Sunday, June 5, 2016

தேவனுடைய ராஜ்யம்

தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி இயேசுவானவர் பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பல முறை வழியுறுத்தி வந்தார். இந்த ராஜ்யம் யாது? இந்த ராஜ்யத்தில் நாம் எங்கே இருப்போம்?

இயேசுவைப் பொறுத்தவரை, இது தேவனால் ஸ்தாபிக்கப்படும் புதிய ஆட்சி முறை ஆகும்.இயேசுவானவர் வெளிப்படையாக தம் ஊழியத்தை ஆரம்பித்தவுடனேயே இந்த ராஜ்யமும் தொடங்கி விட்டது! மத்தேயு சுவிசேஷத்தில் மட்டும இயேசுவானவர் 6 வகையான உவமானக் கதையைப் பயன்படுத்தி இந்த இராஜ்யத்தைப் பற்றி விளக்குகிறார். அவற்றில் இரண்டை ஆராய்ந்து அதன் உபதேசங்களைப் பெற்றுக் கொள்வோம்:

1.       விதைகளை விதைப்பவன் உவமானத்தின் மூலம் இந்த ராஜ்யம் அனைவருக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில் தேவ ராஜ்யம் தொடர்பான விபரம் அடங்கியிருக்கிறது. ஆனால் ஒரு சிலரே அந்த ராஜ்யத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள் நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் ஆசீர்வாதங்களைப் பெறுவர். எனவே, இந்த ராஜ்யத்தில் வாசம் செய்கிறவர்களுக்கு அபரிமிதமான ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற செய்தி இதில் பொதிந்துள்ளது.

2.     களைகள் பற்றிய உவமானத்தில், தேவனின் பிள்ளைகளும் பிசாசின் பிள்ளைகளும் பக்கம் பக்கமாக ஜீவிப்பார்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். ஆனால், கடைசி காலத்தில் சத்தியம் வெளிப்படும். பிசாசின் பிள்ளைகளோ, இப்போது நாம் களைகளை எரிப்பது போல், அக்கினியில் வீசப்படுவர்! ஆகவே, இந்த உவமானம் கடைசி காலத்தில் தெட்டத் தெளிவாகத் தெரியும் என்று இப்பாடம் நினைவுறுத்துகிறது.

இவ்வுலக ராஜ்யம் போல் அல்லாமல் தேவனுடைய ராஜ்யம் தன் சொந்த ஆட்சி நெறிகளைக் கொண்டிருக்கும். அங்கே ஊழல் கிடையாது. அநீதி பெருகி வளர அங்கே இடம் இருக்காது. பிதாவாகிய தேவன் நீதியோடு ஆட்சி செய்வார். ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த ராஜ்யம் கிடைக்கும். ஒவ்வொரு விசுவாசியும் இந்த ராஜ்யத்தில் குடியுரிமை பெற்றவர்கள்.


பரிசுத்த ஆவியால் நாம் நிரப்பப்பட்டு இந்த ராஜ்யத்தில் பங்கு பெற பாத்திரர் ஆகுவோம். இவ்வகையில் நாம் பல உலக ராஜ்யங்களில் காண்பது போலல்லாமல் புதிய ராஜ்யத்திற்கு ஈர்க்கப்படுவோம். 

No comments:

Post a Comment