Tuesday, June 7, 2016

பயப்படாதே

மைக்கல் பபிள் என்பவர் ஒரு பழைய கிறிஸ்மஸ் பாடலை உற்சாகமூட்டும் புதிய மெட்டில் பாடினார்: "இவ்வாண்டில் மிகவும் சிறந்த தினம்."(ஆங்கிலம்). இக்காலக்கட்டத்தைப் பற்றி இப்பாடகர் வியப்படைந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மையில் இது அற்புதமான காலமாகும்!

கடவுள் மனுஷனாக வந்த காலம்தான் கிறிஸ்மஸ். இது உண்மையிலேயே அற்புதமான காரியம்! வரலாற்றுப்பூர்வமான இந்தக் காலம் அச்சத்தில் இருந்தும் களைப்பில் இருந்தும் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது!

இயேசு பிறந்த காலத்தில், ‘பயப்படாதே’ என்ற பதம் குறைந்தபட்சம் 4 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
1.             லூக்கா 1:13 - தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
2.             லூக்கா  1:30 - தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே என்று கூறி வாழ்த்தினார்
3.             லூக்கா  2:10 - தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்'
4.             மத்தேயு 1:20 -: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே ;

மேலும் இயேசுவானர் இவ்வுலகில் ஊழியஞ் செய்த மூன்று ஆண்டு காலத்தில், ‘பயப்படாதே’ என்று கூறி பலரை வாழ்த்தினார். இது அற்புதனமான காரியம்!

இன்னொரு வரலாற்று அற்புதம் என்னவென்றால் மரணம் இல்லாதவர் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்ததுதான்! சிருஷ்டிகர் பூரண விருப்பத்தோடு தம்மை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தார். இது அற்புதமான காரியம்!

இயேசுவானவர் உங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார். அவர் மாத்திரமே உங்களுக்கு உதவக்கூடியவர். இது மீண்டும் அற்புதமான காரியமாகும்!

இந்த மகிழ்ச்சிகரமான நாளைக் கொண்டாடும் போது, தேவன் மனிதனாக வந்தச் செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்மஸ் அற்புதத்தை ஒரு அறிவித்தீர்கள் என்பதை யார் அறியக் கூடும்!


அனைவருக்கும் ஆசீர்வாதமான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment