Sunday, June 5, 2016

2015ம் ஆண்டு

2015ம் ஆண்டை வர்ணிக்க ஒரு பொறுத்தமான பதம் வேண்டுமென்றால், நான் எவ்விதத் தயக்கமுமின்றி ‘அச்சம்’ என்பதைத் தேர்ந்தெடுப்பேன்!

-       பொது மக்களை ஆதிக்கம் செலுத்த ‘அச்சம்’ என்பது ஆக்கப்பூர்வமான அரசியல் ஆயுதமாகும்.
-       ‘அச்சம்’ என்பது சமுதாயத்தை மனோவியல் ரீதியாக தலைமைத்துவத்துக்கு இணங்கிப் போகச் செய்யும் கருவியாகும்.
-       தங்கள் பக்தர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க ‘அச்சம்’ என்பது வல்லமையுள்ள சமைய ஆயுதமாகும்.


உள்ளூர் அரசியல், சமய, சமுதயத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் இந்தப் பரிதாபமான அச்சத்துக்குச் சாட்சியாகத் திகழ்கின்றன. நீங்கள் நகைக்கும்படியாகவோ அல்லது மனதுக்குள் கண்ணீர் வடிக்கும்படியாகவோ உள்ளூர் சமய இயக்கங்கள் செயல்பட்ட காரியங்களை கவனித்து வந்திருப்பீர்கள்.

சமுதாயத்தில் மித மிஞ்சிய இந்த அச்சம் தொடர்பாக நாம் எப்படி மாறுத்திரம் கூறலாம் என்பது நமது கேள்வியாகும். எனது இந்த ஆலோசனைகளைப் பரிசீலித்துப் பாருங்கள்:

1.     விசுவாசிகள் என்ற முறையில், பிற சமயங்களைக் குறிப்பாக அவர்களின் அப்பியாசங்களை மதிப்பதோடு, அவர்களுக்கு ஊக்கமும் கொடுக்க வேண்டும்.
2.     விசுவாசிகள் என்ற முறையில் நாம் அச்சத்துக்கு இலக்காக கூடாது. சுவிசேஷம் கூறுவது போல பரிபூரணமான அன்பு அந்த அச்சத்தை மேற்கொள்ளும்.
3.     நமது விசுவாசத்தை முழக்கமிடுவது மட்டுமல்லாமல், அதனை ஜீவியத்திலும் செயலிலும் வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளைப் பேசும். இயேசுவானவர் சிலுவையில் வெளிப்படுத்திய அன்பு உங்களை அச்சத்தில் இருந்து விடுவிக்க ஊக்கப்படுத்தும் என்று நான் உறுதியாக விசுவாசிக்கிறேன்.

நம்மால் அச்சம் என்ற ஆயுதப் பிரயோகத்தை நிறுத்தக் கூடாமல் போகலாம். ஆனால், அச்சத்தின் கட்டுகளில் இருந்து நாம் விடுவிக்கப்பட்டவர்கள் என்பதை சமுதாயத்திற்கு நிச்சயமாக வெளிப்படுத்தலாம்.


அனைவருக்கும் ஆசீர்வாதமான புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment