Sunday, June 5, 2016

தொழிலாளர் தினம்

தொழில் பற்றி வேதாகமம் பல பொறுத்தமான தகவல்களைத் தந்துள்ளது. ஆதியாகமத்தில், தேவன் ஆதாமுக்குக் கொடுத்த முதல் பொறுப்பு, ‘தோட்டத்தைப் பண்படுத்தவும் அதைக் காக்கவும்’ வைத்தார். ஆகவே தேவன் தொழிலை  ஏற்படுத்தி அதனை ஆசீர்வதித்தார்.

நீதிமொழிகள் புஸ்தகத்தில் தொழில் பல விலையறப்பெற்ற சிந்தனைமொழிகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:

1.     நீதிமொழிகள் 6:10
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.
        பணியைத் தள்ளிப் போடுதல் ஆபத்தையும் நாசத்தையும் விளைவிக்கும்.
               
2.     நீதிமொழிகள் 10:4
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
      கடும் உழைப்பை நல்ல பயனைத் தரும்.

3.     நீதிமொழிகள் 28:19
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
      உன் தொழிலில் உண்மையாய் இரு. முட்டாள்களே பகல் கனவு காண்கிறார்கள்.

மனிதர் ஒவ்வொருவரும் வேலை செய்ய தேவன் நிர்ணயித்திருக்கிறார். தேவன் கடும் உழைப்பையும் நேர்மையான பணியையும் ஆசீர்வதிக்கிறார். இந்தச் சவாலை ஏற்றுக் கொள்வது இன்றைய நம்முடைய சவாலாக இருக்கிறது. என் மகா கனம் பொருந்திய ஆண்டவராகிய தேவனுக்கு நான் பணி புரிகிறேன்.


எனவே, நாம் ஆண்டவருக்காக சந்தோஷமாகவும் உண்மையாகவும் உழைப்போமாக. நிபுணத்துவத் தொழிலாளகவும், எளிய உடல் உழைப்பாக இருந்தாலும், குடிசைத் தொழிலாளக இருந்தாலும் உற்சாகமான ஆவியோடு தேவனுக்கு உதவி செய்து அவருக்கு சிறந்த பாதையை அமைப்போமாக!

No comments:

Post a Comment