Tuesday, June 7, 2016

ஜீவ வார்த்தை

சில காலங்களுக்கு முன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு செய்தியை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். ஏசாயா 49.2ன் அடிப்படையிலானது அது – “அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.

கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:

-       ஜீவனுள்ள வார்த்தை புறப்பட்டுச் செல்ல தேவன் எனது வாயைக் கூர்மையாக்குகிறார்
பாடம்: நம்பிக்கையையும் அன்பையும் வழங்கும் வார்த்தைகளைப் பேசும்படி தேவன் நமது வாயை நிரப்ப அனுமதியுங்கள் ஒரு வேளை யாரிடமாவது நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கலாம். இயேசுவானவருடைய ஜீவனும் அன்பும் அவருடைய பிரசன்னத்தில் தொக்கி நிற்கிறது என்பதை உணருங்கள். அடைக்கலமும் கிருபையும் அதில் நிரம்பியிருக்கிறது. மறைந்திருத்தலும் பரிசுத்த ஆயத்தத்தில் அடங்கியிருக்கிறது. சுவிசேஷமும் ஜெபமும் பரிசுத்த ஆவியை வழங்கி, உங்கள் உள்ளத்தை தேவ அன்பால் நிரப்பு, ஜனங்கள் தங்கள் உள்ளதில் தேவ அன்பை வாஞ்சிக்க ஆயத்தப்படுத்துவார். 

-       தேவன் இன்னொரு காரியத்தையும் உங்கள் ஜீவியத்தில் செய்கிறார் – அவர் உங்களை ஓர் அம்பாகப் பாவிக்கிறார்!
குறி தவறாமல் நெடு தூரம் பாயக் கூடிய வகையில் அது துளக்கப்பட வேண்டும். நீங்கள் ராஜாதி ராஜனின் குமாரன் என்பதை மறவாதீர்கள்! துருக்கள் போக்கப்படுவதும், அதன் வல்லமைக்குத் தடையாக உள்ள அனைத்தும் நீக்கப்படுவதும் அதில் அடங்கும். துளக்கமாக்கும் பணி மெல்லமாக நடைபெற்றாலும், அதில் நோக்கம் நிறைந்திருக்கிறது. எனவே, தேவன் தம் பணியைச் செய்ய இடம் கொடுங்கள்.

-       பின்னர் தேவன் தம் அம்பறாத் துணியால் மறைப்பார்.
அம்பறாத் துணியால் மறைப்பது ஏற்றத் தருணத்தில் உங்களைப் புறப்படச் செய்வதற்கு அவருடைய மூலோபாய அணுகுமுறையாக இருக்கிறது.

தேவன் உங்களில் பின்வரும் காரியங்களைச் செய்கிறார் என்பது இதன் பொருள்:
(i)            ஆயத்தப்படுத்துதல்
(ii)           மூலோபாயப் படுத்துதல்
(iii)         குறி தவறாமல் சரியான தருணத்திற்கு தயாராக்குதல்


வேதம் வாசித்தல், அனுதினமும் ஆராதித்தல், பிரச்சனையுடையோருக்காக ஜெபித்தல், ஆகிய காரியங்களின் மூலம் தேவன் உங்களை ஆயத்தப்படுத்த இடம் கொடுங்கள். ஆயத்தத்தோடு காத்திருங்கள். தேவன் உங்களைப் பயன்படுத்துவார்.

No comments:

Post a Comment