Tuesday, June 7, 2016

கல்லான இருதயம்


வேத பகுதி: எபிரேயர் 3:7-8

முன்னுரை:

   நாம் இன்று முன்னேற்றகரமான மருத்துவ உலகில் வாழ்கிறோம். மனித உடல் அமைப்பைப் பற்றி மிக ஆழமாக அறிந்து வைத்திருக்கிறோம்.
   உங்களுக்குத் தெரியுமா: முதலாவது இருதய மாற்று அருவை சிகிச்சை 3 டிசம்பர் 1967ல் தென்னாப்ரிக்காவின் டாக்டர் கிறிஸிடியன் பர்னாட்டால் செய்யப்பட்டது.
   ஆயினும் ஆவிக்குரிய உள்ளத்தைசரி செய்ய மருத்துவர் யாரும் இலர்.

1. கல்லான உள்ளங்கள்
எபிரேயர் 3:7-8 - ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

   இந்த வசனம் எபிரேயரில் 3 முறை இடம் பெறுகிறது (3:7-8; 3:15, 4:7) சங்கீதம் 95:8-உம் இடம் பெறுகிறது.
   தேவனின் குரலைக் கேட்கும் பட்சத்தில் நாம் உள்ளத்தை கல்லாக்குகிறோம் என்று இது வலியுறுத்துகிறது.

1.1 கல்லாகிப் போகும் இருதய நிலம்
மத்தேயு 13:19 - ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

   பாவம் மற்றும் வேதனையான அனுபவங்கள் நிமித்தம் நமது உள்ளங்கள் கடினமாகிப் போகக் கூடும்.
   பாவத்துக்கு உள்ளத்தின் உணர்வை இழக்கச் செய்யவும் தெய்வீகக் குரலுக்கு எதிராக கடினமாக்கிப் போடவும் வல்லமை உண்டு.
   யாத்திராகம புத்தகத்தில் பார்வோனின் உள்ளம் கடினமாகிப் போவதை நாம் காண்கிறோம்.
பார்வோனின் உள்ளம் கடினப்பட்டது: à கர்த்தர் பார்வோனின் உள்ளத்தைக் கடினப்படுத்தினார்:
யாத்திராகமம் 7:13, 22; 8:15, 19, 32                                  யாத்திராகமம் 9:12; 10:20, 27



2. உணர்வற்ற இருதயம்
மாற்கு  8:17-18 - இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?

   கடினமாகிப் போகும் இருதயத்தால் ஏற்படும் விளைவுகளை இயேசுவானவர் கோடி காட்டுகிறார்.
ÿ விசுவாசமற்ற யோசனை: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன??
ÿ ஆவிக்குரிய குருட்டு: உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா?
ÿ ஆவிக்குரிய மரணம்: இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
ÿ ஆவிக்குரிய மறதி: நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?

எபிசியர் 4:18 அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;


      ஆவிக்குரிய குருட்டும் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியமும் இருதய கடினத்தின் விளைவு.
      இருதய கடினத்தில் கட்டப்படும் ஆவிக்குரிய குருட்டுத் தனமே இதற்குக் காரணம்.

3. புதிய இருதயமும் ஆவியும்
எசேக்கியேல் 36:26 - உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

      நமது குருட்டுத் தனத்தில் இருந்தும் நித்திய அழிவில் இருந்தும் தேவன் நம்மைக் கைவிட்டு விடவில்லை.
      அவர் நமது ஜீவியத்தில் ஆவிக்குரிய இருதயத்தை மாற்று சிகிச்சை செய்வதாக வாக்களித்துள்ளார்ஒரு புதிய இருதயமும் ஆவியும்.

முடிவுரை:
   கல்லான இருதயம் ஆவியின் பிரகாரம் மரித்ததாய் இருந்தாலும், தேவன் புதிய ஒன்றைத் தர சித்தமாய் இருக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------------------------
பின்வரும் பிரதிபலிப்புக் கேள்வியைக் கலந்துரையாடவும்:

1.   நமது இருதயத்தின் நிலைமையைப் பற்றி இப்பகுதி முக்கியமாக என்ன சொல்கிறது?
2. தேவனுடைய சத்தத்தைக் கேட்பதற்கும் கீழ்ப்படிவதற்கும் மேற்கொள்ளக் கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை யாவை?

No comments:

Post a Comment