2014 உண்மையிலேயே நாட்க்கு
அதிர்ச்யியூட்டும் ஆண்டாகத் திகழ்ந்தது. MH370 மற்றும் MH17ஆகிய விமானங்களுக்கு
நேர்ந்த துயரத்தை யாரால் மறக்க முடியும்? இந்தச் சம்பவங்களின் மரித்துப்
போனவர்களுக்காகவும் மறைந்து போனவர்களுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் உற்றாரின்
துயரத்தை யாரால் போக்கக் கூடும்?
சமய தீவிரவாத நடவடிக்கைகளின்
அதிகரிப்பையும் இந்த ஆண்டு கண்டது. நிலைத் தன்மையற்ற பெட்ரோல் விலையினால் ஏற்படக்
கூடிய பொருளாதாரத் தேக்கத்தையும் காணவிருக்கிறோம்.
ஆனால் நாளைய தினம் நம்மோடு இருக்கிறது....நம்பிக்கையும், எதிர்ப்பார்ப்பும், ஜெபத்துடன் கூடிய எதிர்காலமும்
தென்படுகிறது.
பொருளாதார நடவடிக்கைகள் ஐயத்தையும்
அச்சத்தையும் விளைவிக்கலாம். தேசத்தின் சமய – சமூக உறவுகளிலும் அதிக விரிசல்
ஏற்படலாம்.
ஆனால் ஒன்று நமது நம்பிக்கையாய்
இருக்கிறது:
- நமது
தேவன் உயிர்த்தெழுந்தார்
- அவரின்
ராஜ்யம் நிச்சயமானது
- அவரின்
பிரசன்னம் பின்வாங்காது.
ஆகவே நமது கரங்களை பரலோக தேவனின் கரத்தோடு
இணைத்து ஜெப ஆராதனையோடும் நம்பிக்கையோடும் 2015க் கடப்போமாக.
அனைவருக்கும் புத்தாண்டு
ஆசீர்வாதத்தைக் கொண்டு வரட்டும்.
No comments:
Post a Comment