Monday, June 6, 2016

நோக்கங்கள் அறியப்படாத நிலையில், ஆற்றல்கள் வளர்வதில்லை

‘அர்த்தமுள்ள ஜீவியம்’ (ஆங்கிலம்) என்ற பாஸ்டர் ஜிம் கிராஃப்ட் எழுதிய ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நோக்கமும் நிறைவும் கொண்ட ஜீவியத்தை மேற்கொள்ள தேவன் நமக்கு அருளிய சிருஷ்டிப்பை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்புத்தகம் விவரிக்கிறது. அதில் ஒரு கருத்து என்னைச் சிந்திக்க வைக்கிறது: 

நோக்கங்கள் அறியப்படாத நிலையில், ஆற்றல்கள் வளர்வதில்லை!

இது உண்மை என்று கருதுகிறேன். நாம் ஒவ்வொருவரும் தனித் தன்மையோடும் அற்புதமாகவும் படைக்கப்பட்டுள்ளோம். இவை மிகவும் வெளிப்படையானவை. அவர் சிருஷ்டித்த ஒவ்வொன்றிலும் வல்லமையின் விதைகளை வைத்துள்ளார் என்பதை அறிவது அற்புதமான காரியமாகும்: ஆக்கப்பூர்வமான காரியங்களை அடைவதின் விதைகள் அவை. அது மிகவும் வெளிப்படையானது. இந்த வெளிப்பாட்டை நாம் அறியும் போது, நமது ஜீவியம் நமக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக மாறும். நீங்களும் ஜீவியத்தின் முழுமையை அனுபவிக்க, தேவன் உங்களில் என்ன ஆற்றலை வைத்திருக்கிறார் என்பதை தயவுகூர்ந்து ஆராய்ந்து பாருங்கள்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நல்ல தட்ப வெப்பத்துக்காகவும் ஜெபியுங்கள்.

No comments:

Post a Comment