Tuesday, June 7, 2016

மலேசிய நாட்டு நடப்புகள்

பெட்டாலிங் ஜெயா மெதடிஸ்ட் ஆலயத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நான் இதை எழுதுகிறேன். இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நமது தேசத்தாருக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த்து.

தலைமை பேராயராகிய ஆங்கிலிக்கன் பேராயர் அருட்பெருந்திரு எங் மூன் ஹிங் அருட்செய்தி வழங்கினார். அச்செய்தியில், அச்சத்தையும், விரக்தியையும், ஆத்திரத்தையும், அவநம்பிக்கையையும், இறுதியில் ஏமாற்றத்தையும் கொண்டு வரும் பல நாட்டு நடப்புகளைச் சுட்டிக் காட்டினார். நமது தேசம் இப்போது ஒரு பயணச் சந்திப்பை எதிர்நோக்குகிறது. ஒரு கிறிஸ்தவனின் மாறுத்திரம் என்ன?

எரேமியா 29ம் அதிகாரத்தை எடுத்து, பின்வரும் காரியங்களைச் சுட்டிக் காட்டினார்:

(a)           கிறிஸ்தவக் குடிகளாகிய நாம் இந்நாட்டின் நகரம், பட்டணம், அல்லது கிராமங்களின் நலன்களை நாட வேண்டும். சமூகத்தில் சுபீட்சம் மலர தேவையான காரியங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
(b)           நாம் அக்கறையுடன் பொல்லாங்கை நன்மையால் வெல்ல வேண்டும். இயேசுவின் நாமத்தைத் தரித்திருக்கும் நாம் இதைச் செய்யக் கூடும்.
(c)           இத்தேசம் நமக்குச் சொந்தம் என்பதால் இதன் சுபீட்சத்திற்காக ஆசி கூற வேண்டும்.


விசுவாசமிக்க கிறிஸ்தவர்களாகவும் தேச நலனுக்காக அக்கறையுடைய குடிகளாகவும் நாம் தொடர்ந்து ஜீவிப்போமாக. தேவனால் இத்தேசத்தை ஆசீர்வதிக்க முடியும்.

No comments:

Post a Comment