Sunday, June 5, 2016

தவக் காலம் (லெந்து காலம்)

கடந்த புதன் கிழமையில் இருந்து தவக் காலம் தொடங்கி விட்டது. நான் சொன்னதுபோல, முடிந்தவரை உண்மையான உபவாசத்தில் ஈடுபடுங்கள். தவக்காலம் ஆவிக்குரிய தற்பரிசோதனை செய்யும் காலம். இக்காலத்தில்தான் விசுவாசிகள் ஆவிக்குரிய மற்றும் சரீர ஜீவியத்தைப் பரிசோதித்துப் பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்: ஆவியின் பிரகாரமும் சரீர பிரகாரமும் சொந்த வளர்ச்சியை அளந்து பார்க்கும் காலம் இது.

பின்வருவன போன்ற கேள்விகளை நாம் அறிய வேண்டியதுள்ளது:
·         கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு நான் ஆவிக்குரிய வளர்ச்சி அடைந்துள்ளேனா?
·         தனிப்பட்ட தியானத்தில் நான் வளர்ச்சியடைந்திருக்கிறேனா அல்லது அவசர அலங்கோலமாக அதில் ஈடுபடுகிறேனா?
·         ஆண்டவரை விசுவாசிப்பதற்கும் முழுமையாக அவரில் சார்ந்திருந்து என் ஜீவியத்திற்கோ இயேசுவானவரைப் புரிந்து கொள்ளும் முயற்சி எளிதாக அமைகிறதா?
·         என் தொழில் சார்ந்த ஜீவியம் மேம்படைந்துள்ளதா?
·         இயேசுவானவர் என் ஜீவியத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதைப் பிறருக்குச் சாட்சியாக கூற முடிகிறதா?

வேதத்தை வாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அன்றாட கடமைகளுக்கு மத்தியில் தனிப்பட்ட தியானத்திற்கு நேரத்தை ஒதுக்குங்கள். இயேசுவானவர் உன்னைச் சூழ்ந்து வாசம் செய்கிறார் என்பதை விழிப்புடன் உணர்ந்து கொள்ள பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுங்கள்.


தேவன் நமது தவக் காலத்தை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment