Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்

-------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfzOYq0Z3eoZFD_XnA_I5EAmOQTMCOhtDDgd8_D7TXtBlN34ESAgFHptVgy3vgzKn0WXzrkba8MjAJ0FZJ8s8V3Qqy4bt9uC98uDS4uuKeeR3UqDwuDfWIgJa9Mmua9TpvchFbdUs6fcE/s1600/Lord-teach-us-to-pray%5B1%5D.gifகடந்த வார பாட மீள்பார்வை:
1. நமது பிதாவான தேவன்
2. நமது பிதா
3. பரலோக பிதா


1. தேவன் பரிசுத்தமானவர்

மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக

லேவியராகமம் 11:44
44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக (வாசிக்கவும்: 1 பேதுரு 1:16)

பரிசுத்தம்: க்காடோஷ் (எபிரேயம்); ஹகியோஸ் (கிரேக்கம்)- ‘வழக்கமான காரியங்களில் இருந்து விலக்கி வையும்என்று பொருள்

யோவான் 17:11
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.



2. தேவனுடைய நாமம் பரிசுத்தம்

மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

யாத்திராகமம் 3:13-14
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
 
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.


3. தேவனின் பரிசுத்தத்தை மகிமைப்படுத்துதல்

மத்தேயு 6:9-13
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக

யாத்திரகாமம் 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். (லேவியராகமம் 22.32ஐயும் வாசிக்கவும்)

எபேசியர் 5:3
மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

எபிரேயர் 10:10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.


1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். (வாசிக்கவும் 1 கொரிந்தியர் 6:19-20)

சுருக்கம்:
1.        தேவன் பரிசுத்தமானவர்               
2.        தேவனுடைய நாமம் பரிசுத்தமானது                        
3.        தேவனின் பரிசுத்தத்தை மகிமைப்படுத்துதல்

முடிவுரை
தேவன் பரிசுத்தமாயிருக்கிறார். நாம் அவரால் பரிசுத்தப்பட்டிருக்கிறோம். நாம் அவருக்கு மகிமை கொண்டு வரும் வகையில் ஜீவிக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்வியைக் கலந்துரையாடவும்:


நாம் தேவனின் பரிசுத்த ஆலயம் என்பதை அறிவதின் மூலம் அவருடைய பரிசுத்தத்திற்காக மாற்றத்தைக் கொண்டு வருகிறது?

No comments:

Post a Comment