Sunday, June 5, 2016

இயேசுவானவர் அத்தி மரத்தை சபிக்கிறார்


—————————————————————————————————————–———————————————————முன்னுரை:

தகவல்: ‘சாபம்அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதால் அது தற்கால சமூகத்தில் வெறுப்பு நிறைந்த சொல்லாகக் காணப்படுகிறது.
எனவே, ‘சாபம்என்பது ஒருவருக்கு (ஒன்றுக்கு) தீங்கு விளைவிக்க ஏவப்படும் சக்தி என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வேத அடிப்படையில் சாபம் என்பது தேவ ஆசீர்வாதத்தை அல்லது தேவ பிரசன்னத்தை அகற்றுதல் என்று என்று பொருள்படுகிறது.

வேத பகுதி: மாற்கு 11:12-14
மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

1. இயேசுவானவர் அத்தி மரத்தைச் சபித்தார்

மாற்கு 11:14
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

கனி தராத இந்த அத்தி மரத்துக்கு விரோதமாக இயேசுவானவரின் பிரதியுத்திரம் அவருடைய சீஷர்களையும், இன்று திரும்பத் திரும்ப இவ்வேத பகுதியை வாசிக்கும் நமக்கும் சற்று அதிர்ச்சியைத் தருகிறது.
இயேசுவானவர் மிக எளிதாக இந்தக் கனி தராத அத்தி மரத்தை அலட்சியப்படுத்தியிருக்கலாம்,, அல்லது வெட்டித் தள்ளியிருக்கலாம்.
அவர் அற்புதமான முறையில் அம்மரம் கனி தரக் கட்டளையிட்டு, காய்த்துக் குலுங்கச் செய்திருக்கலாம்.
ஆனால், அவர் இந்த கனிதராத மரத்தின் மூலம் தீர்க்கதரிசனமான நியாயத்தீர்ப்பை அறிவிப்பதைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் வேண்டுமென்றே அவருடைய சீஷர்களும் சூழ்ந்திருப்பவர்களும் கேட்கும்படி இந்தக் கனி தராத அத்திமரத்திற்கு விரோதமான சாபத்தை உரக்கக் கூறினார்.
கனி தராமை இயேசுவுக்கு ஒரு பெரிய பிரச்சனையா? அற்பமும் கேவலமுமான காரியம் அல்லவா?

2. இஸ்ரவேலர்களும் அத்தி மரத்தைச் சபித்தலும்

இது வெறும் தீர்க்கதரிசன அறிவிப்பு மட்டுமல்ல; மாறாக கடந்த காலத்தையும் நினைவு படுத்துகிறது.
தேவனுக்கு அத்தி மரமான இஸ்ரவேல் ஜனங்கள் பாவஞ் செய்து, பின்வருவது போல் நியாயந் தீர்க்கப்பட்டனர்.

ஓசியா 9:10
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
ஓசியா 9:17
அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நியஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

அவர் அத்தி மர உவமானத்தை புதிதான உவமானமாக உபதேசித்ததால், இது மேலும் உறுதி செய்யப்படுகிறது.

லூக்கா 13:6-9
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம் என்று சொன்னான் என்றார்.

நாம் கனிதரும் பொருட்டு தேவன் இஸ்ரவேலர்களுக்கும் நமக்கும் அனைத்தையும் வழங்கியுள்ளார். ஆனால், இஸ்ரவேலர்களும் நாமும் தொடர்ச்சியாகக் கலகஞ்செய்வதோடு சுயநலவாதிகளாக இருப்பதால், வெட்டித் தள்ளப்படுவதற்குப் பாத்திரராய் இருக்கிறோம்.


3. சபிப்பது எச்சரிக்கையாகும்

ஆகவே, இயேசுவானவர் அந்த அத்தி மரத்தைச் சபித்தது நாம் அனைவருக்கும் தெட்டத் தெளிவான எச்சரிக்கையாக அமைகிறது.

யோவான் 15:6
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

இன்றும் நாம் கனி தர வேண்டியவர்களாக எதிர்ப்பார்க்கப்படுவதோடு சபிக்கப்படும் அபாயமும் தோன்றியுள்ளது.
தேவனுடைய கிருபையை நாம் சாதகமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது நாம் மனம் திரும்புவதற்காகவே.

முடிவுரை

இயேசுவானவர், அந்த அத்தி மரமும் இஸ்ரவேலர்களும் கனி தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தது போல, இன்று நம்மிடமும் எதிர்ப்பார்க்கிறார்

No comments:

Post a Comment