Tuesday, June 7, 2016

நமது குடும்பம்

தேவனுடைய கிருபையால் இன்று முதல் நாம் பரிசுத்த வாரத்திற்குள் பிரவேசிக்கிறோம். உங்கள் ஆவிக்கிரிய ஜீவியம் இந்த லெந்து காலத்தில் வளர நான் மனதின் ஆழத்தில் இருந்து ஜெபிக்கிறேன். நாம் தேவனுடைய தரிசணத்தைத் தெளிவாகக் காணவும், சத்தத்தைக் கூர்ந்து கவனிக்கவும் பரிசுத்த ஆவியானவர் நமது கவனத்தைக் கூர்மையாக்குவாராக.

நமது தேசத்தில் உள்ள குடும்ப நிறுவனங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த நவீன யுகச் சவால்களும், பிசாசானவனின் நுட்பமான தாக்குதல்களும் நமது சமூகத்தின் அஸ்திவரத்தையே குலுக்குகின்றன: குடும்பம்! நீங்களும் நானும் குடும்பங்களைச் சுகப்படுத்தவும், மீளக் கட்டுவதற்கும், சமாதானப்படுத்தவும், மறு ஒழுங்குப் படுத்தவும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

சுகத்தைக் கண்டடைந்து அன்பில் கட்டப்பட்ட குடும்பம் சமுதாயத்தையும் அவ்வண்ணமே கட்டுகிறது. இந்தச் சமுதாயம் ஒரு தேசத்தையே மாற்றியமைக்க முடியும். நமது சபை இந்தச் சமுதாயத்தையே மாற்றியமைக்கும் அற்புதமான வல்லமையைப் பெற்றிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.


பிற குடும்பங்களுக்கு ஆசீர்வாதமாக மாற தேவன் நமது குடும்பங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment