ஏசாயா 40.8 பின்வருமாறு சொல்கிறது:
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
சார்ல்ஸ் சுவிண்டல் என்ற சிறந்த
கிறிஸ்தவ எழுத்தாளர் அவ்வசனத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்:
"தேவ வார்த்தையில் சார்ந்திருப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மை, நிலைமைத்தன்மை
ஆகும். உங்களுக்கு அது ஆழமான விளக்கத்தையும் நோக்கத்தையும் தருகிறது. தேவ
புஸ்தகத்திற்கு நிரகாக ஆழமான விளக்கத்தையும் நோக்கத்தையும் தருவிக்கக்கூடிய
கலந்தாய்வு வேறு
இல்லை.”
அன்பார்ந்த சபையே, உலகின்
விலையேறப்பெற்ற பொக்கீஷம் உங்களுக்கு எட்டும் தூரமே! வேதத்தை
ஓயாமல் வாசிக்கவும். தேவ உதவியோடு சிறிதும், சொற்பமும், ஒதுக்கப்பட்டும் போன
ஜனங்களின் வெற்றிக் கதைகளால் நீங்கள் மலைத்துப் போவீர்கள். அபரிமிதமான விசுவாசத்தால் கிடைத்த அற்புதமான
விளைவுகளைப் பற்றி வாசியுங்கள். மிகப் பிரபலமான இயேசு கிறிஸ்துவின் சரீதையையும்
மீண்டும் வாசிக்கவும்.
தேவ குமாரனிடம் இருந்து வரும்
சத்தியத்தால் நீங்கள் மந்திரிக்கப்படுவீர்கள். வேதத்தை வாசியுங்கள்!
No comments:
Post a Comment