Tuesday, June 7, 2016

இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை


- 5 பகுதிகளில் 5வது பாடம்
வேத பகுதி: மத்தேயு 4:1-11
------------------------------------------------------------------------------
முன்னுரை:

   நாம் புறப்பட்டுச் செல்லும் போதுசென்று வருகிறேன்என்று சொல்வோம்.

1. பிசாசு திரும்ப வருவதற்காக விலகிப் போனான்:

மத்தேயு 4:11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

   தன் கடமையை முடித்தவடன் பிசாசு இயேசுவானவரை விட்டு விலகிப் போனான்.

லூக்கா 4:13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

   லூக்கா சுவிசேஷத்தின்படி, பிசாசு மீண்டும் வருவதற்காக அவரை விட்டு விலகிப் போனான் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 12:43-45 (11:24-26-ஐயும் வாசிக்கவும்)  அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டுதிரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

   அவன் துன்மார்க்கனாகவும் பொல்லாங்கனாகவும் இருப்பதால், தன் நாச வேலை நிறைவடையும் வரை ஓயான்.

சாத்தானின் நோக்கம்
1. திருடுதல்
2. கொல்லுதல்
3. அழித்தல்
1 கொரிந்தியர் 10:12-13 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

1 பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.


மேற்கோள்:தற்காலிக கிறிஸ்தவர் முழு நேர பிசாசை விஞ்ச முடியாது”- ஆசிரியர் அறியப்படவில்லை

2. தேவ தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தனர்:

மத்தேயு 4:11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.

   வீழ்ந்து போன தூதன் விலகிப் போனவுடன் தேவ தூதர்கள் பணிவிடை செய்ய வந்தனர்.

லூக்கா 22:43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.


எபிரேயர் 1:14  இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

   படைப்புகளுக்குத் தம் சித்தத்தை நிறைவேற்ற தேவன் தம் தூதர்களைப் பயன்படுத்துகிறார்.  (அப். 8:26, 10:3, 27:23-உம் வாசிக்கவும்)

யூதா 6.1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: (????)

   நியாயத் தீர்ப்பு நாளிலே நாம் கணக்கு ஒப்புவிக்க உள்ளது போலவே தேவ தூதர்களும் அழைக்கப்படுவார்கள்.

முடிவுரை:
   இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, பிசாசால் சோதிக்கப்படும் பொருட்டு தேவ தூதர்களால் வழிநடத்தப்பட்டார்.
   பிசாசின் ஒவ்வொரு சோதனையையும் வேத வசனத்தைக் கொண்டு இயேசுவானவர் எதிர் கொண்டார்.
   இறுதியில் அவர் இந்தச் சோதனைகளை வென்று பிசாசைத் தோற்கடித்தார்.
   பிரிதொரு காலத்தில் மீண்டும் வருவதற்காக பிசாசு புறப்பட்டுச் சென்றான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
சிறு குழு கலந்துரையாடலுக்கு கேள்வி:

இந்தப் பாடங்கள் உங்கள் ஆவிக்குரிய கண்களை எவ்வாறு திறந்து, சோதனைகளை ஜெயிக்க வழிநடத்துகிறது?

No comments:

Post a Comment