Tuesday, June 7, 2016

ஐந்து விரல் ஜெபக் குறிப்பு


1.             பெரு (கட்டை) விரல் உங்களுக்கு அருகில் இருக்கிறது. எனவே, உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்குங்கள். அவர்களை நினைவு கூர்வது எளிதான காரியம். நமக்கு அன்பானவர்களுக்காக ஜெபிப்பது சி.எஸ். லேவிஸ் சொன்னது போல ‘இனிமையான’ அனுபவமாகும்.
2.             அடுத்தது சுட்டு விரல் ஆகும். உங்களுக்கு உபதேசிக்கிறவர்களுக்கு, வழிகாட்டுகிறவர்களுக்கு மற்றும் ஜெபிப்பவர்களுக்காக ஜெபியுங்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் இப்பட்டியலில் அடங்குவார்கள். பிறரைச் சரியான வழியில் நடத்துவதற்கு ஆதரவும் ஞானமும் தேவைப்படுகிறது.
3.             அடுத்து (உயரமான) நடு விரல் ஆகும். இது நமது தலைவர்களை நினைவு கூர்கிறது. நமது பிரதமர், இராணுவ தளபதி, வணிக மற்றும் தொழிலாதிபர்களுக்காக ஜெபியுங்கள். இவர்கள் நமது தேசத்தையும் பொதுவான கருத்துகளையும் வழிநடத்துகிறார்கள். இவர்களுக்கு தேவனுடைய வழிகாட்டல் தேவைப்படுகிறது.
4.             நான்காவது மோதிர விரலாகும். ஆச்சரியமான காரியம் என்னவெனில், இது மிகவும் பலவீனமான விரலாகும். பியானோ ஆசிரியர்களும் இதை உறுதிப்படுத்துவார்கள். பெலவீனமானவர்களுக்கும், பிரச்சனையில் உள்ளவர்களுக்கும், வேதனையில் உள்ளவர்களுக்கும் ஜெபிக்க வேண்டும் என்று இது உறுதிப்படுத்துகிறது. இவர்களுக்கு இரவும் பகலும் உங்கள் ஜெபம் தேவைப்படுகிறது. இவர்களுக்காக நீங்கள் அதிகம் ஜெபிக்க முடியாது.
5.             சிறு விரல் கடைசியாக வருகிறது; தேவன் – பிறர் – நாம் என்ற உறவில் நம்மைச் சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இது ஞாபகப்படுத்துகிறது. ‘தாழ்த்தப்படுகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்’ என்ற வேத வாக்கை இது நினைவுறுத்துகிறது. இந்தச் சிறுவிரல் உங்களுக்காக ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவுப்படுத்துகிறது. இதர நான்கு தரப்புக்காகவும் ஜெபித்து முடிக்கும் நேரத்தில், உங்கள் தேவை இன்னதென்று உணர்த்தப்படும். இதன் மூலம் உங்களுக்காக ஆக்ககரமாக ஜெபித்துக் கொள்ள முடியும்.

{ஆசிரியர் அறியப்படவில்லை}

No comments:

Post a Comment