கலத்திற்காக விண்ணப்பிக்கும் போது, அவருடைய கிருபை நம்மை ஆட்கொள்கிறது. இவ்வுலகை ஜெயிக்க நமக்கு அவருடைய கிருபை சிறிதே போதும்.

உங்களை ஆறத் தழுவி, வழிநடத்தி, தாங்கிக் கொள்ளக் கூடிய தேவனுடைய கரங்களை அனுபவிப்பதற்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவர் உங்களை எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்வார்.


தேவனுக்கே ஸ்தோத்திரம்

No comments:

Post a Comment