Tuesday, June 7, 2016

சீஷர்களுக்கான அழைப்பு


---------------------------------------------------------------------------------------------------------------

தொடக்கம் குழுப் பகிர்வு:
ஒரு பிரபலத்தைச் சந்தித்தஅனுபவத்தையும் அது எப்படி உங்ன ஜீவியத்தைப் பாதித்த்து என்பதையும் பகிர்ந்து கொள்க.

ருசிகரத் தகவல்:
ÿ ‘‘கிறிஸ்தவன்’ என்ற வார்த்தை வேதாகமத்தில் மூன்றே மூன்று முறைதான் காணப்படுகிறது.
ÿ ‘சீஷர்’ என்ற வார்த்தை வேதத்தில் 272 முறை காணப்படுகிறது.
ÿ நீர் கிறிஸ்தவரா? அல்லது சீஷரா?

முன்னுரை:
இயேசுவானவர் சீஷர்களை மூன்று வெவ்வேறு நிலைகளில் அழைக்கிறார்.
       நிலை 1: வந்து பாரும்
       நிலை 2: பின் தொடர்ந்து வா
       நிலை 3: சிலுவையைச் சுமந்து பின்னே வா

 

1. வந்து பாரும் (யோவான்1:35-42)
35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
 37
அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
 40
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
ÿ  இரண்டு சீஷர்களுக்கு யோவான் ஸ்நானகன் இயேசுவின் வழியைக் காட்டுகிறார்.
ÿ சீஷர்கள் இயேசுவை நெறுங்கி, அவருடன் நேரத்தைச் செலவிடும் பாக்கியம் பெறுகின்றனர்.
ÿ பேதுருவுடன் பகிர்ந்து கொள்ளும் போது அந்திரேயாவை இயேசு மறுரூபமாக்க்கிய அனுபவம்.

2. என் பின்னே வாருங்கள் (மத்தேயு4:18-22)
18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19 என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
 21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

ÿ முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இரண்டு மீனவர்களையும் இயேசு அழைத்து தம் பின்ன வரச் சொல்கிறார்.
ÿ அவர்கள், தங்களுடைய எல்லாவற்றையும் விட்டு விட்டு, இயேசுவைத் தங்கள் எஜமானாக்க் கருதி பின் சென்றார்கள்.

3. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்று (மத். 16:24-28)
24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? 27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ÿ ஒரு சில வருடங்கள் இயேசுவைப் பின்பற்றிய பிறகு, தம் சீஷர்களுக்கு ஒரு புதிய அழைப்பைக் கொடுக்கிறார்.
ÿ மரண பரியந்தம் தியாகத்தோடு தம்மைப் பின்பற்றும் படி இயேசு அழைப்பு விடுக்கிறார்.

முடிவுரை
இந்த அழைப்புகளை இயேசுவிடம் பெற்ற நாம் எப்படித் துலங்குகிறோம்?
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் சுய மதிப்பீட்டுக் கேள்விகளைக் கலந்துரையாடவும்:
1.     உன்னைப் பற்றி எப்படி விளக்குகிறாய்? கிறிஸ்தவன் – சீஷன்?
2.     இயேசுவானவரில் ஆழ்ந்த சீஷத்துவம் கொள்வதற்கு அவருடைய அழைப்பை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்?

3.     சீஷராக ஜீக்கும் நமக்கு எப்படிப்பட்ட சவால்கள் ஏற்படும்?

No comments:

Post a Comment