வசிப்பிடம் இழந்த
ஜனங்கள் ஆயிரக் கணக்கில் உலகில் வாழ்கிறார்கள். – உள் நாட்டுப் போர், இன சகிப்புத்
தன்மையின்மை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவை இதில் அடங்கும். அன்மையில்
ரோஹின்யர்களின் வருகையைக் கண்டோம். இந்த ஜனங்களே அதிகமான அனுதாபத்திற்குரியவர்கள்
என்று ஓர் உள்நாட்டுப் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. தாங்கள் சொந்தம்
கொண்டாடுவதற்கு என்று நாடு இல்லாதவர்கள் இவர்கள்!
எபிரேயர்களுக்கு சொந்த
தேசம் இல்லாத காலம் ஒன்றை வேத வரலாறு குறிப்பிடுகிறது.
உண்மையில் அவர்கள் வல்லமை வாய்ந்த எகிப்து தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்தார்கள்.
தேவன் அவர்களை வல்லமையோடு வழிநடத்தி தங்கள் சொந்த தேசமாகிய கானானில் சேர்த்ததை
வேத்ததில் வாசிக்கிறோம்.
ரோஹின்யர்கள் உட்பட
சொந்த தேசம் இல்லாத ஜனங்களுக்காக ஊக்கத்தோடு ஜெபிப்பது நமது சபையின் கடமை என்று
விசுவாசிக்கிறேன். வாழ்விடம் இழந்த ஜனங்கள் மத்தியில் தேவன் பரீட்சயமானவர் என்பதை
நினைவில் கொள்ளுங்கள். தேவன் அவர்களின் கதறலைக் கேட்டு அடிமைத் தனத்தில் இருந்து
விடுவித்தார் என்பதை சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
சிநேகிதர்களே, இந்தப்
பிரச்சனையை உங்கள் சொந்த அன்றாட ஜெபத்தில் விண்ணப்பிப்பதைக் கடமையாகக்
கொள்ளுங்கள். நாம் அறிந்திராத ஜனங்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் அக்கறை
காட்டும் ஆவியைக் கொண்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment