Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்- பாகம் 9



கடந்த வார மீள்பார்வை:    
1. மன்னிக்கப்படுதல்            2. மன்னித்தல்

முன்னுரை: கர்த்தருடைய ஜெபத்தின் இந்தப் பகுதி சோதனை மற்றும் பொல்லாப்பைப் பற்றியது.

1. சோதனைக்குப் பிரவேசிக்கப் பண்ணாமல்
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
               
1.1 சோதனையும் சோதிக்கப்படுதலும்
†              ஆங்கிலத்தின் இதன் மூலம் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது  (‘peirazein’)
†              ‘பாவத்தில்விழச் சோதனை உண்டாகிறது. நமதுநேர்மை’  உறுதி செய்யப்படுவதற்கு சோதனை தருவிக்கப்படுகிறது. (யாக்கோபு 1.3, 12ஐ வாசிக்கவும்)
               
1.2 தேவன் நம்மைச் சோதிப்பதில்லை
யாக்கோபு 1:13 - சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. (ஆதியாகமம் 22.1ஐயும் வாசிக்கவும்)

†              தேவன் நம்மைச் சோதிப்பதில்லை. மாறாக, நாம்சோதிக்கப்படுவதற்குஅனுமதிக்கிறார். இதன் மூலம் நம்மை நாம் அறிய முடியும்.

1.3 பிசாசானவனே சோதிக்கிறான்
மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். (2 கொரி.2.11, எபே.6.12ஐயும் வாசிக்கவும்)

†              நாம் தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் விரோதமாகப் பாவம் செய்வதற்கு நம்மைசோதிக்கிறான்’.

1.4 நம் பாவ சுபாவத்தினால் சிக்க வைத்தல்
யாக்கோபு 1:14 - அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
1 கொரிந்தியர் 10:12 - இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
               
†              தேவனில் சார்ந்திருக்க வேண்டியவர்கள் என்பதால் ஆவிக்குரிய தற்பெருமையிலும், அறியாமையிலும் எச்சரிக்கையாய் இருங்கள்.

1.5 உதவிக்கான ஜெபம்
மத்தேயு 26:41 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (சங்கீதம் 19.13, லூக்கா 22.31-32யும் வாசிக்கவும்)

1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

2. விடுவியும்:
மத்தேயு 6:13 - எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.

2.1 பிசாசானவன் பொல்லாதவன்
1 யோவான் 5:19 - உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.


2.2 பொல்லாங்கள் குருடாக்கி பறித்துக் கொள்ளுகிறான்.
மத்தேயு 13:19 - ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

2 கொரிந்தியர் 4:4 - அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

2.3 பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
யாக்கோபு 4:7 - ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். (யோவான் 17.15, சங்கீதம் 141.4ஐயும் வாசிக்கவும்)

சுருக்கம்:1. சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல்   2. விடுவியும்
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் கேள்விகளைக் கலந்துரையாடவும்:


சோதனைகளையும் பொல்லாங்கனையும் எதிர்கொள்வதற்கு நாம் தேவனைச் சார்ந்திருக்க எவ்வாறு கற்றுக் கொள்ள முடியும்?  

No comments:

Post a Comment