கேரல் பவனி, தீப ஆராதனை, கிறிஸ்மஸ்
ஆராதனை என்று எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ஒவ்வொன்றையும், தேவன் நம்மை
ஒருபோதும் நிராகரிக்க மாட்டார். மாறாக, முன் நிபந்தனை இன்று ஏற்றுக் கொள்வார்,
என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உண்மை என்னவென்றால் என்னவென்றால்,
நம்மைச் சுற்றி மனமுடைந்து போனோர் அநேகர் உள்ளனர். உறவு முறிந்து போகுதல் – சுய
ஆளுமை முறிந்து போகுதல் – வணிகம் நஷ்டமடைதல் – நம்பிக்கை இழந்து போகுதல் – உள்ளம்
உடைந்து போகுதல்…. ஓர் அன்பான வார்த்தை – அக்கறையோடு அறவணைத்தல் – கரிசணையோடு நலன்
விசாரித்தல் …… விவரிக்க முடியாத சந்தோஷத்தையும் சுகத்தையும் கொண்டு வரக் கூடும்.
இந்த ஆலோசனையை முயன்று பாருங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவின் பிறப்பை அறிவித்த வான தூதர்கள், ‘இச்செய்தி
அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும்’ என்று சொன்னார்கள்.
நாம் சுயத்துக்காக மட்டும்
கிறிஸ்மஸைக் கொண்டாட வேண்டாம்!
No comments:
Post a Comment