Sunday, June 5, 2016

கண் சரீரத்தின் வெளிச்சமாயிருக்கிறது

இன்றைய தினம் நான் தேர்வு செய்த புதிய ஏற்பாட்டுப் பகுதி மத்தேயு 6.22 ஆகும். அந்த வசனம் பின்வருமாறு அமைகிறது: கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

இயேசுவானவர் தமது மலைப் பிரசங்கத்தின்போது இந்த வசனத்தைக் கூறுகிறார். மத்தேயு 5 முதல் 7 வரை இதன் விபரம் அடங்கியிருக்கிறது.

இந்த வசனங்கள் மஹாத்மா காந்தியின் வாழ்க்கையில் முத்தாய்ப்பாய் அமைந்தது. இந்த வசனத்தின் தாக்கத்தால் ஒரு, ‘கிறிஸ்தவர்களின் கிறிஸ்துவைக் கொடுங்கள்; கிறிஸ்துவின் கிறிஸ்தவர்கள் வேண்டாம்’, என்றார்.

நமது கண்கள் சரீரத்தின் விளக்காய் இருக்கிறது. நாம் காண்கின்ற காரியங்கள் நம்மைப் பல நிலைகளில் தாக்கம் செய்கின்றன. இறுதியில், நாம் பார்க்கின்றவை அடிப்படையில் நாம் நல்லவர்களாகவோ பொல்லாதவர்களாகவோ மாறுகிறோம். நமது பார்வையின் ஜீவியம் ஆவிக்குரிய ஜீவியத்தைப் பேரளவில் தாக்கம் செய்வது ஓர் அற்புதமான காரியமாகும்!

  • இயேசுவானவர் திரள் ஜனங்களைக் கண்டு அவர்களிடத்தில் பச்சாதாபம் கொண்டார். அது வெறுப்புக்குப் பதில் அன்பைப் பெருக்கிற்று.
  • இயேசுவானவர் ஐசுவரியவனான இளம் வணிகனை கண்டு அவனிடத்தில் கவலை கொண்டார். அது சமரசத்திற்குப் பதில் மேன்மைக்குச் சவால் விட்டது.
  • இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். இது அற்பமானதற்கு அப்பால் தெய்வீகப் பார்வையாகும்.
  • இயேசு பேதுருவைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். இது நியாயந்தீர்ப்பதற்கு அல்லாமல் பேதுருவின் தனித் திறமையை உணர்த்தும் பார்வையாகும்.


இது உண்மையிலேயே ஓர் ஆழமான உபதேசம். உங்களுக்கும் அப்படியே அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். நமது பார்வையில் கவனமாய் இருப்போம். அது நாம் மூழ்கியிருப்பது வெளிச்சமா அல்லது இருளா என்பதை உறுதி செய்யும். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment