Monday, June 6, 2016

'ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.'

உங்கள் சிந்தனைக்கு:
தேசம் காயங்களாலும் வேதனைகளாலும் நிறைந்த ஜனங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வேதனையான கதைகள் உண்டு. துரதிர்ஷ்டம் என்னவெனில், அவற்றைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் காயங்களோடு நிலைத்திருக்கின்றனர்.

நீதிமொழிகள் 25:11ல் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது:
'ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.'


பரிசுத்த ஆவியானவர் நமது நாவில் இனிப்பூட்டி, சுகத்தையும் சமரசத்தையும் கொண்டு வரும் வார்த்தைகளைப் பேச உதவ வேண்டும் என்று ஜெபிப்போமாக. எல்லாவற்றுக்கும் மேலாக, பூலோகத்தில் ஜீவித்த காலத்தில் இயேசுவானர் இந்த அழகான ஊழியத்தையே மேற்கொண்டார். 

No comments:

Post a Comment