Tuesday, June 7, 2016

ஆசீர்வாதமும் அழகும் நிறைந்த 2014ன் கிறிஸ்மஸைக் காண வாழ்த்துகிறோம்.

இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் புத்தாண்டைக் கடக்கவிருக்கிறோம். 2014ம் ஆண்டில் பல வியப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்தன. பல காரியங்களை நாம் செய்து முடிக்க நினைத்திருப்போம்; அல்லது செய்தவற்றை வேறு விதமாக செய்ய நினைத்திருப்போம். வருத்தங்களும், வேதனைகளும், சந்தோஷங்களும், களிப்புகளும் கடந்த 11 மாதங்களை நிரப்பியிருக்கும்.

2014ம் ஆண்டின் உங்கள் தீர்மானங்களையும் இலக்குகளையும் நிரப்பி நீங்கள் டிசம்பர் மாத்த்தைப் பயன்படுத்த நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். எடையைக் குறைத்தல், வேதாகமத்தை வாசித்து முடித்தல், வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தல், யாரையாவது மன்னித்தல், தொடர்பிழந்த நட்பு / உறவைக் கண்டு பிடித்தல் போன்ற காரியங்களில் நீங்கள் ஈடுபடலாம். உங்கள் மூட்டையை 2015ம் ஆண்டுக்குக் சுமந்து வராதீர்கள்.

பின்வரும் காரியங்கள் நீங்கள் செய்யக் கூடியவை ஆகும்:

1.             தேவனிடத்தில் ஞானத்தைப் பெற ஜெபியுங்கள்.
2.             நீங்கள் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைப் பட்டியலிடுங்கள்.
3.             உங்கள் கருத்தைக் கேட்க்க் கூடியவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவும் திட்டமிடுங்கள்.
4.             பெருந் திட்டத்தை அல்ல; அடையக் கூடிய இலக்கைத் திட்டமிடுங்கள். உதாரணமாக, உங்கள் எடையைக் குறைக்க நித்தால், வரும் டிசம்பர் 31, 2014க்கு ஒரு கிலோவைக் குறைத்து விடுங்கள். வேதத்தை வாசித்து முடிக்க நினைத்தால் 4 சுவிசேஷங்களையும் வாசித்து முடியுங்கள்.
5.             சந்தோஷப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுங்கள். ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த ஜனங்களோடு பழகுங்கள். தேக்கமும் சோகமும் நிறைந்த ஜனங்களைத் தவிர்த்து விடுங்கள்.

இந்த எளிய செய்து உங்களை 2915க்குத் திட்டமிட முன்னோக்கி இழுக்கும் என்று ஜெபித்து வாஞ்சிக்கிறோம். ‘எப்போதும் தயாராக இருங்கள்’ என்று வேதாகம்ம் போதிக்கிறது. சிறந்த திட்டமிடுதலாலும் சரியான நடவடிக்கையினாலும் நமது இரட்சகரின் ஞானமும் கிருபையும் நம்மை வழிநடத்த, விரும்பத் தகாத காரியங்களைத் தவிர்க்கக் கூடும்.

ஆசீர்வாதமும் அழகும் நிறைந்த 2014ன் கிறிஸ்மஸைக் காண வாழ்த்துகிறோம்.


தேவன் உங்களை ஆசீர்வதித்து எப்போதும் நேசிப்பாராக. 

No comments:

Post a Comment