Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்


----------------------------------------------
கடந்த வார முன்பார்வை:
1. ராஜ்யம்; 2. தேவனுடைய ராஜ்யம்
3. தேவனுடைய ரா4யம் வருகை

1. சித்தம்:
மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

இந்தச் சித்தம், தெரிவு செய்வதையும், சிந்திப்பதையும், விருப்பத்தோடு செயல்படுவதையும் காட்டுகிறது.

2. தேவனுடைய சித்தம்:
மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

தேவனுடைய சித்தம் என்பது அவர் தேவன் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும், சிந்திக்கவும், சுய விருப்பத்தோடு செயல்படுவதையும் காட்டுகிறது.

2.1 தேவனுடைய சித்தம் vs மனிதனுடைய சித்தம்:
            மாற்கு 8:32-33
இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.


2.2 தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளலாம்:
            ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


(1) நமது மனம் புதிதாகுவதின் மூலம் தேவனுடைய சித்தத்தைச் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.
(2) தேவனுடைய சித்தம் எப்போதும் அவருடைய வார்த்தையின் கூறுகனை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

          2.3 தேவனுடைய சித்தம் நன்மையும், பிரியமும், பரிபூரணமுமானது:
            ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

(1) நன்மை- அவருடைய சித்தத்தின் நோக்கம் அவருடைய பார்வையில் எப்போதும் நன்மையாய் இருக்கிறது.
(2) பிரியம்- அவருடைய சித்தத்தின் நோக்கம் அவருக்கும் நமக்கும் எப்போதும் பிரியத்தை உண்டு பண்ணும்.
(3) பரிபூரணம்- அவருடைய சித்தத்தின் நோக்கம் எப்போதும் முழு நிறைவு பெற்றதாய் இருக்கிறது.

             3. தேவனுடைய சித்தம் செய்யப்படுவதாக:
மத்தேயு 6:10
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.

மத்தேயு 26:39, 42 & 44
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

அவருடைய சித்தத்திற்கு நாம் மனம் திறந்தவர்களாய், அச்சித்தத்திற்காக நாம் இயேசுவைப் போல ஜெபிப்போமாக.

        சுருக்கம்:
     1. சித்தம்; 2. தேவனுடைய சித்தம்; 3. தேவனுடைய சித்தம் செய்யப்படுவதாக

       முடிவுரை:
       தேவனுடைய சித்தத்தை நுணுகிப் பார்க்கலாம். நமது ஜீவியத்திலும் இவ்வுலகிலும் அவருடைய சித்தத்தை அனுபவப்பூர்வமாகக் காணலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:

      1. தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதில் உன் சவால் என்ன?


      2. உன் ஜீவியத்திற்கான தேவனுடைய சித்தத்தை நுணுகிப் பார்க்கவும், அறியவும், கீழ்ப்படியவும் முன் வருவாயா?

No comments:

Post a Comment