Tuesday, June 7, 2016

தமிழ் சீஷத்துவப் பயிற்சி - அறிமுகம்



அமர்வு 1           ஒருங்கமைப்பாளர்: மறைதிரு ஜெஸ்விந்தர் சிங்                நேரம்: 9.30 am – 10.15 am

முன்னுரை:
ÿ  சீஷத்துவம் நமது சபைகளில் ஒரு காலத்தில் மறக்கப்பட்ட துறையாக இருந்தது; ஆனால், சமீப காலமாக அதற்கு மீண்டும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ÿ  சீஷத்துவம் என்பது ஒருவரின் மதத்தை மாற்றுவது அல்ல; ஆனால், அவரின் குணாதிசயத்தை மாற்றியமைப்பது ஆகும்.
ÿ  சீஷத்துவம் என்பது இயேசு கிறிஸ்துவைப் போல் மாறுவது. இது ஒரு தொடர் செயற்பாங்கு ஆகும்.

 

லூக்கா 6:40

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
ÿ  இயேசு தம் செய்தியைக் கேட்பவர்களுக்கு இரண்டு பகுதியான அழைப்பைக் கொடுப்பதைப் பாருங்கள்:

மத்தேயு 11:28-30
28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

      பகுதி 1:                                வசனம் 28- இயேசுவானர் தம் கிருபையின் வெகுமதியைப் பெற்றுக் கொள்ள                              அழைக்கிறார்.
      பகுதி 2:                                வசனம் 29 & 30- சீஷத்துவ ஜீவியத்துக்கு இயேசு அழைப்பு விடுக்கிறார்.

1. சீஷத்துவம் என்பதானது இயேசுவானவரின் கட்டளை:

மத்தேயு 28:18-20
18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.

      கட்டளை:            புறப்பட்டுப்போய் சீஷராக்குங்கள்
      கடமை:                                ஞானஸ்நானங் கொடுங்கள்
      இலக்கு:               (கற்பனைகளைக்) கைக்கொள்ள உபதேசம் பண்ணுங்கள்


2. சீஷத்துவம் முக்கியமானது:

2.1 தனிப்பட்ட சீஷத்துவத்துக்கு இயேசு முன்னுரிமை அளிக்கிறார்:

ÿ  இயேசுவானவரும் திரளான ஜனங்களும் (மாற்கு 5:24; மாற்கு 10:1; லூக்கா 5:1; மத்தேயு 4:25)
ÿ  இயேசுவானவரும் 70 சீஷர்களும் (லூக்கா 10:1)
ÿ  இயேசுவானவரும் அவரின் பன்னிரெண்டு சீஷர்களும் (மத்தேயு 10:2-4; மாற்கு 3:14-19; லூக்கா 6:13-16)
ÿ  இயேசுவானவருலும் மூன்று சீஷர்களும் (மத்தேயு 17:1; மாற்கு 5:37; 14:33; லூக்கா 8:51)

தகவல்: ஜனங்களை சீஷர்களாக்குவதற்கு திரளான ஜனங்களைப் பார்க்கிலும் சிறு குழுக்களுக்கே இயேசுவனவர் அதிக நேரம் ஒதுக்கினார்.

2.2 ஆதித் திருச்சபைகளில் சீஷத்துவத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதுவே ஜீவியத்தின் வழியாகவும் திகழ்ந்தது:

அப்போஸ்தலர் 2:42-47
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

      உபதேசம்:           “…அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் …”
      ஐக்கியம்:             “…ஒருமித்திருந்தார்கள்விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும்                          பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.…”
      அப்பம் பிட்குதல்: “…அப்பம் பிட்டார்கள்வீடுகள்தோறும் அப்பம்பிட்டார்கள் …”
      ஜெபம்:                                “…ஜெபித்தார்கள்…”
      வளர்ச்சி:              “…இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்                                 கொண்டு வந்தார்.

தகவல்: சீஷத்துவம் என்பது வெறும் பயிற்சியோ பயிலரங்கோ அல்ல; ஆனால் ஒரு சபை ஜீவியமாகிறது.


3. சீஷத்துவம் – ஒரு விளக்கம்:

ÿ சீஷர் என்பவர் கற்பவரும் செயல்படுத்துபவரும் ஆவான்
சீஷரானவர் இயேசுவானவரிடத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் அவற்றைச் செயல்படுத்தவும் வாஞ்சையுள்ளவன்.

      யாக்கோபு 1:22- அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

 

ÿ ஒரு சீஷர் சுவிசேஷத்தை மையமாகக் கொண்டவன்
ஒரு சீஷர் தன் அணுகுமுறையிலும், ஊழியத்திலும், ஜீவியத்திலும் சுவிசேஷத்தை மையமாகக் கொண்டிருப்பான்.
யோவான் 3:16-
      தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

 

ÿ ஒரு சீஷர் தன் எஜமானைப் பின்பற்றவும் பிரதிபலிக்கவும் செய்கிறான்
சீஷர் என்பர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதோடு பிரதிபலிக்கவும் செய்கிறான்.
      1 John 2:6 - அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

ÿ ஒரு சீஷன் பிறனை சீஷராக்குகிறான்
ஒரு சீஷன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதோடு அவரைத் தன் ஜீவியத்தில் பிரதிபலிக்கிறான்.
மத்தேயு 28:19 -  ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்(குங்கள்):.


கலந்துரையாடுவதற்கான கேள்விகள்:

கேள்வி 1:
இந்த அமர்வு, வேதாகம சீஷத்துவத்தைப் பற்றிய உங்கள் புரிதலையும் அறிதலையும் எப்படி மாற்றியுள்ளது?

கேள்வி 2:

இயேசுவானவரின் உண்மையான சீஷராகுவதுற்கு நீ எத்தகைய அதிரடியான நடவடிக்கையை எடுத்துச் செயல்படுத்தப் போகிறாய்? 

No comments:

Post a Comment