வேத பகுதி: 1 கொரிந்தியர் 16:22
—————————————————————————————————————–
முன்னுரை:
சூழ்நிலையைப்
பொறுத்து, காத்திருக்கும்
காரியம் சந்தோஷத்தையோ வேதனையையோ தரக் கூடும்.
வருகையின் காலம் எதிர்ப்பார்ப்புகளுடனும் ஆயத்தங்களுடனும் காத்திருக்கும்
காலம் - கிறிஸ்து மறு அவதாரம் எடுத்து வந்ததைக் (கிறிஸ்மஸ்) கொண்டாடும் அதே
வேளையில் இறுதி காலத்தில் நியாயாதிபதியாக அவரின் இறுதி வருகைக்காகவும்
காத்திருக்கிறோம்.
ஆயினும், பெரும்பாலான
பேரங்காடிகளைப் போல, அவரின் இரண்டாம் வருகையைப் புரக்கணித்து விட்டு
கொண்டாட்டத்துக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருந்து
விடுகிறோம்.
பின்வரும்
நான்கு விதமான ஜனங்களும் மேசியாவான கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்ததையும் நாமும்
அவர்களைப் போல் காத்திருக்க வேண்டியதையும் இங்குக் கற்றுற்கொள்ளவுள்ளோம்.
வருகை 1: முற்பிதாக்கள்
எபிரேயர் 11:8-12
8 எல்லாருக்கும்
கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. 9 அன்றியும், நம்முடைய சரீரத்தின்
தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு
நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி
நடக்கவேண்டுமல்லவா? 10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய
பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச்
சிட்சிக்கிறார். 11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க்
காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான
பலனைத் தரும்.
முற்பிதாக்கள்
வாக்களிக்கப்பட்ட ஒருவருக்காக காத்திருப்பவர்களாய் நாடோடிகளாக ஜீவித்தனர்.
இந்த லோகம் நிலையற்றது என்று உணர்ந்திருந்த
அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக காத்திருந்தனர்.
அவர்கள்
செல்வச் செழிப்போடு இருந்தாலும், அதில் லயித்திருக்கலாகாது என்று நினைவுறுத்தப்பட்டனர்.
எனவே, அவர்கள் மேசியாவின்
வருகைக்காக காத்திருந்து ஜீவித்தனர். (ஆதி. 3:15;
22:18; 49:10).
வருகை 2: தீர்க்க
தரிசிகள்
ஏசாயா 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு
ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல்
என்று பேரிடுவாள்.
வேதாகம தீர்க்கதரிசிகள் மாறுமியல்புகள் கொண்ட காலத்தில் தங்கள்
தீர்க்கதரிசன கடமைகளை தங்கள் ஊழிய காலத்தில் மேற்கொண்டனர்.
ஆயினும் பலர் மேசியாவின் வருகையில் உள்ள நம்பிக்கையைப் பற்றி அவர்கள்
உபதேசிப்பதைக் காண்கிறோம்.
தங்கள் விரக்தியான நிலைமையிலும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கா
காத்திருந்தனர்.
வருகை 3: யோவன்
ஸ்நானகன்
லூக்கா 1:17
பிதாக்களுடைய இருதயங்களைப்
பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக்
கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின்
ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
மேசியாவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் பணி யோவானுக்கு அருளப்பட்டிருந்தது.
அக்காலத்தில் ஆலயத் தலைவர்கள் அவரை ஓர் அச்சுறுத்தலாக கண்டனர்.
இந்த சவால்களுக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து ஜனங்களை முன் அறிவிக்கப்பட்ட
மேசியாவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தும் கடமையை மேற்கொண்டார். (லூக்கா 1:13-17).
வருகை 4: கன்னி
மரியாள்
லூக்கா 1:30-33
தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில்
கிருபைபெற்றாய். 31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு
என்று பேரிடுவாயாக.
மரியாள் எளிய உழவரின் மகளானாலும், மனுகுலத்துக்கு தெய்வீக பரிசை ஈன்று வழங்கத்
தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
தன் சமுதாயத்தையும் யோசேப்பையும் வஞ்சித்ததாக அவள் அழுத்தங்
கொடுக்கப்பட்டாள்.
ஆயினும் அவள் பொறுமையுடன் சகித்து, மேசியாவின் பிறப்புக்காக காத்திருந்தாள்.
முடிவுரை
கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கும் தருவாயில் நம் கண்களை ஏறெடுத்து
அவருக்காக காத்திருப்போம்.
‘மாராநாதா’ – ‘ஆண்டவராகிய இயேசுவே
வாரும்’ என்று ஜெபிக்க கற்றுக் கொள்வோம். (1 கொரிந்தியர் 16:22).
—————————————————————————————————————–—
பின்வரும் பிரதிபலிப்புக் கேள்விகளைப் பற்றிக் கலந்துரையாடவும்:
1. இந்த நான்கு பாத்திரங்கள் மூலம் நீங்கள் கற்றுக் கொண்ட
பாடங்கள் யாவை?
2.
இயேசுவின்
வருகையைக் குறித்து நாம் எப்படி விழிப்புணர்ச்சியை அதிகரித்து ஆயத்தப்படுத்தலாம்?
No comments:
Post a Comment