Tuesday, June 7, 2016

இது (2015) ஒரு நல்ல ஆண்டு அல்ல

‘அன்னுஸ் ஹொர்பிலிஸை’ இப்போதுதான் முடித்திருக்கிறோம் என்று இளவரசி டயானா மரித்தபோது எலிசபெத் பேரரசியார் கூறினார். லத்தின் பதமான இதற்கு ‘பயங்கரமான ஆண்டு’ என்பது பொருள். ஆம், பலருக்கு இது (2015) ஒரு நல்ல ஆண்டு அல்ல!

ஸ்டார் ஆங்கில நாளிதளின் துணை ஆசிரியரும் ‘ஐடியா’ என்ற சமூக இயக்கததின் அதியாரியுமான சைஃபுல் வான் ஜான், 2015ம் ஆண்டில் நிகழ்ந்த காரியங்களால் மலேசியா ஒரு தவறான வீசுகோட்டில் விழுந்து விட்டதாகவும், அதனை மீட்டுக் கொள்வதற்காக அரசியல் ரீதியான சித்தம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மலேசியர்களைப் ஆழமாகப் பாதிக்கும் பல மோசமான காரியங்கள் நிகழ்ந்து விட்டன. ஆனால், நாம் முறுமுறுத்துக் கொண்டும் நம்பிக்கையிழந்தும் போகலாமா? இல்லையென்று நான் கருதுகிறேன்!

மலேசியா மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம். பல மாறுபாடுகளுக்கு மத்தியிலும் தேவன் பல நன்மைகளை இருப்பில் வைத்திருக்கிறார். 2016 உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையலாம்!

இரண்டு காரியங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்:
1)       முதலாவது, ஒவ்வொரு விசுவாசியும் வரலாற்றுக் கர்த்தா ஆவர். நீங்கள் ஜெபிக்கும் போது தேவனின் கரங்கள் அசைவாடுகின்றன. ஆகையால், ஜெபத்தை நாம் அசட்டைப் பண்ண வேண்டாம்!
2)       இரண்டாவது, உங்களுக்கும் எனக்கும் இத்தேசத்தில் கடப்பாடு உடையவர்கள். நம்மால் இத்தேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நமது சொந்த பெலத்தால் இம்மாற்றத்தைக் கொண்டு வரவியலாது. நமக்கு வல்லமை நிறைந்த பெலன் தேவைப்படுகிறது. நமது சரீர பெலத்தை விருப்பத்தோடு விட்டுக் கொடுத்தால்தான் தேவனுடைய வல்லமை செயற்படத் தொடங்கும். ஆவியால் நிறைந்திருக்கும்போது கிடைக்கும் வல்லமையைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். 

நமது இல்லம் ஆவியால் நிறைந்திருக்கும் பெற்றோர்களாலும் பிள்ளைகளாலும் நிறைந்திருக்க வேண்டும். நமது சபைகள் ஆவியால் நிறைந்திருக்கும் விசுவாசிகளால் நிறைந்திருக்க வேண்டும். நமது சமூகம் ஆவியால் நிறைந்திருக்கும் சமுதாயத்தால் தாக்கம் செய்யப்பட வேண்டும். பெந்தெகோஸ்தே மற்றும் அதன் வரலாற்றுச் சம்பவங்கள் இன்று நிகழக்கூடும்.....ஆவியால் நிறைந்திருக்கும் விசுவாசிகளால்…. அதைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தில்தான் சவால் இருக்கிறது.

தேவ ஜனங்களே, ஜெபியுங்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ஜெபத்துக்காக காத்திருக்கிறது. வரலாற்று வீரர்களின் செயல்பாடுகளுக்காக இந்தப் புத்தாண்டு காத்திருக்கிறது.


சபையே எழுந்திரு. ஆவியால் நிறைந்திருங்கள். வரலாற்றை திருத்தியமைக்கத் தயாராகுங்கள். அதன் இலக்கு தேவனுடைய சித்தத்தோடு உங்கள் கரங்களில் உள்ளது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment