Monday, June 6, 2016

நீங்களே தேவனுடைய ஆலயம்

1 கொரிந்தியர் 3..16ல் இடம் பெற்ற இரண்டு முக்கிய உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(a)           நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?
(b)           தேவ ஆவியானவர் உங்களில் ஜீவிக்கிறார் என்பதையும் அறிவீர்களா?

தேவ ஆலயமாக இருப்பது என்றால் அவருடைய அற்புதமான பிரசன்னைத்தை உங்களில் நடமாடச் செய்யவேண்டியது கடமையாகும். இது ஒரு தீவிரமான கருத்து. புரட்சிகரமானதும் கூட. ஒரு மாற்றத்தை உண்டு பண்ணும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. தேவ பிரசன்னம் எந்த அல்லது எல்லா நிலைமைகளையும் வெற்றிக் கொள்ளக் கூடியது. ஒரு தனி நபரிலும், குடும்பத்திலும், பணிமனையிலும், சமுதாயத்திலும் அது மாற்றத்தைக் கொண்டு வரும். அதுதான் தேவ பிரசன்னத்தின் பிரமாண்டமான வல்லமை. எனவே, ஆன மட்டும் ஜனங்களோடு உங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‘தேவ ஆவியானவர் உன்னில் வாசம் பண்ணுகிறது’ என்று இந்த வசனத்தின் இரண்டாம் பகுதி சொல்கிறது. அவருடைய வல்லமையை நமக்கு அருளியிருக்கிறார் என்பது இதன் பொருள். மீண்டும் சொல்கிறேன். – நம்மில் செயல்பட அனுமதித்துள்ளார். ஆனால் ஏன்? சத்தியம் சொல்லப்பட்டு ஆயிற்று: நீங்களும் நானும் சுயமாக எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால், நாம் மாற்றத்தின்கான கருவியாக செயல்படுகிறோம்! எனவேதான் தேவன் தமது ஆக்கப்பூர்வமான வல்லமையை நமக்கு கிருபையோடு அருளியிருக்கிறார் அதுதான் பரிசுத்த ஆவியானவர். நமக்குக் கொடுக்கப்பட்ட காரியத்தில் நாம் மாற்றத்தை உண்டு பண்ணும் கருவியாகத் திகழ வல்லமை பெற்றிருக்கிறோம்.

சமுதாயத்திற்குத் தேவையானவற்றை நீங்களும் நானும் செய்வதற்கு தேவன் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதைக் கண்டு பிடியுங்கள்.


தேவன் நாம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment