Tuesday, June 7, 2016

இயேசு vs சந்தா


சந்தா வட துருவத்தில் வசிக்கிறார்...
இயேசு  எல்லா இடங்களிலும் வசிக்கிறார்.
சந்தா பணிச் சறுக்கு வண்டியில் பயணிக்கிறார்...
இயேசு  காற்றிலும் நீரிலும் பயணிக்கிறார்.
சந்தா ஆண்டுக்கு ஒரு முறைதான் வருவார்...
இயேசு  உதவி வழங்குவதற்காக எல்லா நேரத்திலும் பிரவேசிக்கிறார்.
சந்தா உங்கள் காலுறையில் பல பொருள்களால் நிறப்புகிறார்...
இயேசு  உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.
சந்தா உங்கள் புகைப்போக்கி வழியாக அழையாமல் வருவார் …
இயேசு  உங்கள் இதய வாசலில் நின்று தட்டுகிறார். நீங்கள் அழைத்தால் அவர் வருவார்.
சந்தாவைப் பார்க்க நீங்கள் வரிவை பிடிக்க வேண்டும்...
இயேசு  உங்கள் நாவு உச்சரிக்கும் நெறுக்கத்தில் இருக்கிறார்.
சந்தா தன் மடியில் உங்களை உட்கார வைக்கிறார்...
இயேசு  தமது மார்பில் உங்களை ஓய்வெடுக்க வைக்கிறார்.
சந்தாவுக்கு உங்கள் பெயர் தெரியாது. ‘உன் பெயர் என்ன சிறுவனே (சிறுமியே)? என்று மட்டும் அவருக்குக் கேட்கத் தெரியும்...
இயேசு, நாம் பிறப்பதற்கு முன் நம் பெயரை அறிந்து வைத்திருக்கிறார்.  மாத்திரமல்லாமல், நமது முகவரி, வரலாறு, எதிர்காலம் என்று எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கிறார். மேலும் நமது தலை மயிரையும் அவர் எண்ணி வைத்திருக்கிறார்!
சந்தாவுக்கு தோம்பு போன்ற தொப்பை இருக்கும்...
இயேசுவுக்கு அன்பு நிறைந்த உள்ளம் இருக்கும்
எல்லா சந்தாவும், ‘ஹோ, ஹோ, ஹோ என்பதை மட்டும் வழங்க முடியும்...
இயேசு  ஆரோக்கியத்தையும், உதவியையும், நம்பிக்கையையும் வழங்குகிறார்.
சந்தா சொல்கிறார் "நீ அழக்கூடாது "...
இயேசு  சொல்கிறார் "உன் கவலைகளை எல்லாம் என்னிடம் விட்டுவிடு. நான் கவனித்துக் கொள்கிறேன்."
சந்தாவின் உதவியாளர்கள் பொம்மைகளைச் செந்து தருகிறார்கள்...
இயேசு  ஜீவியத்தைத் தந்து, உள்ளத்தைத் தைத்து, ஓட்டை வீட்டைக் கட்டி எழுப்பி, மாளிகையைத் தருகிறார்.
சந்தா ஒரு வேளை உங்களை சிரிக்க வைக்க முடியும்...
இயேசு உங்களைப் பெலப்படுத்தி சந்தோஷத்தைத் தர முடியும்.
சந்தா பரிசுகளை கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் வைக்கும் நேரத்தில்...
இயேசு  தமது ஜீவனை ஈவாகத் தந்து நமக்காக மரித்தார்!

கிறிஸ்துவையே நாம் இத்திருநாளில் முதன்மைப்படுத்த வேண்டும். அவரே இப்பெருநாளுக்கு மூல கர்த்தா.

கையாளப்பட்டது:

No comments:

Post a Comment