Tuesday, June 7, 2016

இயேசுவானவருக்கு உண்டான சோதனை

 5ல் 2வது பகுதி
வேத பகுதி: மத்தேயு 4:1-11
--------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை:

         நம்மைச் சூழ்ந்துள்ள எல்லா சமயத்தாரும் ஏதாவது ஒரு வகையான உபவாசத்தைக் கடைபிடிக்கின்றனர்.
         ஒப்பீடு: உபவாசமும் விருந்தும்’- எது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது?

பரிசுத்த ஆவியால் நிறைந்திருத்தல் (லூக்கா 4:1)      Ü            பரிசுத்த ஆவியின் வல்லமை (லூக்கா 4:14)

†              சோதனை நேரத்தில் இந்த உருமாற்றங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை?

மத்தேயு 4:2-4
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

1. உபவாசமும் மாம்ச இச்சையும்:

1.1 உபவாசம்

மத்தேயு 4:2
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று
†              உபவாச நடவடிக்கை இன்றைய திருச்சபைகளில் அதிகம் புரக்கணிக்கப்படுகிற ஆவிக்குரிய ஒழுங்காக இருக்கிறது.
†              இக்காலத்தில் வனாந்திரத்தில் உபவாசிக்கவும் ஜெபிக்கவும் இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார்.

பிலிப்பியர் 2:7
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

†              உபவாசம் என்பது நம்மைவெறுமையாக்கிதேவனைத் தேடுவது ஆகும்.

மத்தேயு 5:6
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.”
ரோமர்  7:14-25-உம் வாசிக்கவும்

†              மாம்சத்தின் வாஞ்சை நமது ஆவியை ஆண்டு ஜீவியத்தை அடிமைப்படுத்தும்.
†              எனவே, நாம் சரீரத்திற்கு அடிமையாகி நமது சபலத்திற்கும் பொல்லாத நினைவுகளுக்கும் ஒப்புக் கொடுப்போம்.

2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

†              எனவே, உபவாசம் நமது சரீர பெலவீனத்தில் தேவ வல்லமையை அனுபவிக்க வகை செய்யும்.

1.2 நாற்பது நாள் இராப்பகல்

மத்தேயு 4:2
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

†              இக்காலக்கட்டத்தில் நாற்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது சுவிசேஷத்தில் அர்த்தப்பூர்வமானது.
†              யூதர்கள் இந்தக் கால இடைவேளையை நீண்டதாகக் கருதுகிறார்கள்.

யாத்திராகம்ம் 24:18
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

உபாகம் 9:18 (வாசிக்கவும்: வசனம் 25; உபாகமம் 8:2-5 & 9:25)
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும்பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
               
†              இயேசுவும் மோசே, எலியா போல சோதிக்கப்பட்டார். இது யூதர்களுக்கும் பரீட்சயமாக இருக்கிறது.

2. முதல் சோதனை: “கற்கள் அப்பமாக மாற வேண்டும்

2.1 தேவ குமாரன்

மத்தேயு 4:3
நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்.

†              மத்தேயு 3.17ல் பிதா சொன்ன வார்த்தையை உறுதி செய்யுமாறு சோதனைக்காரன் சவால் விடுகிறான்.

1 யோவான் 5:9-10-உம் வாசிக்கவும்.

2.2 சுயநல அற்புதம்

மத்தேயு 4:3
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

†              அற்புதம் செய்வதன் மூலம் இயேசுவானவரின் தெய்வீக குமாரத்துவத்தை நிரூபிக்குமாறு சோதனைக்காரன் சவால் விடுகிறான்.
†              இது ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த சோதனையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

ஆதியாகமம் 3:6
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

†              தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போகும் அளவுக்கு ஏவாள் தன் சரீரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சோதிக்கப்பட்டாள்.
†              வேதம் இதனைசரீரத்தின் இச்சைஎன்று சொல்கிறதுதிருப்தியடைவதற்கான விருப்பமும் தேவையும்

1 யோவான் 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

†              ஏசா, தன் சரீர திருப்திக்காக சேஷ்ட புத்திர உரிமையை விற்றும் போட்டான். (ஆதியாகம்ம் 25:29-34)

யாத்திராகமம் 16:2-3
இஸ்ரவேல் புத்திரர்கள் யாவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக வனாந்திரத்தில் முறுமுறுத்தார்கள்.

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி,...

†              தேவனுக்கு எதிராக ஏசா மற்றும் இஸ்ரவேலர்கள் போல் செயல்பட இயேசுவானவர் சோதிக்கப்பட்டார்.

3. பிரதியுத்திரம்

3.1 மனிதனும் அப்பமும்

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

†              இஸ்ரவேலர்களுக்குத் தொடர்புடைய வேத வசனத் மேற்கோள் காட்டி இயேசு பிரதியுத்திரம் சொன்னார்.

நாளாகம்ம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

3.2 தேவனின் வார்த்தை

மத்தேயு 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

†              ஆவிக்குரிய ஊட்டத்திற்கு தேவ வார்த்தையின் முக்கியத்துவத்தை இயேசுவானவரின் பதிலில் காண முடிந்தது.

எபிரேயர் 4:12 (வாசிக்கவும்: 2 தீமத்தேயு 3:16)
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

யோவான் 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

†              நம்மில் தேவ வார்த்தையின் ஊட்ட வல்லமையை நாம் கண்டு அனுபவிக்க வேண்டும்.

முடிவுரை:
†              தம் சொந்த தேவைகைளைப் பூர்த்தி செய்ய இயேசுவானவர் சோதிக்கப்பட்டாலும், அவர் பிசாசுக்குப் பதிலாக தேவனுக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தார்.

யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
சிறு குழு கலந்துரையாடலுக்கான கேள்விகள்:

1. இன்று நமது சரீர இச்சை மற்றும் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய நாம் எப்படிச் சோதிக்கப்படுகிறோம்.
2. இன்றைய நமது ஜீவியத்தில் ஜீவனுள்ள மற்றும் துலங்கும் தேவ வார்த்தையைக் கண்டு அனுபவிக்க நம்மையும் பிறரையும் எப்படி ஊக்குவிக்க முடியும்?

3. இன்று, ஆவிக்குரிய ஒழுக்கம் மற்றும் ஜெபத்தை நாம் எப்படி ஊக்குவிக்கலாம்?

No comments:

Post a Comment