Tuesday, June 7, 2016

நம்மைப் பயன்படுத்தும் தேவன்

சுமார் 6 நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்பம் ஓர் அருமையான வேத வசனத்தைக் கண்டது:
ஏசாயா 49: 2
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.”

அந்த வசனம் சில மறைபொருளைப் பற்றி சிந்திக்க வைத்தது:
-                நான் தேவனால் தேந்தெடுக்கப்பட்ட அம்பு;
-                என்னைத் துலக்கமாக்கியதன் மூலம் அவர் என்னைப் பூரணமாகப் பயன்படுத்தும்படி ஆயத்தமாக்கினார்;
-                ஆனால் இப்போதோ நான் பாதுகாப்பும் இரகசியமும் நிறைந்த இடத்தில் மறைந்திருக்கிறேன்;
-                இவை யாவும் என்னைப் பயன்படுத்துவதற்கும், மாபெரும் விளைவை ஏற்படுத்தும பொருட்டு, விலையேறப்பெற்ற தருணத்தில் புறப்படப்பண்ணுவதற்கே.

நம்மைப் பற்றி எவ்வளவு அழகான ஆனால், சிந்திக்க வைக்கும் வர்ணனை இது.
தேவன் நம்மைப் பயன்படுத்தும பட்சத்தில் எவ்வளவு அற்புதமான பலன்கள் ஏற்படும்.
நமது ஆவியைத் தூண்டிவிடும் பொருட்டு எத்தகையே மனப்போக்கைத் தருகிறது!

பயனும் துலக்கமுமான அம்பாக்கியதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment