Tuesday, June 7, 2016

கிறிஸ்மஸ் பண்டிகையை மாறுபட்ட வகையில் கொண்டாட தேவன் நம்மை வழிநடத்துவாராக.

கடந்த வாரத்தில் நானும் என் மனைவியும் பல அற்புதமான அனுபவங்களைக் கடந்து சென்றோம். அவற்றில் முக்கியமான சில:

  1. பெட்ரா, ஜோர்டனில் கல்லில் செதுக்கப்பட்ட கூடத்தின் முன் நிற்றல்;
  2. எகிப்து, கிஸாவில் எழுச்சியூட்டும் பிரமிப்பு மிக்க பிரமிட்டைத் தொட்டல்;
  3. எகிப்தில் பழம் பெரும் நைல் நதியில் பாய்மரக் கப்பலில் பயணித்தல்;
  4. கோரையின நாணற்புல் தொழிற்சாலைக்குச் சென்று ஆதிகால ஜனங்கள் எப்படி எழுதினார்கள் என்பதைக் கற்றுக் கொள்ளல். (பல ஆதிகால வேதாகம வசனங்கள் இத்தகைய காகிதத்தில் எழுதப்பட்டவை);
  5. இஸ்ரேல் பூந்தோட்டக் கல்லறையில் நற்கருனையில் கலந்து கொள்ளல்;
  6. மறுரூப மலையில் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தாருக்காகவும் ஜெபித்தல்;
  7. கார்மல் மலையில் உங்கள் அனைவருக்கும் ஜெபித்தல். நாங்கள் சிறப்பாக மூன்று காரியங்களுக்காக ஜெபித்தோம்:
-          தேவன் வாலிபர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து எலியாவைப் போல் வாஞ்சையோடு ஜெபிக்க வழிநடத்துதல்;
-          தேசத்தைத் தாக்கம் செய்யும் அளவுக்கு உள்ளூர் சபைகளில் எழுப்புதல் ஏற்படுதல்;
-          தேவனைப் போல் நாம் பரிசுத்தமாய் ஜீவிக்கும் வாஞ்சையை நம்மில் ஏற்படுத்துதல்.

எல்லாவற்றுக்கும் மேலாக தேவன் நாம் அனைவருக்கும் பரிசுத்த ஆவியைக் கொடுத்து, உள்ளூர் சபைகள் தேசிய தன்மைகளை வெளிப்படுத்தச் செய்திருக்கிறார்.


இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை மாறுபட்ட வகையில் கொண்டாட தேவன் நம்மை வழிநடத்துவாராக.

No comments:

Post a Comment