Sunday, June 5, 2016

தேவன் உன்னை வழிநடத்த அவரை நேசத்தோடு நம்பியிரு!

இக்காரியங்களைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள்:
-       உலக பெட்ரோல் விலை ஒரு பீப்பாய்க்கு 180 அமெரிக்க டாலரில் இருந்து 35 டாலருக்கு ஒரே ஆண்டில் சரியும் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?
-       உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனீசியாவின் ஜாக்கர்த்தாவை ஐசிஸ் பயங்கரவாதிகள் தாக்குவார்கள் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?
-       வரலாற்றிலேயே எந்த சாதனையையும் அடையாத, தலைசிறந்த விளையாட்டாளர்களைக் கொண்டிராக லெய்சிஸ்டர் குழு ஆங்கிலேயே காற்பந்தாட்டக் குழுக்களில் முன்னணி வகிக்கும் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?
-       10 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணம் கேட்டு மலேசியரான பெனர்ட் தானின் தலையை இஸ்லாமிய பயங்கரவாதிகள் துண்டிப்பார்கள் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?
-       நாட்டை மிக மோசமாக பாதித்த புகை மூட்டப் பிரச்சனை வெறும் நினைவலைகளாக நிற்கும் என்று யாராவது சிந்தித்திருப்பார்களா?

சற்றும் எதிர்ப்பாராத காரியம் கூட நிகழக் கூடும். யாரை வேண்டுமென்றாலும் அது தாக்கக்கூடும. சிலர் இதுதான் வாழ்க்கை என்பார்கள்! எதிர்ப்பாராத காரியங்களை நாம் எப்படிச் சந்திப்பது? நிலவரங்களின் அதிரடியான மாற்றங்களை நாம் எப்படிச் சமாளிப்பது? உங்கள் ஜீவியத்தையும் ஜீவிய முறையையும் சடுதியில் புரட்டிப்போடக் கூடிய நீங்கள் என்ன செய்வீர்கள்? நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதுதான் உண்மை. அத்தோடு எல்லா நிலைமைகளையும் எதிர்க்கொள்ள நாம் ஆயத்த நிலையில் இல்லை. ஆனால், ஒரு காரியத்தைச் செய்யலாம்! தேவன் உன்னை வழிநடத்த அவரை நேசத்தோடு நம்பியிரு!

மிக எளிமையாகக் காணப்பட்டாலும் அதுதான் சத்தியம். அப்போஸ்தலர் பவுல் ரோமர் 8.28ல் பின்வருமாறு சொல்கிறார்– “….அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.


இது உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசுவானர் நமக்கு வழங்கிய தனித்துவம் வாய்ந்த பாக்கியம். ஆதலால், என்ன  சூழ்நிலையிலும் என்ன நிலைமையிலும் இயேசுவானவரைச் சார்ந்து அன்பு கூறுங்கள். அவர் நல்லவர் என்பதால் நன்மையையே செய்வார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துதித்தல் ஆராதனையில் நாம் பாடிய பாடலை நினைவு கூறுங்கள். பாதைகள் மூடப்படும்போது ஆண்டவர் வேறு பாதையைத் திறப்பார்!

No comments:

Post a Comment