Monday, June 6, 2016

தாமான் மேடான் ஆலய சிலுவை சர்ச்சை

கடந்த திங்கட் கிழமை ஸ்டார் பத்திரிக்கையில் மேரியன் டி சௌசாவின் கடிதம் தலையங்கமாக பிரசூரிக்கப்பட்டிருந்தது. தாமான் மேடான் ஆலய சிலுவை சர்ச்சை தொடர்பாக அவர் சில ஏற்புடைய காரியங்களைக் கிறிஸ்தவர்களிடம் கூற விரும்பினார். அவர் கூறிய சில விஷயங்களின் சுறுக்கத்தைத் தருகிறேன்: 

1.                   தேவன் சிலுவையின் அளவைப் பார்க்கவில்லை. மாறாக, நமது உள்ளத்திலும் ஜீவியத்திலும் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறார்.
2.                   ரோமர் 13.1-5ல் கூறப்பட்டுள்ளது போல் எப்போதும் நாட்டின் சட்டதிட்டத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அரசாங்க அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பாராக. தேவனுடைய அதிகாரத்தைத் தவிர வேறு அதிகாரங்கள் கிடையாது. பூமியில் தோன்றியுள்ளவை அவரால் நிறுவிக்கப்பட்டுள்ளன.
3.                   சக மலேசியர்களின் உணர்வுகளுக்கும் விசுவாசங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
4.                   1 கொரி. 13, அன்பானது நமது சொந்த வழியில் செல்ல அனுமதிக்கவில்லை நினைவுப்படுத்துகிறது.
5.                   நமது விசுவாசத்தைப் பேரம் பேசாத வரை இணங்கிப் போகும் போக்கு நமது பலவீனத்தைப் பிரதிபலிக்காது.
6.                   மற்றவரிடம் கணிவுடன் நடத்தல், மென்மையான உள்ளம், மன்னிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்துவோம்.
7.                   மன்னித்து விடுவோம், மறந்து விடுவோம், முன்னேறுவோம், ஞானமாய் செயல்படுவோம்.

சிலர் இதனை ஞான உபதேசம் என்பர். வேறு சிலர் அதை மறுப்பர். உங்கள் கருத்து என்ன?


தேவன் நாம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. செர்டாங் த.மெ.சபையின் குடும்ப முகாமை முன்னிட்டு நாங்கள் குடும்பமாக பங்கோரில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment