பகுதி 10 of 10
-------------------------------------------------------
கடந்த வார மீள்பார்வை:
1. சோதனைக்குப் பிரவேசிக்கப்
பண்ணாமல்
2. விடுவியும்
முன்னுரை:
கர்த்தருடைய ஜெபத்தின் இப்பகுதி கடைசி ஜெபமாகும்.
†
கர்த்தருடைய ஜெபம் ‘தேவன்’ என்ற வார்த்தையில் தொடங்கி ‘தேவன்’ என்ற வார்த்தையிலேயே முடிகிறது. (ஆங்கிலத்தில்)
தேவனை மையமிட்டிருத்தல் (6:9-10)
|
விண்ணப்பம்
(6:11-13a)
|
தேவனை மையமிட்டிருத்தல் (6:13b)
|
†
கர்த்தருடைய ஜெபத்தில் இதுவே
சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
†
ஜெபங்களிலும் விண்ணப்பங்களிலும்
நாம் பின்பற்ற வேண்டிய ஒரு வடிவத்தை இது தருகிறது.
†
ஆயினும் பழைய ஏற்பாட்டில்
பின்வரும் ஜெபங்களில் ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன.:
1 நாளாகம்ம் 29:10-13 - ஆகையால்
தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச்
சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும்
தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் கனமும்
உம்மாலே வருகிறது; தேவரீர்
எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு;
எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால்
ஆகும். இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி,
உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.
சங்கீதம்
145:9-13 - கர்த்தர் எல்லார்மேலும்
தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய
எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். மனுபுத்திரருக்கு
உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். உம்முடைய ராஜ்யம்
சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
ரோமர் 1:20-21 - எப்படியென்றால்,
காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு,
தெளிவாய்க் காணப்படும்;
ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும்,
அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து,
தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
†
தேவனே சர்வ வல்லமையுள்ள
ஆட்சியாளர். சகல மகிமையும் தோத்திரமும்
என்றென்றும் அவருக்கே உடையது.
1. தேவனுடைய
ராஜ்யம்
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
அப்போஸ்தலர் 1:3 - அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,
தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை
உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
†
இயேசுவானவர் தேவனுடைய ராஜ்யத்தைப்
பற்றி உபதேசித்தார். நாம்
அதில் கவனம் செலுத்த வேண்டும்.
2 தீமத்தேயு 4:1 - நான் தேவனுக்கு முன்பாகவும்,
உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும்,
அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக
வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
2. தேவனின்
வல்லமை
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே,
ஆமென், என்பதே.
அப்போஸ்தல் 1:8 - பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின்
கடைசிபரியந்தமும், எனக்குச்
சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
3. தேவனின்
மகிமை
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
1 தீமத்தேயு 1:17
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள
ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
சுருக்கம்:
1. தேவனுடைய ராஜ்யம் 2.
தேவனின் வல்லமை 3. தேவனின்
மகிமை
---------------------------------------------------------------------------------------------------------------
குழு கலந்துரையாடல்:
1.
ஜெபம் நேரம், ஜெப பாணி அடிப்படையில் உன் ஜெப வடிவத்தைப் பகிர்ந்து கொள்.
2.
இந்த 10 வார வேத ஆராய்ச்சியின் மூலம் நீ எப்படி தேவனுடைய ஆசீர்வாதத்தைப்
பெற்றாய் என்பதை சிறு குழுவில் பகிர்ந்து கொள்.
No comments:
Post a Comment