Tuesday, June 7, 2016

நமது ஜீவியத்திற்கு எதிரான சவால்கள்

ரீடஸ்ட் டைஜட் புத்தகத்தில் ஷர்ப்பா டென்ஷிங் நோர்கே என்பவரின் கட்டுரையை வாசித்தேன். இவர் எவரஸ்ட் மலையின் சிகரத்திற்கு முதன் முதலில் சென்ற எட்மன்ட் ஹிலறியின் வழி காட்டி ஆவார்.

ஒரு பேட்டியில் டென்ஷிங், ‘இந்த மலை பாறையும் ஐஸ்கட்டியும் நிறைந்த ஜடமாக எனக்குத் தோன்றவில்லை,, ஆனால், வெப்பமும், நட்பும், ஜீவியமும் நிறைந்ததாகக் காண்கிறேன்’.

இது சொல்லப்படுவதற்கு எளிதாகத் தோன்றினாலும் நிதரிசணத்தில் அப்படியல்ல. எட்மன்டும் டென்ஷிங்கும் எவரஸ்ட் சிகரத்தில் கடுங் குளிரையும் அபாயங்களையும் பணிப் பாறைகளையும் உச்சியில் இருந்து விழும் அபாயத்தையும் கடந்து சென்றவர்கள்.

நமது ஜீவியத்திற்கு எதிராக வருகின்ற அனைத்து வகையான சவால்களையும் குறித்தும் நமக்கும் இருக்க வேண்டிய ஆக்ககரமான மனப் பக்குவத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டுவதற்காகவே இதனை எழுதுகிறேன்.

மகிழ்வும் ஆக்கமும் நிறைந்த சிந்தை, நமது படைப்பாளியான தேவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.


பரிசுத்த ஆவியிடம் இருந்து இந்த மகிழ்வும் ஆக்கமும் நிறைந்த மனப் போக்கைப் பெற்றுக் கொள்வோம். நீங்கள் பலருடைய நம்பிக்கைக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழலாம்.

No comments:

Post a Comment