Tuesday, June 7, 2016

என் முகமும் சிந்தையும்

சங்கீதம் 27.8ல் தாவீது ராஜா இப்படிப் பாடுகிறார்: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.”

இந்த வசனத்தில் மட்டும் தாவீது இரண்டு உடல் உறுப்புகளைச் சம்பந்தப்படுத்துகிறார்: 
- என் இருதயம் – உணர்வுகள் யாவும் தோன்றும் இடம்;
- என் சிந்தை – ஞானங்கள் யாவும் தோன்றும் இடம்

இப்போது, என் உணர்வு ஒரு சிறந்த தீர்வைத் தேடவேண்டியுள்ளது. என் ஞானம் அதற்கு ஒத்துப்போய்,  தேவனை நாடுகிறது. பின்னர் என் முழுமையும் தேவனுக்காக கதறுகிறது. ஒரு விநாடி கற்பனை செய்து பாருங்கள் – என் உணர்வின் மையம் தேவனோடு தொடர்பில்லாமல் இருந்தால் என்ன ஆகும்! என் உணர்வுகள் அமர்ந்து, என் உள்ளம் வேறு எதையோ தேடும்! எனவேதான் நமது உணர்வுகளையும் ஞானத்தையும் தேவ சத்தியத்தைச் சார்ந்திருக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வழி சத்தியம் நம்மை விடுவிக்கும்!

எப்படி நாம் பழக்கப்படுத்துவது? வேதாகமத்தை நாள்தோறும் வாசித்து குறைந்தது வாக்குத்தத்தங்களையாவது மனனம் செய்யுங்கள்! வாசித்ததைக் குறித்து தியானம் செய். வாசித்த வசனங்களைக் குறித்து சாத்தியமான உதாரணங்களைத் தருமாறு பரிசுத்த ஆவியானவரிடம் வேண்டிக் கொள். அவர் செவி மடுத்துப் பதிலளிப்பார். இவ்வாறு நாம் வேத வசனத்தை நமது ஜீவியத்தில் அப்பியாசப்படுத்தலாம்.


உனது சிந்தையையும் உணர்வுகளையும் தேவன் ஒப்புரவாக்குவாராக. அது பல குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும்! தேவனுக்கே ஸ்தோத்திரம்! 

No comments:

Post a Comment