Tuesday, June 7, 2016

நீங்கள் ஆலயத்தில் கைதிகளா?

இப்போதுதான் ‘சபையாரின் நகர்வு’ (ஆங்கிலம்) என்ற ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இப்புத்தகத்தை ஐரோப்பாவில் ஒரு மாபெரும் சபையைக் கட்டியெழுப்பிய நைஜீரிய குருவானவர் எழுதினார். ஆலயத்தின் பெயர் தேவனின் தூதரகம். அந்த குருவானவரின் பெயர் சண்டே அடெலாஜா. அவரின் ஒரு செய்தி என்னை உடனடியாகக் கவர்ந்தது. பல சபையார் ஆராதனை நாற்காலியில் கைதிகளாக இருப்பதை அவர் காண்கிறார். ஆராதனை நாற்காலிகள் சிறைச்சாலைகளாக வர்ணிக்கப்படுவதை நான் இப்போதுதான் முதன் முறையாக காண்கிறேன்! ஆனால், இதுதான் உண்மை. அந்த ஆராதனை நாற்காலிகள் தேவ ஊழியத்திற்காக சபையாரை உந்தச் செய்திருக்க வேண்டும் என்பதை உணராமல் அவர்கள் அங்கேயே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அநேகர் அங்கேயே சிக்கிக் கொள்வதை நாடுகின்றனர். அந்த ஆராதனை நாற்காலி சிறைக் கூண்டாக மாறி விட்டது.


நீங்கள் எப்படி? இயேசு எதற்காக உங்களை அழைக்கிறார் என்பதை நாடாமல் அந்த ஆராதனை நாற்காலியிலேயே காலாகாலமாக கைதிகளாக இருப்பதை விரும்புகிறீர்களா? சமூகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கும், அன்பை இழந்தவர்களுக்கும், மறக்கப்பட்டவர்களுக்கும் இயேசுவின் அன்பைக் காட்ட நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள். நம்மைச் சூழ்ந்துள்ளவர்களுக்கு இயேசுவின் அன்பு பிரவாகிக்க நம்மை நகர்த்தட்டும். அது நம்மை வாராந்திர கைதி என்ற நிலைமையில் இருந்து விடுவிக்கட்டும்! 

No comments:

Post a Comment