Tuesday, June 7, 2016

மீட்பு – கிருபையும் மன்னிப்பும்

1ம் பாடத்தின் முக்கியக் கருத்துகள்: மீட்பு –
கிருபையும் மன்னிப்பும்

1. நீ ஒரு புதிய கிறிஸ்தவன். உனக்கு என்ன ஏற்பட்டது?
·        தேவன் உன்னை மீட்டுள்ளார்.
·        இயேசுவானவரின் காணாமற்போன ஆட்டுக்குட்டியைப் பற்றிய உவமானம் (லூக்கா 15:47) 
o   இயேசுவானவர் நம்மை வழிதப்பிப் போய், அபாயத்தை எதிர்நோக்கிய ஆட்டுக்குட்டியை எஜமான் காப்பாற்றியதுபோல் காப்பாற்றுகிறார்.
o   கிறிஸ்தவ வாசகங்களில் ‘மீட்பு’ என்பது காப்பாற்றப்பட்டதைக் குறிக்கிறது.

·        ஆண்டவர் உன்னை நேசிக்கிறார் (யோவான்3:16). 
·        ஆண்டவர் உன்னை மன்னித்துள்ளார்
·        தேவன் உன் பாவத்திற்காக சிலுவையில் மரித்துள்ளார்.
o   1 யோவான் 1.9ல் மன்னிப்புக்கான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
o   மன்னிப்பு என்பது, தேவன் உன் பாவத்திற்காக தண்டிக்கமாட்டார் என்று பொருள்படும்
o   எதிர் காலத்தில், நீ பாவம் செய்தால், உன் பாவதிற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேள். தேவன் உன்னை மன்னிப்பார்.
·        தேவன் தமது மகனைப்போல் உன்னை நிபந்தனையின்றி மன்னிக்கிறார். அதைப் பெற்றுக் கொள்வதற்கு நீ எதையும் செய்யவேண்டியதில்லை.

2. தேவன் உன்னிடத்தில் கிருபையையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார்.
·        கிருபை” என்பது, அவர் உனக்குச் சாதகமாக இருக்கிறார் என்று பொருள். நீ அதற்குத் தகுதியற்றவனும் அதனை சம்பாதிக்கக்கூடாதவனுமாய் இருக்கிறாய் (எபேசியர் 2.8-9)
·        கிருபை உனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையில் இருந்து விடுபடுவது ஆகும்.
·        “Amazing Grace” (அமேஷிங் கிரேஸ்) என்ற பாடல், விடுதலை பெற்ற கேப்டன் ஜான் நியுட்டனின் அடிமையானவன் தன் அனுபவத்தின் நிமித்தம் எழுதிய பாடலாகும்.

3. ஞானஸ்நானம்
·        இயேசுவானவர் தம் பிரதான கற்பனையில் (மத்தேயு 28.19-20) நாம் ஞானஸ்நானம் பெறும்படியாகக் கட்டளையிடுகிறார்.
·        ஞானஸ்நானம் பின்வருவனவற்றின் அடையாளம்
          நீ இயேசுவானவரோடு ஐக்கியம் பெற்றுள்ளாய்
          உன் பாவங்கள் கழுவப்பட்டுள்ளன.
          புதிய எஜமானுடன் நமது அர்ப்பணிப்பு
·        ஞானஸ்நானத்தைக் குறித்து ஒரு குருவானவருடன் உரையாடு.


பாடம் 1: மீட்புகிருபையும் மன்னிப்பும்

மனன வசனம்:
 “8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;  ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர் 2:89) 

கேள்விகளும் கலந்துரையாடல் குறிப்புகளும்:

1.       இயேசுவானவர் உன்னை எதிலிருந்து மீட்டார் என்பதைக் கலந்துரையாடு. லூக்கா 15.4-7ல் இடம்பெற்ற கதையில் உள்ள காணாமற்போன ஆட்டுக்குட்டியோடு நீ எந்த வகையில் ஒற்றுமை பெற்றிருக்கிறாய்?
2.       தேவன் உன்னை நேசிக்கிறார் என்பதை எப்படி நம்புகிறாய்? சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டும் அவர் உன்னை ஏற்றுக் கொள்வாரா?
3.       நீ மன்னிக்கப்பட்டாய் என்பது உனக்கு எப்படித் தெரியும்? 1 யோவான் 1.9ன் அடிப்படையில், நீ கிறிஸ்தவன் ஆனபின்பு மீண்டும் பாவஞ்செய்தால், அது உனக்கு மன்னிக்கப்படுமா? தேவனிடம் உன் பாவத்தை அறிக்கையிடுதல் என்பதன் பொருள் என்ன?
4.       தேவனுடைய பிரியத்தைப் பெறுவதற்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்று ஏன் அநேக ஜனங்கள் நினைக்கிறார்கள் என்பதைக் கலந்துரையாடு- எபேசியர் 2.8-9ன் படி நாம் தேவனைப் பிரியப்படுத்துவதற்கு ஏதாவது வழி உண்டா? இந்தக் காரியத்தில் நமது விசுவாசத்தின் அல்லது நம்பிக்கையின் ஆதாரம் எது?
5.       ‘அமேஷிங் கிரேஸ்’ என்ற பாடச் சரியான தொனியில் பாடு. ஜான் நியுட்டன் ஏன் தேவனுடைய கிருபைக்காக அதிக நன்றி பாராட்டுகிறார் என்று நீ கருதுகிறாய்?
6.       உன் ஆசிரியர் எப்போது ஞானஸ்நானம் பெற்றார் என்றும், அது எப்படி நடந்தது என்றும் விசாரி.
7.       நீ சபையில் எப்படி ஞானஸ்நானம் பெற்றாய் என்பதைக் கண்டறி.
8.       குருவானவர் அல்லது குழுத் தலைவரிடம் ஞானஸ்நானம் பெறுதல் பற்றி பேசுவதற்கு ஒரு சந்திப்பு ஒப்பந்தம் செய்து கொள்.
9.       எபேசியர் 2.8-9ம் வசனங்களை ஐந்து முறை உரக்க வாசி. இது ஒரு வேளை அறிவீனமாய் தோன்றலாம். பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவிலான அட்டையில் எழுது. இவ்வாறுதான் நீ மனப்பாடம் செய்யக் கற்றுக் கொள்கிறாய். ஒவ்வொரு பாடத்திலும் மிக முக்கியமான வேத வசனங்கள் வழங்கப்படும். அந்த வசனங்கள் மனப்பாடத்துக்கு பாத்திரமான சத்தியத்தைக் கொண்டிருக்கும்.
10.   கிறிஸ்துவில் கிடைத்த புதிய ஜீவியத்திற்காக ஜெபி. உரக்க ஜெபிப்பது உனக்கு அசௌகரியத்தைக் கொடுத்தால், உன் ஆசிரியரை உனக்காக ஜெபிக்கக் கேட்டுக் கொள்.

11.   சந்திப்பு ஒப்பந்தம்: அடுத்த பாடத்துக்காக நேரத்தையும் இடத்தையும் குறித்து ஒப்பந்தம் செய்து கொள். 

No comments:

Post a Comment